Election Exclusive: ஆபரேசன் எடப்பாடி.. சரியஸா சின்னம்மா களம் இறங்கிட்டாங்க! அம்மா அதிமுக கன்பார்ம்! ஆனாலும் ஒரு ட்விஸ்ட்
சென்னை: தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், வி.கே. சசிகலா புதிய அரசியல் வியூகத்தை அமைக்கும் முயற்சியில் இறங்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளான வரும் 24ஆம் தேதி "அம்மா அதிமுக" என்ற புதிய கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பு வெளியாகவுள்ளது. ஆனால் அப்போதைக்கு கட்சி அறிவிப்பு மட்டும் இருக்கும் என்றும், மதுரையில் பிரம்மாண்டமாக கட்சியின் தொடக்க விழா இருக்கும் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
அதிமுக அரசியல் வரலாற்றில் முக்கிய பங்கு வகித்த சசிகலா, மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஜெயலலிதாவின் நெருங்கிய, நம்பிக்கைகுரிய தோழியாக இருந்தவர். கட்சியின் உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாக நடவடிக்கைகளில் பின்னணியில் இருந்தே அவர் செல்வாக்கு செலுத்தியது அனைவருக்கு தெரிந்தே.
இதனால் கட்சி தொண்டர்கள் ஜெயலலிதாவை "அம்மா" என்றும், சசிகலாவை "சின்னம்மா" என்றும் அழைத்தனர். 2016 டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா மறைந்ததைத் தொடர்ந்து, சசிகலா நேரடியாக அரசியல் மேடைக்கு வந்தார். 2017 பிப்ரவரியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட அவர், கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்வர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டார்.

சசிகலா
ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதால், அவர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்கு செல்லும் முன் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்று அறிவித்தது அரசியல் திருப்பமாக அமைந்தது. சிறைவாசம் முடிந்து வெளியே வந்தபின், அதிமுக அரசியல் அமைப்பு மாறிவிட்ட சூழலில் சசிகலா மீண்டும் கட்சிக்குள்ளேயே வர முடியவில்லை. அதன்பிறகு அவர் அரசியலில் இருந்து தற்காலிகமாக விலகி, ஆதரவாளர்களுடன் மட்டுமே தொடர்பில் இருந்தார்.
ஜெயலலிதா பிறந்தநாள்
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்தை பலமுறை வலியுறுத்தியிருந்தாலும், அதற்கான முயற்சிகள் பலனளிக்கவில்லை. சமீபத்தில் நடைபெற்ற அரசியல் நிகழ்வில் "தேர்தல் களத்தில் இறங்குவேன்" என சசிகலா அறிவித்தது புதிய அரசியல் மாற்றங்களுக்கு துவக்கமாக பார்க்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, அவரது சகோதரர் திவாகரன் முன்னிலையில் இயங்கிய அண்ணா திராவிடர் கழகத்தை மீண்டும் களத்துக்கு கொண்டு வரும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்று கூறப்படுகிறது.
ஜெயலலிதா பிறந்தநாள்
சசிகலா ஆதரவாளர்கள் சொன்ன தகவல்களின் படி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அன்றைய தினம் நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். தற்போது அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த கூட்டம் தென்மாவட்டங்களில் சசிகலாவின் அரசியல் வலிமையை மீண்டும் நிலைநிறுத்தும் முயற்சியாகக் கருதப்படுகிறது.
அம்மா அதிமுக
ஆனால், அன்றைய தினம் "அம்மா அதிமுக" கட்சியை தொடங்கும் அறிவிப்பு மட்டுமே இருக்கும் எனவும், மதுரையில் பிரமாண்ட மாநாடு நடத்தி, புதிய கட்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறார். மேலும், புதிய கட்சியை தொடங்கியதும் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் உடன் கூட்டணி குறித்து பேசவுள்ளதாகவும், அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தென் மாவட்டங்களில் சுமார் 25 தொகுதிகளில் ஆதரவாளர்களை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
டிடிவி தினகரன்
இதே நேரத்தில், அரசியல் போட்டிகளில் தனித்த பாதையில் செயல்பட்டு வரும் டிடிவி தினகரன் ஆதரவாளர்களில் சிலர் சசிகலா அணிக்கு திரும்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது. சசிகலாவின் வருகை நிச்சயம் தென்மாவட்ட அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். குறிப்பாக முக்குலத்தோர் வாக்குகள் பெருமளவில் சசிகலா தரப்புக்குச் செல்ல இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிமுக மட்டுமன்றி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தென் தமிழ்நாடு
சசிகலா தொடங்க இருக்கும் கட்சி தமிழ்நாடு அரசுகளில் எந்த வகையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இன்னும் தெளிவாகாத நிலையில், வரும் தேர்தலில் நிச்சயம் அதிமுக பாஜக கூட்டணிக்கு நெருக்கடி அளிப்பது தான் சசிகலாவின் திட்டம் எனவும் சொல்லப்படுகிறது. மேலும் சசிகலாவுடன் ஓ பன்னீர்செல்வமும் கைகோர்க்கமும் வாய்ப்பு இருப்பதாக சொல்கின்றனர். இது 2026 சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் அதிமுக பாஜக தரப்புக்கு மிகுந்த நெருக்கடியாக அமையும் என்கின்றனர்.
-
காட்டுமன்னார்கோவிலுக்கு கிளம்பும் திருமாவளவன்.. டெல்லி துறப்பு முடிவின் பின்னணி இதுதானா? விசிக பலே -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
வில்லிவாக்கத்தில் கொடி நாட்டுவாரா ஆதவ் அர்ஜுனா? சுத்துப் போட்ட திமுக! சூடு பிடிக்கும் களம் -
Vijay: 5 ஆண்டுகளில் விஜயின் வருமானம் எவ்வளவு? 2022ல் மட்டும் 237 கோடியா? வாயை பிளக்க வைத்த அபிடவிட் விவரம்! -
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா? -
குறுக்க இந்த கவுசிக் வந்தா.. 2026ல் டாக்டர் தனித்து போட்டி! ஏற்கனவே லைனில் சசி-அய்யா! 6 முனை போட்டி? -
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் வெளியானது.. சின்னதுரைக்கு மீண்டும் வாய்ப்பு! -
முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு? சொந்தமாக வாகனம், நகை எதுவும் இல்லை! -
2 இட்லி சாப்பிடவும் டெல்லி அனுமதி வேண்டுமா? தேசிய கட்சிகளின் பரிதாபம்! அப்ப அடுத்த முதல்வர் இவர்தானா -
நடிகர் கார்த்திக் இதுக்குதான் வர்றாரா? போயஸ் கார்டனில் இருந்து அந்த "உத்தரவு".. அலறிய முக்கிய கட்சி -
வேட்பாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. 4 நாள் லீவை விடுங்க! ‘இதை’ மட்டும் கண்டிப்பாக மறக்காதீங்க! -
என்ன விஜய் இதெல்லாம்? கம்பத்தில் கதி கலங்கிய தவெக! 'சாதி வெறியன்' என அறிவித்துக்கொண்டவருக்கு சீட்!












Click it and Unblock the Notifications