Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்பாடா.. இப்பயாவது எடப்பாடி பழனிசாமியை முந்தினாரே ஓ பன்னீர் செல்வம்.. இபிஎஸ் தரப்பு கூச்சல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிச்சாமியை, ஓ பன்னீர் செல்வம் இந்த ஒரு விஷயத்தில் முந்தியுள்ளார். இதனால் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் கூச்சல் எழுப்பினர்.

Recommended Video

    AIADMK பொதுக்குழு கூட்டம் | EPS VS OPS | Oneindia Tamil

    அதிமுக பொதுக் குழு கூட்டம் நடக்குமா நடக்காதா என தெரியாத நிலையிலும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக் குழு கூட்டம் நடைபெறுகிறது.

    இதனால் அந்த பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் பெரிய பெரிய பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா, பேனர்கள் உள்ளன. அதே போல் எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ்ஸுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்கும் பேனரும் வைக்கப்பட்டுள்ளன.

    பொதுக் குழு கூட்டம்

    பொதுக் குழு கூட்டம்

    இந்த நிலையில் இந்த பொதுக் குழு கூட்டத்திற்கு தடை விதிக்க ஓபிஎஸ் பல்வேறு அஸ்திரங்களை ஏவியும் ஒன்றுமே நடைபெறவில்லை. கடைசியாக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மேல்முறையீடு செய்தார். அப்போது ஓபிஎஸ் கையெழுத்திட்டிருந்த 23 தீர்மானங்களை தவிர்த்து வேறு எந்த தீர்மானத்தையும் கொண்டு வரக் கூடாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    ஓபிஎஸ் தரப்பு

    ஓபிஎஸ் தரப்பு

    உடனே ஓபிஎஸ் தரப்பினர் மகிழ்ச்சி அடைந்தனர். ஓபிஎஸ்ஸும் ஜரூராக பொதுக்குழு கூட்டத்திற்கு கிளம்பினார். எடப்பாடி பழனிச்சாமியை விட ஓபிஎஸ் முதல் ஆளாக பொதுக் குழு கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தடைந்தார். அவருக்கு ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பிரச்சார வேன்

    பிரச்சார வேன்

    காரில் வராமல் பிரச்சார வேனில் ஓபிஎஸ் பயணித்தபடி வந்தடைந்தார். எடப்பாடி பழனிச்சாமி தற்போதுதான் வானகரத்திற்கு கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தடைந்தார். அவருக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    ஜெ. மறைவு

    ஜெ. மறைவு

    ஜெயலலிதா மறைந்த பிறகு ஓபிஎஸ் எடப்பாடி தரப்பால் ஓரங்கட்டப்படுகிறார் என சொல்லப்பட்டது. மேலும் அண்மைக்காலமாக ஓபிஎஸ்ஸின் கை ஓங்கவில்லை, எடப்பாடி பழனிச்சாமி வைத்ததே சட்டமாக இருந்தது. எடப்பாடி பழனிச்சாமிக்கு பலத்த ஆதரவு இருக்கும் நிலையில் ஓபிஎஸ் எடப்பாடியை காட்டிலும் முதல் ஆளாக விழாவுக்கு வந்ததால் ஓபிஎஸ ஆதரவாளர்கள் சற்று மகிழ்ச்சியாக உள்ளனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+