Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அய்யய்யோ..ஓபிஎஸ்-க்கா இப்படி ஒரு நிலைமை.. ஓபிஎஸ் எப்படி தாங்குவாரோ? நாஞ்சில் சம்பத் ரத்த கண்ணீர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது குறித்து அக்கட்சியின் முன்னாள் கொள்கை பரப்பு செயலாளரும் திராவிடர் இயக்க பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் கடும் அதிர்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

Recommended Video

    AIADMK பொதுக்குழு கூட்டம் | Court case -> பொதுக்குழு என்ன நடந்தது? |Oneindia Tamil

    சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு நடைபெற்று வருகிறது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தை முன்வைத்து மிகப் பெரும் மோதல் நிகழ்ந்து வருகிறது. சென்னை உயர்நீதிமன்ற தலையீட்டைத் தொடர்ந்து இன்று பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.

    Nanjil Sampath comments on AIADMK cadres oppose to OPS in General Council meeting

    இந்தக் கூட்டத்தில் புதிய தீர்மானங்கள் நிறைவேற்ற சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இருந்தபோதும் எடப்பாடி பழனிசாமி தரப்பு, பொதுச்செயலாளர் பதவி குறித்து விவாதித்து வாக்கெடுப்பு மட்டும் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் அதிமுக பொதுக்குழு நடைபெறும் வானகரம் மண்டபத்துக்கு சென்றார் ஓபிஎஸ். ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவாளர்கள் யாருமே ஓபிஎஸ்ஸை வரவேற்கவில்லை. ஓபிஎஸ் வாகனத்தைக் கூட பொதுக்குழு மண்டபத்துக்குள் அனுமதிக்கவும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மறுத்துவிட்டனர். ஓபிஎஸ்ஸை கட்சியில் இருந்தே நீக்க வேண்டும் என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

    இது தொடர்பாக அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்தவரும் தற்போது திராவிடர் இயக்க பேச்சாளராக வலம் வரும் நாஞ்சில் சம்பத் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கூறியதாவது: ஓபிஎஸ் என்பவர் 3 முறை இந்த மண்ணின் முதல்வராக மகுடம் சூட்டப்பட்டவர். ஜெயலலிதாவால் மகுடம் சூட்டப்பட்டவர். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பை வெற்றிகரமாக நடத்தியவர். அவருக்கே இந்த நிலையா? அண்ணன் ஓபிஎஸ் இதனை எப்படித்தான் தாங்குவாரோ?

    அன்வர் ராஜாவை, பெங்களூர் புகழேந்தியை, ஓ. ராஜாவை கட்சியைவிட்டு நீக்க கையெழுத்து போடுவதற்கு முன்னர் ஓ.பன்னீர்செல்வம் யோசித்திருக்க வேண்டும்.. இப்போது எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவமானங்களை எதிர்கொண்டிருக்கிறார் ஓபிஎஸ் என்றார் நாஞ்சில் சம்பத்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+