Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராஜ்யசபா எம்.பி. பதவிகளுக்கான தேர்தல்- வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது- அதிமுக வேட்பாளர்கள் யார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு நடைபெறும் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் இன்று அறிவிக்கப்படக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ராஜ்யசபாவில் தமிழகத்துக்கு 18 எம்.பிக்கள் பிரதிநிதித்துவம் உள்ளது. இவர்களில் தி.மு.க.வின் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், அ.தி.மு.க.வின் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், நவநீதகிருஷ்ணன்,விஜயகுமார் ஆகியோரது பதவி காலம் ஜூன் 29-ல் முடிவடைகிறது. அதேபோல் 14 மாநிலங்களில் 51 எம்.பிக்களின் பதவிகாலமும் நிறைவடைகிறது.

வேட்புமனுத் தாக்கல்

வேட்புமனுத் தாக்கல்

இதனையடுத்து காலியாகும் 57 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு ஜூன் 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று முற்பகல் 11 மணிக்கு தொடங்கியது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தேர்தல் அதிகாரிகள் அறையில் காலை11 முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். பொது விடுமுறை நாளான 28-ந் தேதி, மற்றும் 29-ந்தேதி தவிர்த்து மே 31-ந் தேதி மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

ஜூன் 10-ல் தேர்தல்

ஜூன் 10-ல் தேர்தல்

ராஜ்யசபா தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 1-ந்தேதி நடக்க இருக்கிறது. வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான ஜூன் 3 கடைசிநாள். காலியாக உள்ள 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு 6 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தால் இந்தத் தேர்தலில் போட்டி இருக்காது. கூடுதலாக மனுத்தாக்கல் செய்யப்பட்டால் மட்டுமே ஜூன் 10-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டு மாலையில் வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

காங்.-ல் போட்டி

காங்.-ல் போட்டி

சட்டசபையில் உள்ள எம்.எல்.ஏக்கள் பலத்தின் அடிப்படையில் திமுகவுக்கு 4 ராஜ்யசபா எம்.பி. இடங்கள் கிடைக்கும். இதில் 3 இடங்களை திமுகவும் ஒரு இடம் காங்கிரஸுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுகவின் தஞ்சை கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், கிரிராஜன் ஆகியோர் ராஜ்யசபா எம்.பி. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியில் ப.சிதம்பரம், கே.எஸ்.அழகிரி ஆகியோரிடையே போட்டி நிலவுகிறது.

அதிமுக குழப்பம்

அதிமுக குழப்பம்

அதிமுகவுக்கு 2 ராஜ்யசபா இடங்கள் கிடைக்கும். இந்த 2 இடங்களுக்கான வேட்பாளர்களை அறிவிப்பதில் அக்கட்சியில் குழப்பம் நீடிக்கிறது. அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஒருவருக்கும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் ஒருவருக்கும் தலா ஒரு ராஜ்யசபா சீட் வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், பா.வளர்மதி, கோகுல இந்திரா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, இன்பதுரை உள்ளிட்ட பலரும் ராஜ்யசபா சீட் கேட்டு முட்டி மோதுவதால் யாரை அறிவிப்பது என்கிற குழப்பம் நீடிக்கிறது. அனேகமாக இன்று ராஜ்யசபா வேட்பாளரை அதிமுக அறிவிக்கக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+