சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்- நினைவுகளை யார் அழிப்பார்? -சுப. வீரபாண்டியன்

Google Oneindia Tamil News

சென்னை: முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாளை பேராசிரியர் சுப. வீரபாண்டியன் தமது சமூக வலைதளப் பக்கங்களில் நினைவுகளை யார் அழிப்பார்? என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளார்.

பேராசிரியர் சுப. வீரபாண்டியனின் பதிவு:

Prof. Subavee writes on Mullivaikkal genocide Day

மே 18 -

முள்ளிவாய்க்காலில் ஓர் இனப்படுகொலை
முற்றி வெடித்த நாள்!
திட்டமிட்டும் கட்டமைத்தும் நடந்த
இனப்படுகொலையின் இறுதிநாள்!

மே 18 -

புலிகளின் துப்பாக்கிகள் மௌனித்த நாள்
மவுனத்தின் அலறல் கேட்டும் உலக நாடுகளின்
செவிப்பறைகள் செவிடாகிப்போன நாள்!

புலிகள் -
மூன்று தலைமுறையாய்க் களத்தில் நின்றார்கள்
மூன்று படைகளையும் தம் வசத்தில் கொண்டார்கள்!
புலிகளின் புகழ்
உலகெங்கும் எழுந்தது ! அதனால்
உலகின் பார்வை அவர் மேல் விழுந்தது

ஒரு தேசம் விடுதலை பெற்றால்
உலகெலாம் விடுதலைப் போர் எழும் என்பதால்
உலக நாடுகள் ஒருங்கிணைந்து
ஒடுக்கி அழித்தன நம் இனத்தை!

Prof. Subavee writes on Mullivaikkal genocide Day

ஆண்டுகள் 12 கடந்து போயின

ஆயினும் ஆறாத ஆயிரம் ரணங்கள்!
நினைவுத் தூணையும் நேற்று அழித்தனர்.
நினைவுத் தூண்களை அழிக்கலாம்
நினைவை யாரால் அழித்திட முடியும்?

English summary
Prof. Subavee wrote on Mullivaikkal genocide Day May 18.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X