சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மசூதிகள், தேவாலயங்களை புனரமைக்க ரூ.12 கோடி நிதி: பட்ஜெட்டில் அறிவித்த பிடிஆர்

Google Oneindia Tamil News

சென்னை: கோயில்களை போல தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், தர்காக்களை பழுது பார்க்கவும் புனரமைப்பதற்காகவும் இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து உள்ளார்.

கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்த மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது.

அன்று நடந்த சம்பவம்.. இந்திய வரலாற்றில் முதல்முறை.. 2 அன்று நடந்த சம்பவம்.. இந்திய வரலாற்றில் முதல்முறை.. 2

இந்த நிலையில், நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இன்று சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் 2022 - 2023 நிதியாண்டிற்கான காகிதம் இல்லா முழு நீள பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

 சிறுபாண்மை நலத்துறை

சிறுபாண்மை நலத்துறை

அதில் வரும் நிதியாண்டில் தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு துறைகளின் கீழ் மேற்கொள்ளப்பட இருக்கும் பணிகள் மற்றும் திட்டங்களுக்கான நிதியை அவர் அறிவித்துள்ளார். அதன் படி சிறுபாண்மை நலத்துறைக்கான திட்டங்கள் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள பட்ஜெட் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளன.

 ரூ.1,230.37 கோடி ஒதுக்கீடு

ரூ.1,230.37 கோடி ஒதுக்கீடு

2022 - 2022 நிதியாண்டில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதற்காக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறைக்கு ரூ.1,230,37 கோடி நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கி இருப்பதாக இன்றைய பட்ஜெட் உரையின்போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.

மசூதிகள், தேவாலயங்கள், தர்காக்களை புனரமைக்க நிதி

மசூதிகள், தேவாலயங்கள், தர்காக்களை புனரமைக்க நிதி

கோயில்களை போல தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் தர்காக்களை புனரமைக்கவும், பழுது பார்க்கவும் ரூ.12 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாக அவர் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்து உள்ளார். அதன்படி சென்னை உள்ள பழமையான வெஸ்லி தேவாலயம், நெல்லை உள்ள புகழ்பெற்ற கால்டுவெல் தேவாலயம், சென்னையில் உள்ள பழமையான நவாப் வாலாஜா பள்ளிவாசல், பழமையான ஏர்வாடி தர்கா மற்றும் நாகூர் தர்கா ஆகிய சிறுபாண்மையினரின் வழிபாட்டுத் தலங்கள் புனரமைக்கப்படும் என அவர் அறிவித்து உள்ளார்.

கோயில்களை புனரமைப்பு ரூ.100 கோடி நிதி

கோயில்களை புனரமைப்பு ரூ.100 கோடி நிதி


கோயில்களை பொறுத்தவரை 1,000 ஆண்டுகளுக்கு பழமையான ஆலயங்களை புனரமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும்,
2022 - 2023 நிதியாண்டில் இந்து சமய அறநிலையத்துறைக்காக ரூ.340.87 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையில் குறிப்பிட்டு இருக்கிறார்.

English summary
Finance Minister Palanivel Thiagaran has said that Rs 12 crore has been allocated in this year's budget for the repair and reconstruction of churches, mosques and dargahs like temples.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X