பிண அரசியல் பண்ண வந்தீங்களா? விளாத்திகுளம் மாணவி வீட்டுக்கு சென்ற ஆதவ் அர்ஜுனா விரட்டியடிப்பு?
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தத்தில் பிளஸ் டூ மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, மாணவியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற வந்த ஆதவ் அர்ஜுனாவுக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், மாணவியின் மரணத்தை வைத்து அரசியல் செய்யாதீர்கள் எனவும் ஊர் மக்கள் ஆவேசமாகினர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு காட்டுப் பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனையடுத்து கொலையாளிகளை பிடிக்க பத்து தனி படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் மாணவியின் பெற்றோரை சந்தித்து அரசியல் கட்சியினர் ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அக்கட்சியின தேர்தல் மேலாண்மை செயலாளர் ஆதவ் அர்ஜுனா வருகை தந்து பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

20 நிமிடங்களுக்கு மேலாக அவர்கள் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறிக் கொண்டிருக்கும் பொழுது வெளியே கிராம மக்கள் யார் இவர்? எதற்காக இங்கே வந்துள்ளார்? நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொழுது எங்கே சென்றார்? மாணவியின் மரணத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என கிராம மக்கள் ஆவேசம் அடைந்தனர். மேலும் செய்தியாளர் சந்திப்பு நடத்த இருந்த பொழுது ஊர் மக்கள் கூச்சலிட்டதால் அவர் அங்கிருந்து தனது ஆதரவாளர்களுடன் கிளம்பிச் சென்றார்.
மேலும் விஜய் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தரும் பொழுது மாணவியின் பெற்றோரை சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியின் இளைய மகள் குறுக்கு சாலையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மாணவி 4 நாட்களுக்கு முன் வேடநத்தம் கிராமம் காட்டுப் பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்த நிலையில் உடலில் பல்வேறு இடங்களில் காயங்களுடன் சடலமாக கிடந்தார்.
இதன் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த அதிர்ச்சி சம்பவத்தை தொடர்ந்து கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் வேடநத்தம் கிராமத்தில் சாலை மறியல் போராட்டத்தில் இரவு முழுதும் ஈடுபட்டனர்.. இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதிக்கு விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் மாணவியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினார்.. இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவின் பேரில் 6 க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், மேலும், கூடுதலாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், குற்றவாளியை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கும் வரை மாணவியின் உடலை வாங்க மாட்டோம் எனவும், உடனடியாக குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் மற்றும் அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் தூத்துக்குடி -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 4 நாட்களாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே -
தவெக சார்பாக களமிறங்கும் அன்புச்செழியன் மகன்.. மதுரை மத்திய தொகுதியில் விவேக் அன்புச்செழியன்? -
பெரம்பூரில் விஜய் வெல்வாரா? ‘ஒன் இந்தியா' நேரடி கள ரிப்போர்ட்.. மக்கள் யார் பக்கம்? வீடியோ -
கட்டம் கட்டிய திமுக.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை.. கலங்கி வீடியோ வெளியிட்ட தவாக வேல்முருகன் -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
தேதி குறிச்சாச்சு.. மேடையேறும் விஜய்.. மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
என்னது நாங்க தவெகவை கூட்டணிக்கு அழைத்தோமா.. கடுகடுத்த செல்லூர் ராஜூ -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக்














Click it and Unblock the Notifications