கரூர் கேஸ்.. விஜய்க்குத்தான் பெரிய பின்னடைவு.. நீதிபதி கேட்ட வலுவான கேள்விகள்.. தடுமாறும் தவெக
சென்னை: கரூர் தவெக கூட்டத்தில் 41 பேர் பலியான நிலையில் அது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டது. கரூர் 41 பேர் பலியான வழக்கில் தவெக மதியழகன், பவுன்ராஜ் கைதாகி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் இன்று தவெகவிற்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டது.
கைது செய்யப்பட்ட மதியழகன், பவுன்ராஜ் ஆகியோர் கரூர் நீதிமன்றத்தில் இன்று வாதம் வைத்தனர். ஏற்கனவே கரூர் துயரச் சம்பவ வழக்கில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார். விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தவெகவிற்கு பின்னடைவு
இந்த வழக்கில் இன்று தவெகவிற்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டது. வழக்கில் இன்று வைக்கப்பட்ட வாதங்கள் என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்.
தவெக தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், எங்களுக்கு தான் அதிக வருத்தம், விஜய் அதனால் தான் வரவில்லை. எங்களை நம்பி வந்தவர்கள் உயிரிழந்துவிட்டார்கள், அந்த வருத்தத்தால் தான் விஜய் வரவில்லை. இவ்வளவு பெரிய கூட்டம் வரும் என்று நாங்களே எதிர்பார்க்கவில்லை. நாங்கள் கட்சிக்காரர்களை தடுக்கலாம், மக்களை தடுக்க வேண்டியது போலீஸ்தான். சாலை நடுவே உள்ள சென்டர்மீடியனை எடுத்து கொடுத்திருந்தால் பரப்புரை சுலபமாக இருந்திருக்கும்.
அரசியல் காரணங்களுக்காக எங்களுக்கு எதிராக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. அரசியல் காரணங்களுக்காக பழிவாங்குகிறார்கள். நாங்கள் முறையாக விதிகளை பின்பற்றினோம். கூட்டத்தில் சட்ட விரோதிகள் நுழைந்துவிட்டனர். ஆம்புலன்ஸ் வர வேண்டிய அவசியம் இல்லை. நோயாளிகள் இல்லாத நேரத்தில் ஆம்புலன்ஸ் உள்ளே வந்தது.
சம்பள நாள் என்பதால் யாரும் கூட்டத்திற்கு வரமாட்டார்கள் என்று கணித்தோம் . சனிக் கிழமை சம்பள நாள். அதனால் யாரும் கூட்டத்திற்கு வரமாட்டார்கள். கட்சிக்காரர்களை நாங்கள் தடுக்கலாம்.. மக்களை தடுக்க வேண்டியது போலீஸ்தான், என கணித்தோம் என்று தவெக தரப்பு மழுப்பலான வாதத்தை கோர்ட்டில் வைத்து உள்ளது.
போலீஸ் வைத்த வாதம்
தமிழ்நாடு காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் வாதம் வைக்கப்பட்டது. அதில், கால தாமதமாக வந்தது மட்டும் இன்றி, விஜய் வாகனம் ராங் ரூட்டில் வந்தது. பரப்புரை கூட்டத்தில் விஜய் பேசும்போது இரண்டு ஆம்புலன்ஸ்கள் வந்தது. விஜய் கேரவனுக்குள் சென்றதும் கூட்ட நெரிசலுக்கு காரணம்.
சொன்ன நேரத்திற்கு விஜய் வந்திருந்தால் கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்காது. விஜய் சொன்ன நேரத்திற்கு வராததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. சொன்னபடி 3 மணிக்கே வந்திருந்தால் கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்காது. கூட்டம் அளவு கடந்து சென்றதும் பேருந்தை முன்பாகவே நிறுத்தி பேசச் சொல்லி நாங்கள் கூறினோம். இன்னும் முன்னே செல்ல வேண்டும் என ஆதவ் அர்ஜுனா அதை மறுத்துவிட்டார்
அனுமதி பெறும்போது வேலுச்சாமிபுரம் இடம் திருப்தியாக உள்ளது என புஸ்ஸி ஆனந்த் கூறினார். அப்போதே வேண்டாம் என சொல்ல வேண்டியது தானே?, என்று குற்றச்சாட்டுகளை வைத்தது.
நீதிபதிகள் கண்டிப்பு
இதில் நீதிபதிகள் தரப்பு தமிழக வெற்றிக் கழகத்தை கண்டித்ததோடு, அவர்களுக்கு கடுமையான கேள்விகளையும் எழுப்பியது. அதில், கூட்டம் அளவை கடந்து சென்றது என்று தெரிந்தும் நிர்வாகிகள் ஏன் பிரசாரத்தை நிறுத்தவில்லை. உங்கள் கட்சித் தலைவரை முதலமைச்சர் உடனோ மற்ற கட்சித் தலைவர்களுடனோ ஒப்பிட வேண்டாம். அவர் டாப் ஸ்டார். பெண்கள், குழந்தைகள் அதிகம் வருவார்கள். நீங்கள் 10,000 என்று கணித்ததே தவறு. அனுமதி பெறும்போது வேலுச்சாமிபுரம் இடம் திருப்தியாக உள்ளது என புஸ்ஸி ஆனந்த் கூறினார். அப்போதே வேண்டாம் என சொல்ல வேண்டியது தானே? இபிஎஸ்-க்கு வருவது கட்சிக் கூட்டம்; விஜயை பார்க்க அனைத்து தரப்பினரும் வருவார்கள். குழந்தைகள் கண்டிப்பாக வருவார்கள். அதற்குத் தகுந்த இடத்தை நீங்கள் கேட்டிருக்க வேண்டும்.
தமிழக அரசிடம் 10 ஆயிரம் பேர்தான் வருவார்கள் என்று புஸ்ஸி ஆனந்த் எப்படி சொன்னார். எதை வைத்து 10 ஆயிரம் பேர்தான் வருவார்கள் என்று சொன்னீர்கள்? விஜய்க்கு இது தெரியுமா? அதிக கூட்டம் வரும் என்று விஜய்க்கு தெரியுமா தெரியாதா? சொல்லுங்க? மைதானம் போன்ற பகுதியை ஏன் கேட்கவில்லை.
நீங்கள் கேட்ட 3 இடமுமே பத்தாது. காலாண்டு விடுமுறை, வார விடுமுறை நாள் என்றபோதும், மக்கள் ஏன் குறைவாக வருவார்கள் என்று எப்படி கணக்கிட்டீர்கள்? என கரூர் நீதிமன்ற நீதிபதி பரத் குமார் கேள்வி எழுப்பினார்.
-
ஆதவ் அர்ஜுனாவுக்கு ஸ்பெஷல் ஐட்டம்.. வில்லிவாக்கத்தில் களமிறங்கும் சபரீசனின் வலதுகரம் -
சிவகார்த்தி, அஜித் குடும்பம் பத்தி தவெகவினர் இழிவா பேசினப்ப எங்கிருந்தீங்க - விஜய்யை விளாசிய சீமான் -
விட்டு கொடுக்காத திமுக.. விஜய்யுடன் நேருக்கு நேர் போட்டி.. பெரம்பூர் சிட்டிங் எம்எல்ஏக்கு வாய்ப்பு -
அஜித்தை உள்ளே இழுத்த சீமான்! பொன்ராஜ் விஷயத்தில்.. விஜய்க்கு ஆதரவளிக்காததற்கு காரணம் இதுதான் -
விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! திமுகதான் காரணமா? பெரம்பூர் தொகுதி தேர்தல் அலுவலர் விளக்கம் -
பெரம்பூரில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. காரணம் என்ன? தவெக பரபர ஆலோசனை! -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
விஜய் பற்றிய சர்ச்சைகளுக்கு, வாணி போஜன் சொன்ன அந்த வார்த்தை.. ஓபனா பேசிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ் -
மோசமான ப்ரொபோசல்.. மிஸ் ஆன விஜய் படம்.. தலையெழுத்து படி தான் நடக்கும்.. நடிகர் அப்பாஸ் உருக்கம் -
எல்லாமே பொய்! விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்! பர்சனல் விஷயத்தை ஓபனாக பேசிய ரம்பா! வதந்திகளுக்கு பதிலடி -
பாஜக பெயரை சொல்லவே சாகிறார்.. இவரா முதலமைச்சர்.. விஜய்யை வெளுத்து வாங்கிய கீதா ஜீவன்












Click it and Unblock the Notifications