கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"மாமனாரின்" ஆபாசங்கள்.. இரும்பு கேட்டை பிடித்து.. கதறிய விதவை பெண்.. கலங்கிய கலெக்டர் ஆபீஸ்

மாமனார் பாலியல் தொல்லை குறித்து பெண் ஒருவர் கலெக்டரிடம் புகார் தந்துள்ளார்

Google Oneindia Tamil News

கடலூர்: தன்னுடைய ஆசைக்கிணங்கவில்லை என்பதற்காக, இரும்பு கேட்டில் என் தலையை பிடித்து இடித்து சித்ரவதை செய்கிறார் என் மாமனார்" என்று பெண் ஒருவர் கலெக்டரிடம் மனு தந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மாவட்டந்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடந்து வருவது வழக்கமான ஒன்று.. பெரும்பாலும் இந்த கூட்டங்களில் விவசாயிகள் தங்கள் பிரச்சனையை மனுஅளித்து புகார் சொல்வார்கள்.

தமிழகத்தில் மெல்ல பரவும் கொரோனா..1 லட்சம் இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம் தமிழகத்தில் மெல்ல பரவும் கொரோனா..1 லட்சம் இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம்

சில சமயம் பொதுப்பிரச்சனைகளையும் கொண்டு வருவார்கள்.. மகன்கள் இருந்தும் தனித்து ஆதரவற்று விடப்பட்ட நிலையில், எத்தனையோ வயதான பெற்றோர்கள் கதறி அழுதும் மனு தருவார்கள்.

புற்றுநோய்

புற்றுநோய்

அந்த வகையில், கடலூரில் நடந்த கூட்டத்தில், 35 வயது நிரம்பிய ஒரு பெண் புகார் மனுவுடன் வந்திருந்தார்.. அந்த புகார் மனு இதுதான்: "ஐயா, எனது கணவர் கார்த்திகேயன் ஆறு மாதங்களுக்கு முன்பாக புற்றுநோய் காரணமாக இறந்து விட்டார். அது முதல் என் கணவர் வீட்டில் எனது 3 குழந்தைகளுடன் வசித்து வந்தேன். இந்த நிலையில் என் கணவரின் தந்தை மாமனார் சுந்தரமூர்த்தி எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். என்னோடு இணங்கி இணக்கமாக இருந்தால் உன்னை ராணி போல் வாழவைப்பேன் இல்லை எனில் உன்னையும் உன் குழந்தையும் கொன்று விடுவேன் என்று மிரட்டினார்.

 இரும்பு கேட்

இரும்பு கேட்

இரவு நேரங்களில் போன் செய்து மிகவும் அறுவருக்கத்தக்க வார்த்தைகளால் என்னை திட்டினார். இதனை நான் என்னுடைய செல்போனில் பதிவு செய்து வைத்து உள்ளேன். இது சம்மந்தமாக கடந்த 08.04.2022- அன்று நெல்லிக்குப்பம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என் மாமனார், அவரது ஆசைக்கிணங்கவில்லை என்று என் தலையினை பிடித்து இரும்பு கேட்டில் இடித்ததால் என் தலையில் இருந்து ரத்தம் கொட்டியது நான் கடலூர் அரசு மருத்துவமனைக்கு சென்றேன். மேலும், 19.05.2022 அன்று காவல்துறை கண்காணிப்பு அலுவலகத்தில் புகார் ஒன்று கொடுத்தேன்.

 பாலியல் தொல்லை

பாலியல் தொல்லை

அவர்கள் புகார் பதிவு செய்து பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். என்னையும் பண்ருட்டி மகளிர் காவல் நிலையம் செல்லுமாறு கூறினார்கள். நானும் பண்ருட்டி சென்று மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால், காவல்துறை ஆய்வாளர், பாலியல் தொல்லை கொடுத்தார் என்பதற்கு சாட்சி இருக்கிறதா என்று கேட்டார். மேலும், அவர் மீது எந்தவித போ நான் கூப்பிடும் போது வா என்று கூறி அனுப்பி வைத்தனர். எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக இது குடும்ப சண்டை நீ வீட்டிற்கு செல் என்று கூறிவிட்டார்.எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நான் பெண் என்று கூட பார்க்காமல் சாட்சி இருக்கிறதா என்று மட்டும் கேட்கிறார்.

நெல்லிக்குப்பம்

நெல்லிக்குப்பம்

பின்னர் எனது எனது மாமனார் ''நெல்லிக்குப்பம் காவல்நிலையத்தில் ரூபாய். 25,000 கொடுத்துவிட்டேன், என்னை உன்னால் ஒன்னும் புடுங்க முடியாது'' என்று மிரட்டுகின்றார். எனது கணவர் மர இழைப்பகம், Mahindra Van, Omine Van போன்ற வாகனங்கள் வைத்திருந்தார். அவரது தந்தைபெயரிலே வைத்து இருந்தார். இவை அனைத்தையும் எனது மாமனார் விற்பனை செய்து அந்த பணம் முழுவதையும் எடுத்துக்கொண்டார். எனக்கும், எனது பிள்ளைகளுக்கும் ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. நாங்கள் உணவுக்கே மிகவும் கஷ்டப்படுகிறோம்.

கவாஸ்கர்

கவாஸ்கர்

அவரே எனது மாமா மற்றும் மருமகன்கள், பொண்ணப்பன், ஜெகன், மைத்துனர் செந்தில் ஆகியோரும் என் மாமனாருக்கு இணக்கமாக போகவில்லை என்பதால் பாத்திரங்களை வெளியே தூக்கி போட்டு விடுவேன் என்றும் மிரட்டுகின்றனர். இப்பொழுது எங்கள் ஊரின் முன்னாள் கவுன்சிலர் கவாஸ்கர் மற்றும் அவரது அப்பா சீத்தாராமன் ஆகியோர் எனது மாமனாருடன் சேர்ந்து என்னை மிகவும் மிரட்டுகின்றனர். மேலும், கந்துவட்டி சீத்தாராமன் என்பவர், மாமனாருக்கு 5 லட்சம் பணம் கொடுத்ததாகவும் அந்த பணத்தை நீ கொடு இல்லை என்றால் இந்த ஊரில் இருக்க முடியாது, என்னை மீறி உன்னால் ஒன்னும் புடுங்க முடியாது என்று சீத்தாராமன் என்னை மிரட்டுகிறார்.

சீத்தாராமன்

சீத்தாராமன்

சீத்தாராமன் மிகவும் பணபலம் படைத்தவர், அடியாட்கள் அதிகம் அவரிடம் உள்ளது. எனவே, எனக்கும் எனது குழந்தைகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்பதை உணருகிறேன். ஆனால், எனது மாமனார் சீத்தாராமனிடம் 1 ரூபாய் கூட வாங்கவில்லை. எனவே மீதம் இருக்கும் எனது ஒரு வீட்டை அபகரிக்கவே சீத்தாராமன் இப்படி எனக்கு தொல்லைக் கொடுக்கிறார். சாப்பாட்டுக்கே வழி இல்லாத என்னிடம் எனது மாமனார் வாங்கியதாக கூறும் பொய் கடன் 5 லட்சம் பணம் கேட்டால் நான் எப்படி கொடுப்பேன் எனக்கு சம்மந்தமில்லாத இப்பிரச்சனையை எனது மாமனார் ஏற்படுத்தியுள்ளார்.

 3 மகள்கள்

3 மகள்கள்

எனது மாமனார் பாலியல் தொல்லை ஒருபுறமும் சீத்தாராமனின் பொய் கடனான 5 லட்சம் பணம் கேட்கும் தொல்லை மறுபுறமும் இருக்கிறது. ஒரு பெண் என்றும் பார்க்காமல் என்னை இவ்வாறு கொடுமை செய்யும் சுந்தரமூர்த்தி, சீத்தாராமன், பொன்னப்பன், ஜெகன், செந்தில் இந்த ஐந்து பேரிடம் இருந்து என்னையும் எனது குழந்தைகளையும் காப்பாற்றுமாறும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்'' என்று கூறியிருந்தார்.

 கதறிய பெண்

கதறிய பெண்

அப்போது பாதிக்கப்பட்ட பெண்ணுடன், இந்த கூட்டத்துக்கு அவரது மகள்களும் வந்திருந்தனர்.. "என் அப்பா இறந்த பிறகு, என்னுடைய தாத்தா தொடர்ந்து அம்மாவுக்கு பல்வேறு விதமாக பாலியல் தொந்தரவு செய்கிறார்.. அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது.. என் அம்மாவுக்கு பாதுகாப்பு கொடுங்கள் என்று கதறினார்.. அந்த பெண் அழுதது அங்கிருந்தவர்கள் மத்தியில் கண்ணீரை வரவழைத்தது.. இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

English summary
widowed woman gave complaint against her father in law to the collectors office
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X