சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவு வெளியாக தாமதம்..கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி புதிய உத்தரவு
சிபிஎஸ்இ தேர்வு முடிவு வெளியாகும் முன்பே மாணவர் சேர்க்கையை முடித்துக் கொள்ள கூடாது என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது.
டெல்லி: சிபிஎஸ்இ மாணவர்களுக்கு கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உரிய அவகாசம் தர வேண்டும் என
நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு யூஜிசி உத்தரவிட்டுள்ளது. சிபிஎஸ்இ தேர்வு முடிவு வெளியாகும் முன்பே மாணவர் சேர்க்கையை முடித்துக் கொள்ள கூடாது என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 20ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. பொறியியல் கலந்தாய்வுக்கு மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். 1.65 பேர் விண்ணப்பித்துள்ளதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு, அதன்பின்னர் 5 நாட்களுக்கு கல்லூரிகளில் சேர அந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்காக அரசு, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கு ஏதுவாக, 5 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஏற்கனவே அறிவித்துள்ளார்.
எனவே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கின்ற கடைசி நாள் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளைப் பொருத்தே அமையும் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாக இன்னும் ஒருமாத காலம் தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உரிய அவகாசம் தர வேண்டும் யுஜிசி வலியுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு யூஜிசி உத்தரவிட்டுள்ளது. சிபிஎஸ்இ மாணவர்களுக்கு சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில் பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications