டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஐபோன் யூஸ் பண்றீங்களா.. மத்திய அரசு வார்னிங்.. எந்த சீரிஸ் போன்களுக்கு, ஏன் தெரியுமா?

2013 ஆண்டு வெளியான ஐபோன் 5s வழக்கொழிந்துவிட்டதாக சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.

Google Oneindia Tamil News

டெல்லி: பழைய ஐபோன்களை பயன்படுத்தும் பயன்பாட்டாளர்கள் 15.5.3 Apple iOS பதிப்பை அப்டேட் செய்வதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்த பயனாளர்கள் அதிக ஆபத்தில் இருக்கிறார்கள் என்று இந்திய அரசு எச்சரித்துள்ளது.

இன்று வரையில் ஆப்பிள் ஐபோன்கள், டேப்லெட்கள், லேப்டாப்கள் என அனைத்தும் விலையுயர்ந்ததாகவும், புகழ்பெற்றிருப்பதற்கும் காரணம் இந்நிறுவனத்தின் பாதுகாப்பு அம்சம்தான். வெளியிலிருந்து யாரும் இந்த சாதனங்களை 'ஹாக்' செய்து இதிலிருக்கும் தகவல்களை திருட முடியாது என்பதால்தான் இந்த அளவுக்கு 'ஆப்பிள்' சாதனங்கள் புகழ்பெற்று இருக்கின்றன. இந்நிலையில், இந்த பாதுகாப்பு அம்சத்திற்கு புதிய அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.

வளர்ந்து வரும் ஹேக்கிங் டெக்னிக்கை சமாளிக்க தங்களது ஐபோன் பயன்பாட்டாளர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து அப்டேட்களை கொடுத்துக்கொண்டே இருக்கும். இதன் மூலம் போனின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். அந்த வகையில் சமீபத்தில் Apple iOS 15.7.3 அப்டேட்டை கொடுத்தது. இது சமீபத்தில் வாங்கிய மொபைல்களுக்கு சரியாக பொருந்திவிட்டது. ஆனாால் பழைய மொபைல்களில் இதனை அப்டேட் செய்ய முடியவில்லை.

அட்ராசக்க.. உலகின் மிகப்பெரிய ஐபோன் தொழிற்சாலை ஓசூர் நகரில் அமைகிறது.. 60 ஆயிரம் பேருக்கு வேலைஅட்ராசக்க.. உலகின் மிகப்பெரிய ஐபோன் தொழிற்சாலை ஓசூர் நகரில் அமைகிறது.. 60 ஆயிரம் பேருக்கு வேலை

மால்வேர்

மால்வேர்

இந்த அப்டேட் கொண்டு வந்ததற்கு பின்னணியில் முக்கிய காரணம் இருக்கிறது. அதாவது, ஐபோன் பயன்பாட்டாளர்கள் வெப்சைட்களில் உலவிக்கொண்டிருக்கும்போது அங்கு பாப்-அப் ஆகும் விளம்பரங்களை தெரியாமல் அவர்கள் கிளிக் செய்து விட்டால் ஒரு 'மால்வேர்' உங்கள் அனுமதியின்றி ஐபோனில் நுழைந்துவிடும். பொதுவாக இப்படி நுழையும் மால்வேர்களை போன்களின் செக்கியூரிட்டி சிஸ்டம் கண்டுபிடித்துவிடும். ஆனால் இந்த புதுவகை மால்வேர் ஒரு 'கோடிங்காக' ஐபோனில் உள்நுழைந்து இயங்க தொடங்கிவிடும். இது முழுக்க முழுக்க தன்னிச்சையானது.

அப்டேட்

அப்டேட்

எனவே இதனை கண்டுபிடிப்பதும் சற்று கடினம். இது ஐபோன் பயன்பாட்டாளர்களின் புகைப்படங்கள், பாஸ்வேர்ட்கள், டெக்ஸ் மெசேஜ்கள் என அனைத்தையும் அவர்களுக்கே தெரியாமல் மூன்றாம் நபருக்கு அனுப்பிக்கொண்டிருக்கும். எனவே இதனை தவிர்க்கவே புதிய அப்டேட்டை ஆப்பிள் வழங்கியது. இது அனைத்து iPhone 6s மாடல்கள், அனைத்து iPhone 7 மாடல்கள் மற்றும் iPhone SE Gen 1 ஆகிய மாடல்களுக்கு பொருந்திவிட்டது. ஆனால் 2013ம் ஆண்டுக்கு முந்தை ஐபோன்களில் இந்த அப்டேட் பொருந்தவில்லை. இதற்கு பழைய மாடலின் 'ஹார்டுவேர்'தான் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த மாடல்கள்

எந்தெந்த மாடல்கள்

இதனால் Apple iOS 12.5.7க்கு முந்தைய பதிப்பை கொண்டிருக்கும் ஐபோன் பயன்பாட்டர்களின் தகவல்கள் திருடப்படுவதற்காகன வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இதனை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழுவும் (CERT-In) உறுதி செய்துள்ளது. இந்த பயனாளர்களுக்கு மத்திய அரசு இது தொடர்பாக எச்சரிக்கையையும் விடுத்துள்ளது. அதன்படி iPhone 5s, iPhone 6, iPhone 6 Plus, iPad Air, iPad mini 2, iPad mini 3 மற்றும் iPod touch Gen 6 போன்ற சாதனங்கள் 'ஹை ரிஸ்க்கில்' இருக்கின்றன.

அறிவிப்பு

அறிவிப்பு

ஆப்பிள் நிறுவனத்தின் 5s கடந்த 2013ம் ஆண்டு வெளி வந்தது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர்தான் இந்த மாடல் மொபைல்கள் வழக்கொழிந்துவிட்டதாக கூறியது. இதன் அர்த்தம் என்னவெனில் இனி இதற்கான சாஃப்ட்வேர் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்கள் ஆப்பிள் நிறுவனத்தால் வழங்கப்படமாட்டாது என்பதுதான்.

English summary
The Indian government has warned that users of older iPhones are facing problems updating to the 15.5.3 Apple iOS version, and these users are at greater risk.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X