• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

புலம்பெயரும் தொழிலாளர்கள்.. சமூக பரவலுக்கு வழிவகுக்கும்.. எல்லைகளை மூடுங்கள்- மாநிலங்களுக்கு உத்தரவு

|

டெல்லி: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெரு நகரங்களிலிருந்து சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருப்பதால் சமூக பரவலை தடுக்க அனைத்து மாநில மற்றும் மாவட்ட எல்லைகளை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

  ஆயிரக்கணக்கில் மக்கள் வெளியேறுவது ஏன் ஆபத்தானது?

  இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1024 ஆக உயர்ந்துள்ளது. இதில் 27 பேர் பலியாகிவிட்டனர். இந்த நிலையில் இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

  இதனிடையே வேலையில்லாமலும் பணமில்லாமலும் அவதிப்பட்டு வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தங்கள் சொந்த மாநிலங்களுக்கு நடந்தே சென்று வருகிறார்கள்.

  ஐரோப்பா நாடுகளிலிருந்து தமிழகம் வந்த 14 பேருக்கு கொரோனா அறிகுறி.. மருத்துவமனையில் அனுமதி

  வெளிநாடுகள்

  வெளிநாடுகள்

  இவர்கள் சாரை சாரையாக தேசிய நெடுஞ்சாலைகளில் நடந்தே செல்கிறார்கள். இவர்களில் யாருக்கேனும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருந்தாலும் அது மிகவும் ஆபத்தில்தான் முடியும். அத்தோடு மருத்துவ வசதிகளே இல்லாத சொந்த மாநிலங்களுக்கும் நோயை இவர்கள் கொண்டு செல்லவும் வாய்ப்புள்ளது. வெளிநாடுகளுக்கு செல்லாமலேயே இரு ராணுவ அதிகாரிகளுக்கு கொரோனா பரவியுள்ளது.

  தனிமை

  தனிமை

  அவர்களில் ஒருவர் ராணுவ மருத்துவராவார். இவருடன் தொடர்பில் இருந்த இருவரை கண்டுபிடித்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தியா முழுவதும் லாக்டவுன் ஆன நிலையில் வேலை, தங்கும் இடம் இல்லாமல் கிளம்புவோரிடம் கேட்டபோது நாங்கள் ஊரை விட்டு சென்றால் ஏதோ ஆபத்தான வைரஸ் எங்களை கொல்லும் என்பது குறித்துதான் பேசுகிறார்கள். எனக்கு புரியவில்லை. ஒரு தாயாக எனது குழந்தைக்கு உணவளிக்க முடியாதது எனக்கு வேதனையை தருகிறது.

  மத்திய அரசு

  மத்திய அரசு

  உதவி செய்ய ஒருவரும் இல்லை. எல்லாரும் வாழ்வு குறித்தே கவலைப்படுகிறோம். நாங்கள் இங்கேயே இருந்தால் வைரஸ் கொல்வதற்கு முன்னர் பசியாலேயே செத்துவிடுவோம் என்கிறார் ஒரு புலம்பெயர்ந்த தாய். இதையடுத்து கொரோனா வீரியத்தை உணர்ந்த மத்திய அரசு, அனைத்து மாநில மற்றும் மாவட்ட எல்லைகளை மூடுமாறு மாநில அரசு, யூனியன் பிரதேசங்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

  வீடியோ கான்பிரன்சிங்

  வீடியோ கான்பிரன்சிங்

  அத்துடன் ஏற்கெனவே புலம்பெயர்ந்து சொந்த ஊர்களுக்கு சென்றோரை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மாநில தலைமை செயலாளர்கள், டிஜிபிக்களுடன் அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா, மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா ஆகியோர் வீடியோ கான்பிரன்சிங் நடத்தினர்.

  21 நாட்கள் ஊரடங்கு

  21 நாட்கள் ஊரடங்கு

  மேலும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் போது நாடு முழுவதும் நகரங்களிலும் தேசிய நெடுஞ்சாலைகளிலும் மக்களின் நடமாட்டம் இல்லாததை உறுதிப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் சேவைகள் மட்டுமே இந்த 21 நாட்கள் ஊரடங்கில் அனுமதிக்கப்படும் என ஏற்கெனவே மோடி அறிவித்துள்ளார்.

  எத்தனை பேர் இறப்பு

  எத்தனை பேர் இறப்பு

  இதையடுத்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எங்கும் செல்ல வேண்டாம் என்றும் அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் இதர வசதிகளை செய்து தருவதாகவும் உறுதி அளித்தனர். இதுவரை மகாராஷ்டிராவில் 8 பேரும் குஜராத்தில் 5 பேரும், கர்நாடகாவில் 3 பேரும், மத்திய பிரதேசம், டெல்லி, ஜம்மு காஷ்மீர், கேரளாவில் தலா 2 பேரும், தெலுங்கானா, தமிழகம், பீகார், பஞ்சாப், மேற்கு வங்கம், ஹிமாச்சல் பிரதேசத்தில் தலா ஒருவரும் பலியாகியுள்ளனர்.

   
   
   
  English summary
  Centre asks all the states to shut their borders as Coronavirus in India crosses 1100 mark.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X