டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒவ்வொரு கட்டமாக ரயில் நிலைய டிக்கெட் கவுன்ட்டர்கள் திறப்பு- இன்று முதல் முன்பதிவு தொடக்கம்

Google Oneindia Tamil News

டெல்லி: ரயில் நிலைய டிக்கெட் கவுன்ட்டர்கள் படிப்படியாக திறக்கப்பட்டு இன்று முதல் வழக்கம் போல முன்பதிவு செய்யப்படும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

கொரோனா லாக்டவுனால் சரக்கு ரயில்கள் மட்டும் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்வதற்காக இயக்கப்பட்டன. பயணிகள் ரயில் போக்குவரத்து முதல் முறையாக 2 மாத காலத்துக்கும் மேலாக நிறுத்தப்பட்டது.

உள்நாட்டு விமான போக்குவரத்து: பயண நேரங்களின் அடிப்படையில் 7 வகையாக பிரித்து கட்டணங்கள் அறிவிப்புஉள்நாட்டு விமான போக்குவரத்து: பயண நேரங்களின் அடிப்படையில் 7 வகையாக பிரித்து கட்டணங்கள் அறிவிப்பு

இடம்பெயர் தொழிலாளர்கள்

இடம்பெயர் தொழிலாளர்கள்

கடந்த மே 1-ந் தேதி முதல் இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. மாநில அரசுகளின் ஏற்பாட்டில் இந்த ரயில்கள் இயக்கப்பட்டன, இதன் மூலம் சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பினர்.

200 ரயில்கள்

200 ரயில்கள்

இதனையடுத்து ஜூன் 1-ந் தேதி முதல் 200 பயணிகள் ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில்களுக்கான கால அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதில் தமிழகத்துக்கு ஒரு ரயில் கூட இல்லை என்பது சர்ச்சை. இந்த ரயில்களுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் மட்டுமே முன்பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

3 மணிநேரத்தில் அமோகம்

3 மணிநேரத்தில் அமோகம்

வியாழன்று காலை முன்பதிவு தொடங்கிய முதல் 3 மணிநேரத்தில் 76 ரயில்களில் 1,78,990 டிக்கெட்டுகள் பதிவு செய்யப்பட்டன. மொத்தம் 4,23,538 பயணிகள் பயணிக்க உள்ளனர் . இந்த நிலையில் ரயில் நிலையங்களிலும் டிக்கெட் கவுன்ட்டர்கள் படிப்படியாக திறக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை முதல் செயல்படும். இந்த டிக்கெட் கவுன்ட்டர்களில் வழக்கம் போல முன்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை

இந்த டிக்கெட் கவுன்ட்டர்களில் பின்பற்ற கட்டுப்பாடுகள் தொடர்பான வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. கொரோனா பரவாமல் தடுக்க சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து ரயில் நிலைய கவுன்ட்டர்களும் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

English summary
Indian Railways green lights re-opening of reservation counters and booking through Common Service Centers (CSCs) and Agents.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X