தர்மபுரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போதும்.. அன்புமணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி... இந்த முறை ஷாக் கொடுப்பது திமுக அல்ல அதிமுக!

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு அதிமுக கட்சி மிகப்பெரிய அதிர்ச்சியை அளிக்க காத்துக் கொண்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    பாமக-வை ஓரங்கட்டும் அதிமுக | பாமக மீது தவறு இருந்தால் திருத்திக்கொள்வோம்... அன்புமணி ராமதாஸ்

    தர்மபுரி: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு அதிமுக கட்சி மிகப்பெரிய அதிர்ச்சியை அளிக்க காத்துக் கொண்டு இருக்கிறது.

    லோக்சபா தேர்தலில் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் படுதோல்வி அடைந்து இருக்கிறார். இவர் திமுக வேட்பாளர் செந்தில் குமாரிடம் தோல்வி அடைந்துள்ளார்.

    செந்தில் குமார் 5,70,000 வாக்குகள் எடுத்து, அன்புமணியை விட 70,000 வாக்குகள் முன்னிலை பெற்று தேர்தலில் வெற்றிபெற்று இருக்கிறார். இது அன்புமணிக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

    ராகுல் ராஜினாமா ஏற்கப்படுமா? டெல்லியில் நாளை கூடுகிறது காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்! ராகுல் ராஜினாமா ஏற்கப்படுமா? டெல்லியில் நாளை கூடுகிறது காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்!

    ஒப்பந்தம் என்ன

    ஒப்பந்தம் என்ன

    அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்த போது 7 தொகுதிகளை கேட்டது. அதோடு ஒரு ராஜ்ய சபா சீட்டும் கேட்டது. இதற்கு பதிலாக அதிமுக சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆதரவு கேட்டது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவே ஒப்பந்தம் போடப்பட்டது.

    பெரிய ஏமாற்றம்

    பெரிய ஏமாற்றம்

    ஆனால் பாமக அதிமுகவை பெரிய அளவில் ஏமாற்றியுள்ளது என்றுதான் கூற வேண்டும். பாமகவின் வாக்கு வங்கி அதிமுகவிற்கு எங்கும் உதவ வில்லை. வட தமிழகத்தில் நடந்த சட்டசபை இடைத்தேர்தலில் எல்லாம் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. அதேபோல் பாமக வலுவாக இருக்கும் இடங்களில் எல்லாம் நடந்த சட்டசபை இடைத்தேர்தலிலும் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது.

    வேலை பார்க்கவில்லை

    வேலை பார்க்கவில்லை

    பாமகவினர் யாரும் அதிமுகவினர் கூட்டணிக்காக வேலை பார்க்கவில்லை என்ற புகாரும் இருக்கிறது. அதேபோல் பாமகவின் வாக்குகள் லோக்சபா தேர்தலிலும் அதிமுகவிற்கு செல்லவில்லை. இதனால்தான் பெரிய கூட்டணி அமைத்தும் கூட அதிமுக மிகப்பெரிய தோல்வியை சந்தித்து இருக்கிறது.

    ஏமாற்றம் கோபம்

    ஏமாற்றம் கோபம்

    இதனால் அதிமுக தரப்பு பெரும் ஏமாற்றம் மற்றும் கோபத்தில் இருப்பதாக கூறுகிறார்கள். ஏற்கனவே அதிமுகவின் மிக முக்கியமான எம்பிக்கள், தங்கள் எம்பி பதவியை இழந்துவிட்டனர். இதனால் அவர்கள் தங்களுக்கு ராஜ்ய சபா பதவி வேண்டும் என்று கேட்டு வருகிறார்கள். தமிழக பாஜகவில் சிலரும் அதிமுகவிடம் ராஜ்ய சபா பதவிக்கு அடிபோட்டு வருகிறார்கள்.

    முடியாது

    முடியாது

    இதனால், அதிமுக பெரும்பாலும் பாமகவிற்கு ராஜ்ய சபா எம்பி பதவியை வழங்காது என்று கூறுகிறார்கள். இதுதான் அன்புமணிக்கு பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. தங்கள் கட்சியை சேர்ந்த ஒருவருக்கு அதிமுக எம்.பி பதவி தர முடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது. அதிமுகவின் இந்த முடிவால் அதிமுக - பாமக கூட்டணியில் கூடிய சீக்கிரம் பிளவு ஏற்பட போகிறது என்று பேசிக்கொள்கிறார்கள்.

    English summary
    Lok Sabah election results: AIADMK may give an unexpected shock to PMK party.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X