திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கல்லறைக்கு செல்ல தயாராய் தந்தை உடல்! பேனாவுடன் தேர்வறைக்கு சென்ற மகன்! ஒரு நெகிழ்ச்சி சம்பவம்..!

Google Oneindia Tamil News

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தந்தை இறந்து உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று தனது பதினோராம் வகுப்பு பொது தேர்வை எழுதிய மாணவனின் செயல் நெகிழ்ச்சியையும் பாராட்டுதலையும் ஒருசேர பெற்றுள்ளது.

தமிழகத்தில் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை குறித்த அறிவிப்பை கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதன் படி பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 5ஆம் தேதியும், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9ஆம் தேதியும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

4 ஆண்டு விசாரணை... தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு இறுதி அறிக்கை முதலமைச்சரிடம் தாக்கல் 4 ஆண்டு விசாரணை... தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு இறுதி அறிக்கை முதலமைச்சரிடம் தாக்கல்

இந்நிலையில் ண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தந்தை இறந்து உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று தனது பதினோராம் வகுப்பு பொது தேர்வை எழுதிய மாணவனின் செயல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தந்தை மரணம்

தந்தை மரணம்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சவேரியார்பட்டியை சேர்ந்தவர் ரட்சகர் இவர் வேடசந்தூரில் சோபியா என்ற பெயரில் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று மாலை உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார். இவருக்கு மனைவியும் சோபியா என்ற மூத்த மகளும் ராபின் என்ற இளைய மகனும் உள்ளனர்.

+1 பொதுத் தேர்வு

+1 பொதுத் தேர்வு

சோபியா பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் நிலையில் ராபின் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். நேற்றைய தினம் பதினொன்றாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடந்த நிலையில் தனது தந்தை இறந்து உடல் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த போதிலும் பொதுத்தேர்வை எழுதுவதற்காக ராபின் வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வந்திருந்தார்.

தேர்வுக்கு சென்ற மகன்

தேர்வுக்கு சென்ற மகன்

அங்கு அவர் தனது பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதி முடித்து விட்டு பின்பு வீட்டுக்குச் சென்று தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்றுக் கொண்டு தனது தந்தைக்கு செய்ய வேண்டிய அனைத்து இறுதிச் சடங்குகளையும் செய்தார். நாளை ஷோபியா விற்கு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு இருந்தபோதிலும் நான் நிச்சயமாக நாளை சென்று எனது பொதுத்தேர்வை நல்லபடியாக எழுதுவேன் என்று தெரிவித்தார்.

மாணவனுக்கு பாராட்டு

மாணவனுக்கு பாராட்டு

தந்தை இறந்து உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்த போதிலும் தங்களது அரசு பொது தேர்வை நல்லபடியாக எழுதி தந்தையின் கனவை நிறைவேற்றுவோம் என்று கூறிய பிள்ளைகளை நினைத்து அப்பகுதியினர் மெய்சிலிர்த்தனர். மேலும் தந்தை உடலருகே அவர் சீருடையில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

English summary
The body of a father who died and his body was laid to rest near Vedasandur in Dindigul district today received the resilience and admiration of a student who wrote his Class XI general examination.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X