For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘நோட்டா’ ஓட்டின் தேர்தல் சின்னம் செவ்வக பெட்டி: தேர்தல் கமிஷன் அறிவிப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Election Commission finalizes symbol for NOTA option
டெல்லி: நோட்டா' ஓட்டுக்கான தேர்தல் சின்னமாக செவ்வக வடிவ பெட்டியை தேர்தல் கமிஷன் நேற்று இறுதி செய்துள்ளது. அந்த பெட்டிக்குள் ‘நோட்டா' என்று எழுதப்பட்டு இருக்கும்

ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவருக்கும் ஓட்டளிக்க விரும்பாத வாக்காளர்களுக்காக ‘நன் ஆப் த அபவ்' (நோட்டா) என்ற பட்டனை ஓட்டுப்பதிவு எந்திரத்தில் இடம்பெறச் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தெரிவித்தது. அதை ஏற்றுக்கொண்டு, விரைவில் நடைபெற உள்ள 5 மாநில சட்டசபை தேர்தல்களில் இருந்து ‘நோட்டா'வை அமல்படுத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், ‘நோட்டா' ஓட்டுக்கான தேர்தல் சின்னமாக செவ்வக வடிவ பெட்டியை தேர்தல் கமிஷன் நேற்று இறுதி செய்தது. அந்த பெட்டிக்குள் ‘நோட்டா' என்று எழுதப்பட்டு இருக்கும்.

இந்த செவ்வக வடிவ ‘நோட்டா' சின்னம், அனைத்து ஓட்டுப்பதிவு எந்திரங்களிலும் கடைசி வேட்பாளர் பெயருக்கு கீழே பொறிக்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு, அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

English summary
The Election Commission on Thursday finalized the election symbol for "None of the Above" (NOTA) option - "NOTA" written inside a rectangular box - to be displayed on electronic voting machines (EVMs) and ballot papers during the forthcoming polls in five states.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X