For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொஞ்சம் கொஞ்சமா ஊசி போடுங்க.. ஏன் தெரியுமா.. பாஜக முதல்வர் சொன்ன ஐடியா.. அப்படியே மிரண்டு போன மக்கள்

ஹரியானா முதல்வரின் சர்ச்சை கருத்து சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது

Google Oneindia Tamil News

சண்டிகர்: ஹரியானாவில் நிறைய தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கிறதாம்.. இதைவிட முக்கியம், அம்மாநில முதல்வர் சொன்ன காரணம்தான் பெரும் மலைப்பை ஏற்படுத்தி வருகிறது!

இந்தியாவில் தொற்று பரவல் அதிகமாக இருக்கிறது.. அதிலும் 2வது பரவல் படுபயங்கரமாக இருக்கிறது... தொற்று பாதிப்பும், பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகி கொண்டே இருக்கிறது..

தஞ்சை மருத்துவமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் நிலையம்.. நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்! தஞ்சை மருத்துவமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் நிலையம்.. நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்!

இதற்கெல்லாம் இப்போதைக்கு ஒரே நம்பிக்கையாக தடுப்பூசிகள்தான்.. எந்த அளவுக்கு தடுப்பூசியை மக்களுக்கு செலுத்திவிடுகிறோமோ, அந்த அளவுக்கு தொற்றில் இருந்து காப்பாற்றி கொள்ளலாம் என்று உலக சுகாதார அமைப்பும் தொடர்ந்து சொல்லி வருகிறது..

 கொள்முதல்

கொள்முதல்

அதனால்தான் மாநில அரசுகள் தங்கள் மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தும் பணியை வேகமாக நடத்தி வருகின்றன. ஆனால் நம் நாட்டில் மக்கள் தொகை அதிகம் என்பதால், தடுப்பூசிகள் போதாமல் உள்ளன.. மத்திய அரசும், தடுப்பூசிகளை கொள்முதல் செய்யவில்லை.. இதனால் தடுப்பூசி தட்டுப்பாடுகள் எழுந்து வருவதால், உடனடியாக தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும் என்று மாநில முதல்வர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.

 பினராயி கடிதம்

பினராயி கடிதம்

கடந்த வாரம் அரவிந்த் கெஜ்ரிவால், தடுப்பூசியை கொள்முதல் செய்ய 24 மணி நேரம் கெடுவும் வைத்திருந்தார்.. இந்நிலையில்தான், தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்க மத்திய அரசுக்கு எல்லா மாநில அரசுகளும் சேர்ந்து அழுத்தம் தர வேண்டும் என்று பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார். இது சம்பந்தமாக 11 மாநில முதல்வருக்கும் அவர் லெட்டர் எழுதியிருந்தார்.

 அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால்

அதேபோல, கெஜ்ரிவாலும், தங்களிடம் தடுப்பூசி இருப்பில் இல்லை... உடனே மத்திய அரசு தடுப்பூசிகளை கொடுத்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். அரவிந்த கெஜ்ரிவால் இப்படி சொன்னதுமே, ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், ஒரு கருத்தை சொல்லி உள்ளார்..

 ஆச்சரியம்

ஆச்சரியம்

"டெல்லியில் ஒருநாளைக்கு 2 லட்சம் பேருக்கு தடுப்பூசிகளை வேகம் வேகமாக போட்டு முடித்துவிட்டனர்.. அதனால்தான் அங்கு தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது... ஆனால், ஹரியானாவில் அப்படி இல்லை.. 50 முதல் 60 ஆயிரம் வரையே ஒருநாளைக்கு தடுப்பூசி போடுகிறோம்.. அதனால், எங்களுக்கு தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது" என்றார். பாஜக மூத்த தலைவர், அதுவும் ஒரு மாநில முதல்வரே இப்படி பேசுகிறாரே என்று ஆச்சரியமும், அதிர்ச்சியும் கலந்த விவாதங்கள் கிளம்பி உள்ளன.

English summary
Haryana administering doses in small numbers over several days, Says CM Khattar
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X