For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஷ்மீர்.. புல்வாமாவில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு.. ஒருவர் பலி.. ராணுவம் தீவிர தேடுதல் வேட்டை!

ஜம்மு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீக்கியது. அப்போது தொடங்கிய பிரச்சனை இன்னும் முடியவில்லை.ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை தொடர்ந்து அங்கு மிகவும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

Jammu Kashmir: One Civilian dies after Militants fires at people in Pulwama

அங்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இன்னும் காஷ்மீர் ராணுவ கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.

இத்தனை பாதுகாப்பிற்கும் மத்தியில் ஜம்மு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் இன்று துப்பாக்கி சூடு நடைபெற்றது. அங்கு தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலில் பலியானார் குலாம் நபி வீர் என்று இளைஞர். மக்கள் இருந்த பகுதிகளுக்குள் நுழைந்த தீவிரவாதிகள் சரமாரியாக சுட்டதில், குலாம் நபி வீர் பலியானார்.

இதனால் அந்த பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. அங்கு துப்பாக்கி சூடு நடத்திய தீவிரவாதிகளை ராணுவ வீரர்கள் தேடி வருகிறார்கள். இந்த தாக்குதலுக்கு தீவிரவாத அமைப்பு எதுவும் பொறுப்பேற்கவில்லை.

கடந்த வருடம் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 40 சிஆர்பிஎப் படை வீரர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.

English summary
Jammu Kashmir: One Civilian dies after Militants fires at people in Pulwama today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X