For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காற்றழுத்த தாழ்வுநிலை தீவிரம்.. மும்பை, கோவாவில் கனமழை தொடரும்

மும்பை, கோவாவில் பெய்து வரும் கனமழை காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: மும்பை, கோவாவில் பெய்து வரும் கனமழை காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.

மும்பை, தானே, கோவா, உத்தர பிரதேஷ் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை கொட்டி தீர்த்தது. இந்த மழை மேலும் தொடரும் என்று கூறப்படுகிறது. இன்னும் சில நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Monsoon update: Heavy rain likely over Konkan, Goa and Coastal Karnataka

இந்த மழை மும்பை, கோவா, கர்நாடகா, ஆந்திராவின் சில பகுதிகளில் பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் இந்த மாநிலங்களில் உள்ள மீனவர்கள் யாரும் ஒரு வாரம் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மும்பை உள்ளிட்ட 6 மாவடங்களில் இன்று மிக அதிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா ராயலசீமா பகுதிகள், தெலுங்கானாவின் சில பகுதிகள், கடலோர ஆந்திரா, கேரளா ஆகிய இடங்களுக்கும் மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.இந்த மழை இந்த வருடத்தின் மிகவும் தீவிரமான மழையாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மட்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏற்கனவே மும்பையில் சாலை முழுக்க தண்ணீர் தேங்கி இருந்தது. இதனால் இன்று அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

English summary
The western arm of the Monsoon trough has further shifted slightly northwards and is moving across Kapurthala, Nahan, Shajapur, Varanasi, Purnea, Digha and towards Bay of Bengal across the low-pressure area.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X