நாட்டின் மக்கள் தொகை கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்... மத்திய அரசுக்கு மோகன் பகவத் அட்வைஸ்
நாக்பூர்: நாட்டின் மக்கள் தொகை கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய பா.ஜ.க.அரசுக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் அறிவுறுத்தியுள்ளார்.
1925-ம் ஆண்டு நாக்பூரில் விஜயதசமி நாளில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை ஹெட்கேவர் தொடங்கினார். இதையடுத்து ஆண்டுதோறும் விஜயதசமி நாளில் ஆர்.எஸ்.எஸ். நிறுவன நாள் கொண்டாடப்படும்.
இன்று நாடு முழுவதும் விஜயதசமி கொண்டாடப்பட்டு வருகிறது. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நிறுவன நாளை முன்னிட்டு நாக்பூரில் அதன் தொண்டர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்தியாவுக்கான இஸ்ரேல் துணைத் தூதர் Kobbi Shoshani பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியதாவது: நமது தேசத்தின் கலாசாரம் ஆழமாக பிளவுபட்டுவிடக் கூடாது. பிறந்த நாள்கள், பண்டிகைகளை அனைவரும் இணைந்து கொண்டாட வேண்டும்.

தேசப்பிரிவினை சோக வரலாறு
ஆர்.எஸ்.எஸ். இயக்கம் என்ன நோக்கத்துக்காக தோற்றுவிக்கப்பட்டதோ அந்த பயணம் இன்னமும் முடிவடையவில்லை. இந்தியாவின் முன்னேற்றத்தை சீர்குலைக்கவே மேற்குலக சக்திகள் முயற்சிக்கின்றன. நாடு விடுதலை அடைந்த போது தேசப் பிரிவினை நிகழ்ந்தது மிகப் பெரிய சோக வரலாறு. இன்றைய இளைய தலைமுறை அந்த வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும்.

தேசவிரோத செயல்கள்
இன்று OTT எனப்படும் சினிமா வெளியீட்டு தளங்கள் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் இருக்கின்றன. கொரோனாவுக்கு பிந்தைய காலத்தில் குழந்தைகளின் கைகளில் போன்கள் பயன்பாடு அதிகரித்துள்ளன. போதைப் பொருட்கள் பயன்பாடும் அதிகரித்துள்ளது. இவற்றை எல்லாம் எப்படி தடுக்கப் போகிறோம்? இத்தகைய வர்த்தகத்தின் மூலமான பணம் தேசவிரோத செயல்களுக்குதான் பயன்படுகிறது. இதனை கட்டுப்படுத்தியாக வேண்டும்.

மக்கள் தொகை கொள்கை
நமது நாட்டின் மக்கள் தொகை கொள்கை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். புதிய மக்கள் தொகை கொள்கையானது அடுத்த 50 ஆண்டுகாலத்துக்கானதாக இருக்க வேண்டும். அந்த கொள்கையை அனைவருக்கும் சமமானதாக செயல்படுத்த வேண்டும். சமூகங்களிடையேயான மக்கள் தொகையில் நிலவும் ஏற்றத்தாழ்வு மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து நிற்கிறது.

எல்லை பாதுகாப்பு வலுவாக்க வேண்டும்
நமக்கு தாலிபான்களின் வரலாறு தெரியும். இன்று சீனாவும் பாகிஸ்தானும் தாலிபான்களை ஆதரிக்கின்றன. ஒருவேளை தாலிபான்கள் நிலைப்பாடு கூட மாறலாம். ஆனால் இந்தியா தொடர்பான சீனா, பாகிஸ்தான் நிலைப்பாடுகள் மாறுமா? ஆகையால் நமது எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். இவ்வாறு மோகன் பகவத் கூறினார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications