For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"டாப்பில் செல்கிறது இந்தியா.. இன்னும் அடுத்த 25 வருடங்களில்.. நிர்மலா சீதாராமன் சொன்ன முக்கிய தகவல்

வளர்ச்சி பாதையில் இந்தியா செல்வதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

கவுகாத்தி: உள்கட்டமைப்பு திட்டமிடல், முதலீடு ஆகியவற்றுக்கு பிரதமரின் கதிசக்தி திட்டம் வழிகாட்டும் என்றும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை முன்னணி நாடாக உயர்த்துவதற்கு பாடுபட்டு வருகிறோம். அதற்கு மின்னணு ரீதியாக இந்தியா தயாராகி வருவதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இந்த முறை தாக்கல் செய்யப்பட்டிருந்த மத்திய பட்ஜெட்டில் எதிர்பார்த்த சலுகைகள், அறிவிப்புகள் இல்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன.
இந்த பட்ஜெட்டில் மாதாந்திர சம்பளதாரர்கள் வரிச்சலுகை கிடைக்கும் என்று அதிகம் எதிர்பார்த்தனர்... 5 மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் நிச்சயம் சலுகை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் மேலோங்கியிருந்தது.

சிறையில் சொகுசு வசதி... தொடரும் வழக்கு.. பெங்களூர் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகும் சசிகலாசிறையில் சொகுசு வசதி... தொடரும் வழக்கு.. பெங்களூர் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகும் சசிகலா

சலுகைகள்

சலுகைகள்

குறிப்பாக, வருமான வரி விதிப்புக்குப் பதிலாக செலவு வரி விதிக்கலாம் என்று பலர் பரிந்துரைத்திருந்தனர். இதனால் பரவலாக வரிச்சலுகை இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தபடியே இருந்தது.. ஆனால் நிரந்தர கழிவு ரூ.50 ஆயிரம் சலுகை வரம்பைக்கூட அமைச்சர் அதிகரிக்கவில்லை. இது மாத சம்பளதாரர்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக அமைந்துள்ளது.

ஏமாற்றம்

ஏமாற்றம்

இந்நிலையில், நிர்மலா சீதாராமன், இந்த ஆண்டு பட்ஜெட்டு மூலதன செலவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்று புகழ்ந்துள்ளார்.. அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில், தொழிலதிபர்களுடன் பட்ஜெட்டுக்கு பிந்தைய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அப்போது பேசியபோது சொன்னதாவது:

கதிசக்தி திட்டம்

கதிசக்தி திட்டம்

கடந்த வருடம் பட்ஜெட்டை போலவே இந்த ஆண்டு பட்ஜெட்டும் மூலதன செலவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. உள்கட்டமைப்பு திட்டமிடல், முதலீடு ஆகியவற்றுக்கு பிரதமரின் கதிசக்தி திட்டம் வழிகாட்டும். உள்கட்டமைப்பு துறையில் பெரிய அளவில் முதலீடு செய்வது, பொருளாதாரம் மீண்டு வருவதற்கு எப்போதும் அவசியம். அதே சமயத்தில், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை முன்னணி நாடாக உயர்த்துவதற்கு பாடுபட்டு வருகிறோம். அதற்கு மின்னணு ரீதியாக இந்தியா தயாராகி வருகிறது.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

நாட்டில் மின்னணு பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி, 75 டிஜிட்டல் வங்கிகள் அமைக்கப்படும். அத்துடன், ரிசர்வ் வங்கி, டிஜிட்டல் பணம் வெளியிட உள்ளது. உங்கள் பாஸ்போர்ட்டில் "சிப்" பொருத்தப்பட்டு, இ-பாஸ்போர்ட்டாக வழங்கப்பட உள்ளது. இந்தியா, இயற்கை விவசாயத்தை நோக்கி நடைபோட்டு வருகிறது. அதே சமயத்தில், டிரோன்கள் உதவியுடன் எரு, உரம் தெளிக்கப்பட உள்ளது. விவசாய நிலங்களை அளவிடவும், பயிர்களின் அடர்த்தியை கணக்கிடவும், விளைச்சலை சிறப்பாக மதிப்பிடவும் டிரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன' என்று புது தகவலை அறிவித்தார்.

அது என்ன கதி சக்தி திட்டம்?

அது என்ன கதி சக்தி திட்டம்?

அரசின் திட்டங்கள் ஒரு சிலரை சென்றடையாமல் இருந்த நிலை இப்போது இல்லை... நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக உள்ள தடைகளை தாண்டி செல்லும் வகையில் மிகப்பெரிய திட்டத்தை உருவாக்க மத்திய அரசு யோசித்தது.. அதனால்தான், தொழில்துறையில் நம் இந்தியா, உலக அளவில் போட்டியிட உதவும் வகையில் "கதி சக்தி" என்ற தேசிய மாஸ்டர் பிளான் திட்டத்தை கொண்டு வரப்பட உள்ளதாக கடந்த வருடமே சொல்லப்பட்டது.. நாட்டின் வளர்ச்சியை வேகமடையச் செய்வதே இந்த "கதி சக்தி" திட்டமாகும்..

முக்கியத்துவம்

முக்கியத்துவம்

மத்திய பட்ஜெட்டை அன்று தாக்கல் செய்து பேசியபோதுதான், நிர்மலா சீதாராமன், இந்த கதிசக்தி திட்டங்கள் குறித்த அறிவிப்பை முதன்முதலில் வெளியிட்டார்.. "அடுத்த 25 ஆண்டுகளுக்கு நாட்டின் பொருளாதார வளர்ச்சிப்பாதையை இலக்காகக் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.. இளைஞர்கள் தொழில் தொடங்க பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.. போக்குவரத்து வசதிகள் உள் கட்டமைப்பு வசதிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.. கதி சக்தி திட்டத்தின் மூலம் நாட்டின் உள் கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படும்.. நாட்டின் பொருளாதாரத்தை மேலும் முன்னேற்றமடையச் செய்யும், வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்...

வேலைவாய்ப்புகள்

வேலைவாய்ப்புகள்

இத்திட்டம் செயல்படுத்தப்படுவதன் மூலம் சரக்குகளை கையாளும் திறன் அதிகரிக்கப்படும்... விநியோகத்துக்கான நேரம் குறைவதுடன், சரக்குகளை கையாள்வதற்கான செலவும் குறையும். தரமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் வளர்ச்சி என்பது சாத்தியமில்லை... இப்போது அதை முழுமையான முறையில் உருவாக்க அரசு தீர்மானித்துள்ளது. அதற்காகவே கதி சக்தி திட்டத்தைக் கொண்டு வரப்பட்டுள்ளது" என்றார்.. இந்த திட்டத்தைதான் மத்திய அரசு செயல்படுத்த தொடங்கி உள்ளதாக நிதியமைச்சரின் இன்றைய பேச்சில் அறிய முடிகிறது.

English summary
PM Modis Gati Shakti master plan: india getting ready to be on top of the curve in next 25 years, says nirmala sitharaman
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X