இமயமலையில் சோகம்- புதையும் ஜோஷிமத் புனித நகரம்: பிரதமர் அலுவலகம் இன்று அவசர ஆலோசனை!
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தின் புனித நகரங்களில் ஒன்றான ஜோஷிமத் இப்போது அழிவின் விளிம்பில் இருக்கிறது. இயற்கை பேரிடரால் ஜோஷிமத் புனித நகரம் புதையுண்டு போகிற பேரபாயம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகம் இன்று பல்வேறு தரப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளது.
இமயமலையில் புனித யாத்திரை மேற்கொள்பவர்களுக்கான மத்திய தலமாக இருப்பது ஜோஷிமத். இங்கிருந்து புகழ்பெற்ற ஆன்மீக தலமான பத்ரிநாத் 44 கி.மீ. தொலைவில் உள்ளது. பத்ரிநாத் கோவில் நிர்வாகமே, ஜோஷிமத்தில் உள்ள ஆதி சங்கரரால் நிறுவப்பட்ட மடத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. ஜோஷிமத், புனித நகரமானது ஆதி சங்கராச்சாரியால் உருவம் பெற்றது.

ஜோஷிமத் என்ற புனிதநகரம் இனி இருக்குமா? என்ற அச்சம் உருவாகி உள்ளது. ஜோஷிமத் நகரத்தின் பல பகுதிகளில் கட்டிடங்கள் விரிசல் ஏற்பட்டு அப்படியே பூமிக்குள் புதையுண்டு போய் வருகின்றன. தற்போதைய நிலையில் சுமார் 600 கட்டிடங்கள் பூமிக்குள் புதையும் நிலையில் இருக்கின்றன.
இதனால் ஜோஷிமத் நகரைவிட்டு மக்கள் பெருமளவில் வெளியேறி வருகின்றனர். அத்துடன் எந்தநேரத்திலும் எதுவும் பேராபயம் நிகழ்ந்துவிடக் கூடுமோ என்ற அச்சத்தால், ஹெலிகாப்டர்களுடன் தேசிய பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் இருக்கிறது. மருத்துவ வசதிகளும் தயார் நிலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
ஜோஷிமத் நகரம் புதையுண்டு போவதற்கு காரணமே இமயமலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் என குற்றம்சாட்டப்படுகிறது. நீர்மின் நிலையம், நெடுஞ்சாலை விரிவாக்கம் என பல்வேறு திட்டப் பணிகளும் திட்டங்களும் இமயமலையில் இப்படி ஒரு துயரத்தை உருவாக்கி வைத்திருக்கிறது. இப்படியான ஒரு பேரவலம் ஏற்படும் என்பதை பல ஆண்டுகளாகவே எச்சரித்து வந்துள்ளனர். திடீரென ஏற்படும் நிலச்சரிவு, பனிச்சரிவு ஆகியவையும் பெரும் துயரம் நிகழப் போவதை சுட்டிக்காட்டி வந்தன. ஆனால் அதை அலட்சியப்படுத்தியன் விளைவாக இன்று ஜோஷிமத் நகரம் புதையுண்டு கொண்டிருக்கிறது.
இந்த பிரச்சனை தொடர்பாக இன்று பிரதமர் அலுவலகம் ஆலோசனை நடத்த உள்ளது. பிரதமர் அலுவலக செயலாளர் மிஸ்ரா தலைமையில் பல்வேறு துறைசார் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். உத்தரகாண்ட் மாநில அரசு அதிகாரிகள், தேசிய பேரிடர் மீட்பு பணியினரும் இந்த ஆலோசனையில் பங்கேற்று அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய உள்ளனர்.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், பிரதமரின் முதன்மை செயலாளர் டாக்டர் பி.கே. மிஸ்ரா இன்று பிற்பகல் பிரதமர் அலுவலகத்தில் அமைச்சரவை செயலாளர் மற்றும் அரசின் மூத்த அதிகாரிகள் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர்களுடன் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடத்தவுள்ளார். ஜோஷிமத் விவகாரம் குறித்த இந்தக் கூட்டத்தில், அம்மாவட்டத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் காணொலி காட்சி மூலம் பங்கேற்கவுள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தின் மூத்த அதிகாரிகளும் காணொலி காட்சி மூலம் இக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications