டெல்லியில் சோனியா தலைமையில் விருந்து: திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பங்கேற்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil
  எதிர் கட்சிகளுக்கு விருந்து கொடுத்த சோனியா!

  டெல்லி: டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் நேற்று இரவு விருந்து அளிக்கப்பட்டுள்ளது. இதில் மதசார்பற்ற கட்சிகள் கலந்து கொண்டன.

  வரும் 2019-ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக மதசார்பற்ற கட்சிகள் ஓரணியில் திகள முடிவு செய்துள்ளன. இந்நிலையில் அதற்கு முன்னோட்டமாக டெல்லியில் காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி தனது வீட்டில் தேனீர் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

  இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார், சமாஜ்வாதி கட்சியின் ராம் கோபால் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சியின் சந்திர மிஸ்ரா மற்றும் முன்னாள் முதல்வர்கள் ஓமர் அப்துல்லா, பாபுலால் மராண்டி, ஹேமந்த் சோரன், ஜித்தன் ராம் மாஞ்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  ஆர்ஜேடி

  ஆர்ஜேடி

  மேலும் ஜேடியூவின் சரத் யாதவ், ராஷ்ட்ரீய லோக் தளத்தின் அஜித் சிங், ஆர்ஜேடியை சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மற்றும் மாநிலங்களவை எம்பியான மிசா பார்தி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

  திமுக

  திமுக

  திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சுதீப் பந்தோப்யாய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி ராஜா மற்றும் முகமது சலீம், திமுகவின் கனிமொழி உள்ளிட்ட எம்பிக்கள் கலந்து கொண்டனர்.

  அந்தோணி

  அந்தோணி

  இந்த விருந்து நிகழ்ச்சியில் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜூன கார்கே, அகமது படேல், ஏகே அந்தோணி, ரன்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  அற்புதமான விருந்து

  இந்த விருந்து குறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் சோனியா காந்தியால் அற்புதமான விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் ஒரே நேரத்தில் சந்திக்க வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

  20 எதிர்க்கட்சிகள்

  20 எதிர்க்கட்சிகள்

  இந்த விருந்தில் அரசியல் தொடர்பாக ஏராளமாக பேசப்பட்டது என்று ராகுல் பதிவிட்டுள்ளார். இந்த விருந்தில் 20 எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டன.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Leaders of 20 opposition parties yesterday got together at a dinner hosted by UPA chairperson Sonia Gandhi.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற