For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்னா ஒரு பாதுகாப்பு... தேசிய பாதுகாப்புக் கல்லூரிக்குள்ளேயே ஊடுறுவிய ஹெட்லி!

By Siva
Google Oneindia Tamil News

நியூயார்க்: தேசிய பாதுகாப்பு கல்லூரிக்கு நான் 2007ம் ஆண்டு சென்றேன். அப்போது நான் கல்லூரியை வீடியோ எடுத்தேன். தேசிய பாதுகாப்பு கல்லூரியை தாக்கினால் ராணுவ வீரர்கள் பலர் பலியாவார்கள் என்று நினைத்தோம். அதனால் தான் அந்த கல்லூரியை தாக்க திட்டமிட்டோம் என லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி ஹெட்லி தெரிவித்துள்ளார்.

26/11 மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லி பாகிஸ்தானில் இருந்து அமெரிக்காவில் குடியேறினார். அங்கு ஒரு வழக்கில் கைதான அவர் 35 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் அமெரிக்க சிறையில் இருந்தபடியே மும்பை தாக்குதல் வழக்கு குறித்து வீடியோ கான்பரன்சிங் மூலம் வாக்குமூலம் அளித்து வருகிறார். இன்று அவர் 4வது நாளாக வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,

செல்போன்

செல்போன்

சஜித் மிர் எனக்கு இந்திய எண்ணுடன் கூடிய செல்போனை அளித்தார். அந்த செல்போனை வாகா எல்லைக்கு எடுத்துச் சென்று வேலை செய்கிறதா என்று பார்க்குமாறு கூறினார். தீவிரவாதிகள் பயன்படுத்திய அனைத்து செல்போன் எண்களும் இந்திய எண்கள் தான். செல்போன் எண்கள் குறித்து அவர்களுக்கு கராச்சியில் இருக்கும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து உத்தரவு வந்தது.

ஹபீ்ஸ் சயீத்

ஹபீ்ஸ் சயீத்

என் மனைவி பாயிசாவுக்கு நான் ஹபீஸ் சயீத் ஆதரவாளர் என்பது தெரியும். பாயிசா சயீதை சந்தித்து தன்னை என்னுடன் சேர்த்து வைக்குமாறு கூறியுள்ளார். நான் பாயிசாவை விவாகரத்து செய்துவிட்டேன்.

காஷ்மீரி

காஷ்மீரி

அல் கொய்தாவின் 313வது பிரிகேடைச் சேர்ந்த இலியாஸ் காஷ்மீரியை சந்தித்தேன். இந்தியாவில் மேலும் பல ஆய்வு செய்யுமாறு காஷ்மீரி என்னிடம் கூறினார். நான் யாருக்கும் தெரியாமல் காஷ்மீரியை சந்தித்தேன்.

ராணுவ வீரர்கள்

ராணுவ வீரர்கள்

தேசிய பாதுகாப்பு கல்லூரிக்கு நான் 2007ம் ஆண்டு சென்றேன். அப்போது நான் கல்லூரியை வீடியோ எடுத்தேன். தேசிய பாதுகாப்பு கல்லூரியை தாக்கினால் ராணுவ வீரர்கள் பலர் பலியாவார்கள் என்று நினைத்தோம். அதனால் தான் அந்த கல்லூரியை தாக்க திட்டமிட்டோம்.

தேசிய பாதுகாப்பு கல்லூரிக்கு நான் 2007ம் ஆண்டு சென்றேன். அப்போது நான் கல்லூரியை வீடியோ எடுத்தேன். தேசிய பாதுகாப்பு கல்லூரியை தாக்கினால் ராணுவ வீரர்கள் பலர் பலியாவார்கள் என்று நினைத்தோம். அதனால் தான் அந்த கல்லூரியை தாக்க திட்டமிட்டோம்.

கசாப்

கசாப்

கசாபின் புகைப்படத்தை பார்த்ததும் கடவுள் உன்னை ஆசிர்வதிப்பாராக என்று ஹெட்லி தெரிவித்துள்ளார். மும்பை தாக்குதல் முடிந்த பிறகு ஹெட்லிக்கு அவரது மனைவி பாயிசா இமெயில் அனுப்பியுள்ளார். அதில் அவர் நீங்கள் சிறந்த வேலை செய்துள்ளீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
LeT operative David Headley revealed that he visited National Defence college and took video of it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X