Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாங்க போட்டா மட்டும் கைதா? முதல்வர் போட்டோவை எடிட் செய்து சீண்டிய பாஜக நிர்வாகி.. தூக்கிய போலீஸ்!

Subscribe to Oneindia Tamil

கரூர்: முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் புகைப்படம் ஒன்றை எடிட் செய்து பதிவிட்ட பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் சமூக வலைத்தளங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக சமூக வலைதளங்கள் மூலம் சாதி, மத மோதல்கள் ஏற்படுத்த நினைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினும் ஆட்சியர்கள், போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன் பேசி இருந்தார்.

தலைவர்கள் பற்றி அவதூறு கருத்துக்கள் பரப்ப கூடாது. சாதி, மோதல்களை சட்டம் - ஒழுங்கு பிரச்சினையாக மட்டும் பார்க்க வேண்டாம். அதை சமூக ரீதியான ஒழுக்கப் பிரச்சினையாக பார்க்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்து இருந்தார்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

இது போக சமூக வலைதள பதிவுகளை கண்காணிக்க புதிய மையம் அமைக்கப்படும் என்றும் நிதியமைச்சர் பிடிஆர் கடந்த பட்ஜெட்டில் அறிவித்தார். சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பப்படும் வதந்திகள், அவதூறுகள், வெறுப்பு கருத்துக்களை கண்காணிக்கும் விதமாக இந்த மையம் அமைக்கப்படும். சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பப்படும் நபர்கள் இதில் கண்காணிக்கப்படுவார்கள். அதன் மூலம் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் புகைப்படம் ஒன்றை எடிட் செய்து பதிவிட்ட பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர். கரூர் பாஜக இளைஞர் அணி நிர்வாகி S.A விக்னேஷ் சமூகவலைதளத்தில் தலைவர்களை ஆபாசமாக சித்தரித்து பதிவிட்டது பெரிய சர்ச்சையானது. முதல்வர் ஸ்டாலின் படத்தையும் அவர் எடிட் செய்து பதிவிட்டார். அதேபோல் அமைச்சர் பிடிஆர், சில செய்தியாளர்கள் படத்தையும் அவர் எடிட் செய்து பதிவிட்டார்.

எடிட் செய்து போட்டோ

எடிட் செய்து போட்டோ

இப்படி செய்ததோடு இல்லமால்.. நாங்கள் எடிட் செய்து போட்டோ போட்டால் அதில் என்ன தவறு. திமுகவினர் பிரதமர் மோடியை விமர்சிப்பது போலத்தான் இதுவும். நாங்க போட்டா மட்டும் கைது செய்வீர்களா என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதையடுத்து இது தொடர்பாக கரூர் மாவட்ட திமுக ஐடி விங் நிர்வாகி தீபக் கரூர் காவல்நிலைய ஆய்வாளரிடம் புகார் அளித்தார். அதில் முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தை இவர் ஆபாசமாக சித்தரித்துள்ளார்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

அவரின் போஸ்ட் வெறுப்பை பரப்பும் வகையில் உள்ளது. அவர் வன்முறையை தூண்டும் வகையில் பதிவிட்டு இருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் புகைப்படம் ஒன்றை எடிட் செய்து பதிவிட்ட பாஜக நிர்வாகி விக்னேஷை போலீசார் கைது செய்துள்ளனர். இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+