என் உதவியாளரை கொன்றவர்களுக்கு நிச்சயம் மரண தண்டனை வாங்கி தருவேன்.. ஸ்மிருதி இரானி சபதம்!
லக்னோ: தனது உதவியாளரை கொன்றவர்களுக்கு நிச்சயம் மரண தண்டனை பெற்று தருவேன் என ஸ்மிரு இரானி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை எதிர்த்து போட்டியிட்டார் பாஜகவின் அமைச்சரான ஸ்மிருதி இரானி. இதில் ராகுலை லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார் ஸ்மிருதி.
காங்கிரஸின் கோட்டை என கூறப்படும் அமேதி தொகுதியில் ஸ்மிருதி ராகுலை தோற்கடித்தது பெரிதும் பேசப்பட்டது. அந்த தொகுதியில் ஸ்மிருதி இரானிக்கு உதவியாக இருந்தவர், பரவுலியா கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சுரேந்தர சிங்.

தீவிர பிரச்சாரம்
50 வயதான சுரேந்தர் ஸ்மிருதி இரானியின் வலது கையாக செயல்பட்டு வந்தார். அமேதி தொகுதியில் ஸ்மிருதிக்காக தீவிர பிரச்சாரம் செய்து வந்தார்.

சுடப்பட்ட சுரேந்தர்
ஸ்மிருதி வெற்றி பெற்றதை தொடர்ந்து அதில் சுரேந்தருக்கும் பங்கு உண்டு எனக்கூறி பாஜக தலைவர்கள் அவரை பாராட்டி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுரேந்தர் சிங் மர்மநபர்களால் சுடப்பட்டார்.

இறுதிச்சடங்கு
இதையடுத்து லக்னோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து நேற்று அவரது இறுதிச்சடங்கு நடைபெற்றது.

உடலை சுமந்த ஸ்மிருதி
இதில் அமேதி தொகுதி எம்பியான ஸ்மிருதி இரானி கலந்துகொண்டார். அப்போது உதவியாளர் சுரேந்தர் சிங்கின் உடலையும் சுடுகாட்டுக்கு சுமந்து சென்றார் இரானி.

மரண தண்டனை
இந்நிலையில் இதுதொடர்பாக பேசிய ஸ்மிருதி இரானி, உதவியாளர் சுரேந்திரசிங் கொலை தொடர்பாக நீதிமன்றத்தை நாடவுள்ளோம் என்றார். எனது உதவியாளரை கொன்றவருக்கும், கொலை செய்ய உத்தரவிட்டவருக்கும் மரணதண்டனை வாங்கி தரும் வரை ஓயமாட்டோம் என்றும் ஸ்மிருதி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!