காங்கிரஸ் என் உயிர்! எம்பி, எம்எல்ஏ பதவிலாம்! நல்லா வாயில வந்துடும்! மாணிக்கம் தாகூர் ஷாக் பேச்சு
சென்னை: நான் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டேன், எம்பி, எம்எல்ஏ பதவி மண்ணாங்கட்டி... என் வாயில நல்லா வருது... என விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் கடுமையாக வார்த்தைகளை விட்டிருக்கிறார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், காங்கிரஸ் கட்சி எந்த நிலையில் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்தியா கூட்டணியின் வெற்றிக்காக ராகுல் காந்தியும் மல்லிகார்ஜுன கார்கேவும் கடுமையாக போராடி வருகிறார்கள். அவர்களது போராட்டம் என்பது பாஜக, ஆர்எஸ்எஸ் கொள்கையை எதிர்த்து போராடி வருகிறோம்.

கூட்டணி கட்சிகளுடன் இணைந்து நாம் பணியாற்றி கொண்டிருக்கிறோம். 2016 ஆம் ஆண்டு முதல் திமுக கூட்டணியில் தொடர்கிறோம். இந்த கூட்டணி பல வெற்றிகளை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் தலைமையில் டிசம்பர் 3ஆம் தேதி தேர்தல் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டது.
இன்றுடன் 70 நாட்களாகின்றன. பிப்.22 ஆம் தேதி திமுகவின் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்படும் என அறிவித்திருக்கிறார்கள். அதுவரை நாம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. தோழமை கட்சிகளுக்கு உரிய மரியாதையை கொடுக்கிறோம். அது போல் நாமும் எதிர்பார்க்கிறோம்.
காங்கிரஸ் கட்சி பெரிய கப்பல் போன்றது. கப்பல் நேராக போய்க் கொண்டிருக்கிறது. திரும்புவதற்கு லேட்டாகும். நாம் சரியாக கரை சேர வேண்டும். நாம் சொத்து சுகம் கேட்கவில்லை. மரியாதை கொடுத்தால் போதும்.
திமுகவின் மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் எல்லாம் காங்கிரஸை மட்டம் தட்டி பேசும் போது கோபம் வருகிறது, வருத்தம் ஏற்படுகிறது. திமுகவுடன் கூட்டணி வைத்ததால் அவர்கள் செய்த தவறுகளுக்காக பழியை சுமந்தவர்கள் நாங்க! திமுக மாவட்டச் செயலாளர் கோ.தளபதி பேசியது வருத்தமாக இருக்கிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கோரிக்கை விடுத்து 20 நாட்களாகியும் இதுவரை நடவடிக்கை இல்லை. கோ.தளபதி வருத்தமும் தெரிவிக்கவில்லை.
அவர் பேசியதால் எல்லாரும் காங்கிரஸை சாதாரணமாக நினைத்து பேசுகிறார்கள். இதை கேட்டுக் கொண்டு சும்மா இருப்பவன் நான் கிடையாது. எங்களுக்கு மரியாதை கொடுக்காவிட்டால் திருப்பி அடிப்போம்.
சிலர் சொல்றாங்க, இப்படி பேசிவிட்டு அடுத்த முறை எம்பி தேர்தலில் எப்படி நிற்பீர்கள் என்று! நான் அடுத்த முறை எம்பி தேர்தலில் போட்டியிட போவதில்லை. என்னை பொருத்தமட்டில் தன்மானம்தான் முக்கியம். விருதுநகருக்கு எம்பியாகணும் என்றா நான் வந்தேன். ராகுல் காந்தி சொன்னார் நான் போட்டியிட்டேன். என்னை பொருத்தவரை காங்கிரஸ் கட்சிதான் என்னுடைய உயிர். மற்றபடி இந்த எம்பி, எம்எல்ஏ... மண்ணாங்கட்டி, என் வாயில்ல இருந்து வார்த்தை நல்லா வந்துடும்.
நான் சாகும் போதும் கூட காங்கிரஸ்காரனாகத்தான் சாவேன். நாங்கள் கேட்பது மரியாதையை மட்டும்தான். நாங்கள் கமிஷன் கேட்கவில்லை, ரோடு கான்ட்ராக்ட் கேட்கவில்லை. நான் எம்பியாகி 13 வருஷமாகிறது. யாராவது ஒரு ஆள் நான் கமிஷன் வாங்கியதாக சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம். அதெல்லாம் எனக்கு தேவையே இல்லை. இப்படி மாணிக்கம் தாகூர் கடுமையாக விமர்சித்திருந்தார்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications