மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அஜித் பவார் சொல்வதெல்லாம் பொய்.. பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை.. சரத்பவார் திட்டவட்டம்

Google Oneindia Tamil News

Recommended Video

    தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. அஜீத் பவார் பிரிந்து வர இதுதான் காரணமா?

    மும்பை: அஜித் பவார் சொல்வதெல்லாம் பொய், பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என என்சிபி தலைவர் சரத்பவார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிராவில் ஆளுநர் அழைத்தும் ஆதரவு கடிதம் கொடுக்க முடியாததால் ஆட்சி அமைக்க முடியாது என பாஜக கூறிவிட்டது. இந்த நிலையில் நேற்று காலை 8 மணிக்கு என்சிபியின் அஜித் பவாரின் ஆதரவுடன் முதல்வராக தேவேந்திர பட்னவீஸ் பதவியேற்றார்.

    துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றார். இதையடுத்து இந்த மாதம் 30-ஆம் தேதிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என புதிய அரசுக்கு ஆளுநர் கோஷ்யாரி உத்தரவிட்டிருக்கிறார்.

    ஆளுநர் வாய்ப்பு கொடுத்தார்.. நீங்கள் ஆட்சி அமைக்கவில்லை.. அதனால்தான்.. அரசு தரப்பு ஷாக் வாதம்! ஆளுநர் வாய்ப்பு கொடுத்தார்.. நீங்கள் ஆட்சி அமைக்கவில்லை.. அதனால்தான்.. அரசு தரப்பு ஷாக் வாதம்!

    தேசியவாத காங்கிரஸ்

    தேசியவாத காங்கிரஸ்

    நேற்று முன் தினம் இரவு வரை சிவசேனா- காங்கிரஸ்- என்சிபி கூட்டணியே ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மகாராஷ்டிராவில் நடந்த திடீர் ட்விஸ்ட்டால் பரபரப்பு எழுந்தது. இந்த நிலையில் துணை முதல்வராக பதவியேற்ற அஜித் பவார் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் நான் தேசியவாத காங்கிரஸில்தான் இருக்கிறேன். எப்போதும் அதில் தான் இருப்பேன்.

    மக்கள் முன்னேற்றம்

    மக்கள் முன்னேற்றம்

    சரத்பவார்தான் என்னுடைய தலைவர். அடுத்த 5 ஆண்டுகளுக்கு பாஜக- என்சிபி கூட்டணி நிலையான ஆட்சியை மகாராஷ்டிராவில் கொடுக்கும். மாநிலம், மக்களின் முன்னேற்றத்துக்காக நாங்கள் பாடுபடுவோம் என தெரிவித்தார்.

    ஒருமித்த முடிவு

    ஒருமித்த முடிவு

    இதற்கு மறுப்பு தெரிவித்து சரத்பவார் கூறுகையில் பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. சிவசேனா- காங்கிரஸுடன் கூட்டணி என்சிபி கூட்டணி என்பது ஒருமித்தமாக எடுத்த முடிவு.

    குழப்பம்

    பாஜக- என்சிபி கூட்டணி நிலையான ஆட்சியை மகாராஷ்டிராவில் கொடுக்கும் என அஜித் பவார் தவறான தகவலை அளித்துள்ளார். அவர் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் கூறியுள்ளார் என சரத்பவார் தெரிவித்துள்ளார்.

    English summary
    NCP leader Sharad Pawar says that There is no question of forming an alliance with BJP. Ajit Pawar statement is false.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X