டிசிஎஸ் நாசிக்: 30 நாள் போலீஸ் அன்டர்கவர் ஆப்ரேஷன்.. அடுத்தடுத்து வெளியான திடுக்கிடும் தகவல்!
மும்பை: டிசிஎஸ் நிறுவனத்தின் நாசிக் பிபிஓ அலுவலகத்தில் பல பெண் பணியாளர்கள், மூத்த ஊழியர்கள் மீது பாலியல் தொல்லை, திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றுதல் மற்றும் மத மாற்றத்திற்கு அழுத்தம் கொடுத்ததாக புகார் அளித்துள்ளனர். இந்த புகார்கள் பூதாகரமான விஷயமாக மாறியுள்ளது. மேலும், இந்த புகார்களை HR பிரிவு நீண்ட காலமாக கவனிக்காமல் இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுக்குறித்து அரசு விசாரித்து வருவதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் நாசிக் போலீசார் ஏழு பேரை கைது செய்துள்ளனர், இதில் ஒரு பெண் HR மேலாளரும் அடங்குவார். இந்த விவகாரத்தை முழுமையாக விசாரணை செய்ய சிறப்பு விசாரணைக் குழு (SIT) அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் இந்த குற்றச்சாட்டுகளை மிகுந்த கவலைக்குரியதாகக் கூறி உள்நிறுவன விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் டிசிஎஸ் நிறுவனமும் விசாரணைக்கு உட்பட்ட அனைத்து ஊழியர்களையும் இடைநீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

போலீஸ் அன்டர்கவர் ஆப்ரேஷன்
பிப்ரவரி மாதத்தில் நாசிக் போலீசாருக்கு ஒரு முக்கியமான தகவல் வருகிறது..
நாசிக் டிசிஎஸ் பிபிஓ அலுவலகத்தில் பணியாற்றும் இளம் ஹிந்து பெண் ஒருவர், தான் வேலை இடத்தின் நெருக்கடியால் இஸ்லாமிய பழக்கவழக்கங்களை பின்பற்றத் தொடங்கியதாகக் கூறப்பட்டது. அவரது குடும்பத்தினர் இந்த மாற்றத்தை கவனித்து, அப்பெண்ணை வேலைக்கு அனுப்புவதை நிறுத்தினர். இந்தத் தகவலை அடுத்து, நாசிக் போலீஸ் ஒரு ரகசிய திட்டத்தை தீட்டியது. சுமார் ஒரு மாத காலம், போலீஸ் அதிகாரிகள், அதிலும் பெண் கான்ஸ்டபிள்கள் உட்பட பலர் அலுவலகத்தின் ஹவுஸ்கீப்பிங் ஊழியர்களாக உள்ளே நுழைந்தனர்.
இந்த போலீஸ் அன்டர்கவர் ஆப்ரேஷனில் நிறுவனத்தின் தினசரி நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்தனர். குறிப்பாக மூத்த பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் மீது அதிகப்படியான கவனம் செலுத்தினர். இந்த ரகசிய கண்காணிப்பு மூலம் பல உண்மைகள் வெளியானதாக போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
பல வாரங்கள் தொடர்ந்து நடந்த இந்த மறைமுக கண்காணிப்பில், பணியிடத்தில் நடந்த தினசரி செயல்பாடுகள் கவனிக்கப்பட்டு, மேலதிகாரிகளுக்கு தகவல்கள் அனுப்பப்பட்டன. இந்த போலீஸ் அன்டர்கவர் ஆப்ரேஷன் மூலம் ஆரம்ப நிலை குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது தான் முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

முதல் புகார் மற்றும் வழக்கு பதிவு
இதை தொடர்ந்து மார்ச் மாதத்தில் டியோலாலி போலீஸ் நிலையத்தில் முதல் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. ஒரு இளம் பெண் ஊழியர், தன் சக ஊழியர் தானிஷ் ஷேக் மீது புகார் அளித்தார். அவர் தனது திருமணத்தை மறைத்து, திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து உறவு வைத்ததாகவும், பின்னர் அவளது மதப் பழக்கங்களை மாற்ற முயற்சித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்தப் புகாரின் அடிப்படையில் தானிஷ் ஷேக் மற்றும் தௌசிப் அத்தார் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். தௌசிப் அத்தாரின் மொபைல் போனில் இருந்த புகைப்படங்கள் மேலும் பல புகார்களுக்கு வழிவகுத்தன. அந்த போனில் மற்றொரு பெண் ஊழியர் புர்கா அணிந்த புகைப்படம் இருந்தது. இதனால் விசாரணை விரிவடைந்தது.
ஒன்பது எஃப்ஐஆர்கள்
விசாரணை விரிவடைந்தது மூலம் மார்ச் 26 முதல் ஏப்ரல் 3 வரை டியோலாலி கேம்ப் மற்றும் மும்பை நாகா போலீஸ் நிலையங்களில் மொத்தம் ஒன்பது எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான புகார்கள் 18 முதல் 25 வயது வரையிலான இளம் பெண் ஊழியர்களிடம் இருந்து வந்துள்ளன.
பாலியல் துன்புறுத்தல், உடல் ரீதியான தொடுதல், பாலியல் ரீதியான பேச்சுகள், பணி சுமையை அதிகரித்து அழுத்தம் கொடுத்தல், மத மாற்றத்தை கட்டாயப்படுத்துதல் போன்ற குற்றச்சாட்டுகள் இதில் அடங்கும். இதை தொடர்ந்து மும்பை போலீசார் BNS சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. முதலில் புகார் அளிக்க பயந்த பெண்கள், கைதுகள் நடந்த பிறகு தைரியமாக முன்வந்ததாக போலீஸ் தெரிவித்துள்ளது.
ஏழு பேர் கைது
இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஆறு ஆண்கள் மற்றும் ஒரு பெண் எச்ஆர் அதிகாரி அடங்குவர். இவர்களில் பலர் டீம் லீடர்கள் மற்றும் மூத்த ஊழியர்கள். கைது செய்யப்பட்ட எச்ஆர் அதிகாரி, நிறுவனத்திற்குள் வந்த பாலியல் தொல்லை புகார்களை புறக்கணித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். நிதா கான் என்ற மற்றொரு குற்றவாளி இன்னும் தலைமறைவாக உள்ளார். அவரை தொழில்நுட்ப உதவியுடன் போலீஸ் தேடி வருகிறது. இந்தக் கைதுகள் டிசிஎஸ் நிறுவனத்தை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த மும்பையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

நாசிக் அலுவலகத்தின் தற்போதைய நிலை
இந்தச் சம்பவத்தால் நாசிக் டிசிஎஸ் BPO அலுவலகத்தில் பணி நடவடிக்கைகள் பெருமளவு குறைந்துள்ளன. ஊழியர்கள் மிகக் குறைவாகவே வந்து செல்வதாக தெரிகிறது. அலுவலகத்துக்கு வெளியே அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றன.
இருப்பினும், அலுவலகத்தை மூடுவது அல்லது இடம் மாற்றுவது போன்ற முடிவுகளை எடுக்கும் உரிமை நிறுவனத்துக்கு மட்டுமே உள்ளதாக போலீஸ் தெளிவுபடுத்தியுள்ளது. அரசு தரப்பில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.
-
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
இந்தியாவை உலுக்கிய டிசிஎஸ் நாசிக் ஆபீஸ்.. நேரடியாக தலையிட்ட டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் -
IT Jobs: 7 பிரிவுகளில் காலியிடங்கள்.. டிசிஎஸ் தரும் சூப்பர் சான்ஸ்.. ஏப்ரல் 18-ல் இண்டர்வியூ -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம்














Click it and Unblock the Notifications