For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தகுதியில்லாதவர்களுக்கு கடன் மறுக்க வங்கிகளுக்கு உரிமை உண்டு- உயர்நீதிமன்றம்

தகுதியில்லாதவர்களுக்கு கடன் மறுக்க வங்கிகளுக்கு உரிமை உண்டு என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: கடனை திருப்பிச் செலுத்த இயலாத பெற்றோருக்கு கல்விக் கடனை மறுக்கலாம் என சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கல்வி கடன் குறித்த வழக்கு ஒன்றுக்கு இன்று சென்னை நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் கடனை அரசியல் உள்ளிட்ட பல்வேறு நிர்பந்தங்களால் கடன் வழங்குவதில் மக்கள் பணம் வீணாகிறது.

Banks may refuse to give educational loans, says HC

மாணவர்களுக்கு வழங்கப்படும் கடனை பெற்றோரால் திரும்ப செலுத்த இயலுமா என்பதை ஆராய வங்கிகளுக்கு உரிமை உண்டு. கடன் என்பது சிறியதோ, பெரியதோ அதனை வாங்குபவரிடம் வசூலிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதால் தகுதியை ஆராய்தல் சரியான முடிவாகும்.

கடன் வாங்கிவிட்டு ஏமாற்றுபவர்கள் பின்னால் அலைவதை விட முன்கூட்டியே யாருக்கு வழங்கலாம் என முடிவு செய்து வழங்குதல் சரியான செயலாகும். அழுத்தங்களால் வங்கிகள் கடன் கொடுக்கும் போது பொதுமக்கள் பணம் தவறாக பயன்படுத்தப்படுவதோடு, வாங்குபவர் நாட்டை விட்டு சென்று விடுவதும் நடக்கிறது என்று விஜய் மல்லையா, நீரவ் மோடி ஆகியோரை நீதிபதி மறைமுகமாக தாக்கினார்.

English summary
Chennai Highcourt says that Banks may refuse to give educational loans for the students of parents those who are not incapable of paying back.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X