For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேட்டியை மடித்து கட்டி திமுக எம்.எல்.ஏக்கள் ரகளை- மக்களே! நீங்கள் விரும்பியது நடக்கப் போகிறதோ?

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக மக்களே நீங்கள் நினைத்தது போல ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமலாகும் நிலை உருவாகி உள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று நம்பிக்கை கோரும் தீர்மானத்தை சட்டசபையில் முன்மொழிந்தார். ஆனால் திமுக, ஓபிஎஸ் அதிமுக, காங்கிரஸ் கை கோர்த்து ரகசிய வாக்கெடுப்பு தீர்மானமே தேவை என முழக்கங்கள் எழுப்பின.

தனபால் முற்றுகை

தனபால் முற்றுகை

அத்துடன் வரலாறு காணாத வகையில் திமுகவினர் ரகளையில் இறங்கினர். சபாநாயகர் தனபாலை முற்றுகையிட்டு கெரோ செய்தனர்.

அட்டகாசம்

அட்டகாசம்

தனபாலின் கையை பிடித்தும் பேப்பர்களை வீசி எறிந்தும் நாற்காலிகளை உடைத்தும் கலவரத்தில் ஈடுபட்டனர். சபாநாயகர் இருக்கையில் திமுக எம்.எல்.ஏக்கள் கு.க. செல்வம், புரசைவாக்கம் ரங்கநாதன் அமர்ந்து அட்டகாசம் செய்தனர்.

மக்களின் எண்ணம்

மக்களின் எண்ணம்

ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் அல்லது ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்துடன்தான்' திமுக எம்.எல்.ஏக்கள் களமிறங்கினர். ஒட்டுமொத்த தமிழக மக்களும் சசிகலா குடும்பத்தின் பிடியில் தமிழக அரசு போவதை விரும்பவில்லை.

வருகிறது ஜனாதிபதி ஆட்சி?

வருகிறது ஜனாதிபதி ஆட்சி?

இதனால் தற்போதைய அதிமுக அரசு டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும்; ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் என விரும்புகின்றனர். மக்களின் இந்த பேரவாவை நிறைவேற்றும் வகையில்தான் திமுகவினர் ரகளையில் ஈடுபடுகிறார்களோ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

English summary
After the today Assembly violences by DMK MLAs, TamilNadu now moving towards to face the President rule.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X