திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

'அதற்காகத்தான்’ பாமக 2.0! திமுகவுக்கும் அதிமுகவுக்கும் ‘அதில்’ போட்டி.. விளக்கிய அன்புமணி ராமதாஸ்.!

Google Oneindia Tamil News

திருச்சி : அதிமுக வைத்துள்ள எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அடிப்படையில் எதிர்க் கட்சியாக உள்ளது. ஆனால் பாமக வெற்றிகளின் எண்ணிக்கை அடிப்படையில் எதிர்க்கட்சியாக உள்ளது எனவும், மக்களை இணைப்பதற்காக பாமக 2.0 திட்டம் செயல்படுத்தப்படுகிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Recommended Video

    அதற்காகத்தான்’ பாமக 2.0! -அன்புமணி ராமதாஸ் போட்டி

    திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்குபெற பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வருகை தந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருச்சியில் உள்ள பாரத மிகு மின் நிறுவனம் (பெல்) இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் தொழில் நிறுவனம்.

    கடந்த சில ஆண்டுகளாக உற்பத்தியை குறைத்து காட்டி, தனியார்மயம் ஆக்குவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. திருச்சியில் உள்ள பெல் நிறுவனத்தை தனியார்மயமாக்கும் முயற்சி தவிர்த்து, கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள பெல் நிறுவனத்தை , அந்த நிறுவனத்தின் அதிக பங்குகளை வாங்கி, அதை தொடர்ந்து நடத்தி வருகிறது.

    அதிமுக, பாஜக ஓரமா போங்க.. “உண்மையான எதிர்க்கட்சி பாமக தான்” - ஒரே போடாக போட்ட அன்புமணி ராமதாஸ்! அதிமுக, பாஜக ஓரமா போங்க.. “உண்மையான எதிர்க்கட்சி பாமக தான்” - ஒரே போடாக போட்ட அன்புமணி ராமதாஸ்!

    அன்புமணி ராமதாஸ்

    அன்புமணி ராமதாஸ்

    வரும் 17ம் தேதி நடைபெற உள்ள காவிரி மேலாண்மை குழு கூட்டத்தில், கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவது தொடர்பாக விவாதிக்க உள்ளது. இது சட்டத்திற்கும், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கும், தமிழகத்திற்கும் எதிரான செயல். அந்தக் கூட்டத்தில் மேகதாது அணை பற்றி விவாதிக்க, குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை. உடனடியாக நீதிமன்றம் மூலம், அந்த கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அல்லது
    அந்த கூட்டத்தில் மேகதாது அணை பற்றி விவாதிப்பதை தடுக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தின் உயிர் நாடியான காவிரியில், மேகதாது அணை கட்டினால், கடைமடை பாசனத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது.

    ஆன்லைன் சூதாட்ட தடை

    ஆன்லைன் சூதாட்ட தடை

    2021ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் இதுவரை, ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 23 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அந்த விளையாட்டைத் தடை செய்ய சட்ட திருத்தம் கொண்டு வந்து, விரைவில் அமல்படுத்த வேண்டும். போதை பழக்கத்தால் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் கூட சீரழியும் நிலை ஏற்பட்டுள்ளது எனவே, போதைப்பொருள் விற்பனையை தடை செய்ய வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களில், இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தனியாரிடம் ஒப்படைக்கும் பட்சத்தில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது.

    பாமக 2.0 திட்டம்

    பாமக 2.0 திட்டம்

    எதிர்காலத்தில், தமிழகத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில், இட ஒதுக்கீடு இல்லாத நிலை ஏற்பட்டுவிடும். சமூக நீதிக்கு எதிரான அத்தகைய நிலைப்பாட்டை எடுக்க கூடாது. பல அரசியல் கட்சிகள் சூழ்ச்சியால் மக்களை பிடித்துக் கொண்டிருக்கின்றன. அதனால் மக்களுக்கு தேவையான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல், பாதுகாப்பு போன்றவற்றை பற்றி தான் பேச வேண்டும். அதற்காக, வளர்ச்சி அடிப்படையில் மக்களை இணைப்பதற்காக, 2.0 பி.எம்.கே. என்ற செயல் திட்டத்தை கொண்டு வந்துள்ளோம்.

    முதல்வர் ஸ்டாலின்

    முதல்வர் ஸ்டாலின்

    திமுகவும் அதிமுகவும் போட்டி போட்டு பார்கள் நடத்துவதால், டாஸ்மாக் கடைகளை மூடாமல் உள்ளனர்.
    அதிமுக வைத்துள்ள எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அடிப்படையில் எதிர்க் கட்சியாக உள்ளது. ஆனால் பாமக வெற்றிகளின் எண்ணிக்கை அடிப்படையில் எதிர்க் கட்சியாக உள்ளது. காவல் துறையைப் பொருத்தவரை ஏதோ பிரச்னை இருப்பதால் தான் லாக்கப் டெக்கள் அதிகரித்துள்ளன. அவர்களுக்கு மனரீதியான பயிற்சி கொடுக்க வேண்டிய அவசியத்தை இதுபோன்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் மூலம் காவல்துறை மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விடுவார். எனவே முதல்வர், ஒட்டுமொத்த காவல்துறைக்கும் அறிவுரை வழங்க வேண்டும்" என அவர் தெரிவித்தார்.

    English summary
    PMK leader Anbumani Ramadoss said that AIADMK is the opposition party in terms of number of MLAs. But PMK is in opposition in terms of the number of victories and that the PMK 2.0 project is being implemented to unite the people.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X