திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வெளிநாட்டு பயண மோகம்! வீடு வீடாக கைவரிசை காட்டிய பலே ஆசாமி! பொறிவைத்து பிடித்த திருச்சி தனிப்படை!

Google Oneindia Tamil News

திருச்சி: வெளிநாட்டு பயண மோகத்தில் திருச்சியில் பல இடங்களில் கைவரிசை காட்டி வந்த மணிகண்டன் என்ற இளைஞரை தனிப்படை டீம் பொறிவைத்து பிடித்துள்ளது.

சிங்கப்பூர் செல்வதற்காக பயண ஏற்பாடுகளை செய்து வந்த மணிகண்டன் அங்கு செலவு செய்வதற்காக திருச்சியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

கொள்ளையன் மணிகண்டனை மடக்கிப்பிடித்த தனிப்படை காவல் ஆய்வாளர் ஷியாமளா தேவியை திருச்சி மாநகர தெற்கு சரக துணை ஆணையர் ஸ்ரீதேவயும், மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயனும் பாராட்டியிருக்கிறார்கள்.

ஆபாச பேச்சு- 6 மாதம் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கிய அண்ணாமலை- ஆஹோ ஓஹோவென புகழ்ந்த திருச்சி சூர்யா!ஆபாச பேச்சு- 6 மாதம் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கிய அண்ணாமலை- ஆஹோ ஓஹோவென புகழ்ந்த திருச்சி சூர்யா!

திருச்சியில் கொள்ளை

திருச்சியில் கொள்ளை

திருச்சியில் கொலை கொள்ளை உள்ளிட்ட குற்றச் செயல்களை தடுக்க மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு வழங்க வேண்டும் என்பதில் மிக உறுதியாக உள்ள அவர் அதற்கான பணிகளை துறைரீதியாக தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார். இந்நிலையில் திருச்சியில் அடுத்தடுத்து 3 இடங்களில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் அவருக்கு பெரும் சவாலை கொடுத்திருக்கிறது.

களமிறங்கிய தனிப்படை

களமிறங்கிய தனிப்படை

இதையடுத்து செசன்ஸ் கோர்ட் காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஷியாமளா தேவி தலைமையில் தனிப்படை அமைத்து கொள்ளையனை பிடிக்க உத்தரவிட்டார் திருச்சி மாநகர தெற்கு சரக துணை ஆணையர் ஸ்ரீதேவி. இதையடுத்து தனது டீமோடு களமிறங்கிய காவல் ஆய்வாளர் ஷியாமளா தேவி, கொள்ளை நடந்த பகுதிகளில் சிசிடிவி கேமரா காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்து அதனடிப்படையில் கொள்ளையன் மணிகண்டனை மடக்கிப் பிடித்திருக்கிறார்.

48 சவரன்

48 சவரன்

இதனிடையே மணிகண்டனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கோரிமேடு, கருமண்டபம் அசோக் நகர், கே.கே. நகரில் உள்ள நேரு தெரு, ஆகிய மூன்று இடங்களில் 48 சவரன் தங்க நகைகளை திருடியதை ஒப்புக் கொண்டுள்ளார். சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் அங்கு பயணச் செலவுக்கு தன்னிடம் பணமில்லாததால் நகைகளை திருடியதாகவும் தெரிவித்துள்ளார். 2 மாத காலமாக தொடர்ந்து பின் தொடர்ந்து தனிப்படை காவல் ஆய்வாளர் ஷியாமளா தேவி வைத்த பொறியில் சிக்கிய மணிகண்டன் பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டி வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

 நகைகள் மீட்பு

நகைகள் மீட்பு

கொள்ளையன் மணிகண்டனிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்ட காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த மணிகண்டனுடன் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

English summary
A special team has caught a young man named Manikandan, who was showing his hand at many places in Trichy due to his craze for foreign travel.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X