இந்த மாதிரி வார்த்தையை யாராவது சொல்லுவாங்களா?? பணத்துக்காக அப்படி பண்ணல.. கதறி அழுத கூல் சுரேஷ்
சென்னை: நடிகர் கூல் சுரேஷ் உருக்கமாக கதறி அழுத படி பேசிய வீடியோ தற்போது ரசிகர்கள் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் கூல் சுரேஷ் இப்படி செய்துவிட்டாரே என்று பலரும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.
எப்போதும் நக்கல் நையாண்டித்தனத்தோடு அடுத்தவர்களை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் கூல் சுரேசுக்குள் இப்படி ஒரு சோகமா? ? என்று தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

கடின உழைப்பு
சிம்பு நடித்து வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் தற்போது வெற்றிகரமாக தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு சிம்புவின் கடின உழைப்பு மட்டுமல்லாமல் அவருடைய தீவிரமான ரசிகரான கூல் சுரேஷின் பங்களிப்பும் உள்ளது என்று ரசிகர்கள் அதிக அளவில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். செல்லும் இடம் எல்லாம் அங்கே வெந்து தணிந்தது காடு என்று வாசகத்தை ஒலித்து இந்த திரைப்படத்திற்கு அதிக அளவிற்கு பிரமோஷன் செய்தவர் கூல் சுரேஷ் தான். அவர் தற்போது உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உடைந்து போன கார்
வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியான அன்று இவருடைய கார் ரசிகர்களால் உடைக்கப்பட்டது குறித்து சமூக வலைத்தளத்தில் பல வதந்திகள் பரவி வந்ததாகவும் அதைக் குறித்து நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்துள்ளனர். அதனால் வேதனை அடைந்த கூல் சுரேஷ் நெட்டிசன்களுக்கு அறிவுரை கூறி வேண்டுகோள் விடுத்துள்ளார். தன்னுடைய உழைப்பால் வாங்கிய கார் அது அந்த காரை யாரும் அடித்து உடைக்கவில்லை. ரசிகர்கள் என்னை கட்டிப்பிடித்து எனக்கு வரவேற்பு கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் காரில் ஏறி விட்டனர். அதனால் தான் கார் உடைந்து விட்டது என்று கூறி இருக்கிறார்.

பணம் முக்கியம் இல்லை
கார் உடைந்ததால் பலர் சந்தோஷமாக கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளார்கள். அதனைக் குறித்து வருத்தத்தோடு கூல் சுரேஷ் பேசி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வெற்றிக்கு காரணம் கூல் சுரேஷ் உண்டு என்று பலர் கூறி வருவதாகவும், அதனால கூல் சுரேஷுக்கு பணம் வழங்க வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதனை மறுத்து கூல் சுரேஷ் அப்படியெல்லாம் எனக்கு எதுவும் தேவையில்லை. நான் எல்லாமே என்னுடைய தலைவன் சிம்புக்காக தான் பண்ணுனேன். பணம் எனக்கு முக்கியமில்லை என்று ஐசரி கணேசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கண்ணீரோடு நன்றி கூறிய கூல் சுரேஷ்
சிம்பு கூட சொன்னார் எனக்கு கூட தியேட்டருக்கு போனா இந்த மாதிரி வரவேற்பு இருக்குமா? ? என்று தெரியாது. ஆனால் உனக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதை தக்க வைத்து கொள் என்று சொன்னார். இந்த மாதிரி ஒரு ஹீரோ, யார பார்த்து சொல்லுவார். யாராவது இந்த மாதிரி ஒரு வார்த்தைய சொல்லுவாங்களா? எனக்காக சொல்லி இருக்கிறார். ஒருத்தங்க முன்னுக்கு வரது பிடிக்காமல் அவனை எப்படியாவது ஒழிக்கணும் என்று தான் யாரும் நினைப்பாங்க. ஆனால் என்னுடைய தலைவர் சிம்பு எனக்காக குரல் கொடுத்திருக்கிறார். எனக்காக நன்றி தெரிவித்திருக்கிறார். இந்த மாதிரி ஒரு ஹீரோ யாருக்காக கிடைப்பாரா? நான் இதுவரைக்கும் எத்தனையோ தியேட்டருக்கு வந்திருக்கேன். யாருக்கெல்லாமோ ப்ரமோஷன் பண்ணி இருக்கேன். ஆனா இதுவரைக்கும் எந்த ஹீரோவோ, டைரக்டரோ, ப்ரொடியூசரோ ஒரு வார்த்தை கூட சொன்னது இல்லை. என்னோட தலைவன் மட்டும் தான் சொல்லி இருக்கிறார் என்று கண்ணீரோடு சிம்புவுக்கு நன்றி கூறியிருக்கிறார்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications