குடும்ப பிரச்சனைக்கு அடுத்தவர்களை கூப்பிடாதீங்க, விஜய் ஆண்டனியின் அட்வைஸ் அந்த பிரபலங்களுக்கு தானா?
சென்னை: குடும்ப பிரச்சனையில் அடுத்தவர்களை கூப்பிடாதீங்க கும்மி அடிச்சுருவாங்க என்று விஜய் ஆண்டனி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
சமீபத்தில் சமூக வலைதளத்தில் குடும்ப பிரச்சினைகளை கொண்டு பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சின்னத்திரை தம்பதிகளுக்கு தான் விஜய் ஆண்டனி மறைமுகமாக இப்படி ஒரு பதிவா? என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி இருக்கின்றனர்.

விஜய் ஆண்டனி வெளியிட்ட பதிவு
பாடகராகவும், நடிகராகவும், இசையமைப்பாளராகவும் கலக்கி கொண்டிருக்கும் விஜய் ஆண்டனி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு தத்துவத்தை உதிர்த்து இருக்கிறார். திருமண வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு அட்வைஸ் கொடுக்கும் வகையில் விஜய் ஆண்டனி கொடுத்த அறிவுரை வேற லெவல் என்று ஒரு சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இன்னும் ஒரு சிலர் விஜய் ஆண்டனி இப்படி ஒரு பதிவு வெளியிட என்ன காரணமாக இருக்கும் என்று ஆராய்ந்து வருகின்றனர்.

அவர்களுக்காகவும் இருக்கலாம்
உங்க குடும்பத்துல ஏதாவது பிரச்சனைன்னா, முடிஞ்ச வரைக்கும் உங்களுக்குள்ள அடிச்சுக்கோங்க, இல்ல விட்டு விலகிடுங்க, இல்ல கையில கால்ல விழுந்து சமாதானம் பண்ணி சேர்ந்து வாழுங்க. அடுத்தவனை மட்டும் கூப்பிடாதீங்க. கும்மி அடிச்சு கதையை முடிச்சிருவாங்க என்று விஜய் ஆண்டனி பதிவிட்டு இருக்கிறார். இவர் பதிவிட்ட ஒரு சில நிமிடங்களில் இந்த பதிவு ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது இவருடைய அட்வைஸ் சின்னத்திரை தம்பதிகளான நடிகர் அர்ணவ் மற்றும் நடிகை திவ்யா ஸ்ரீதருக்காக தான் இருக்குமா? என்று ஒரு தரப்பினர் கேள்விகளை எழுப்பி இருக்கின்றனர்.

காதல் முதல் சண்டை வரை
கேளடி கண்மணி சீரியல் இன் மூலமாக சீரியலில் அறிமுகமான திவ்யா ஸ்ரீதர் அந்த சீரியலில் அவரோடு நடித்த அர்ணவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார். இவர்கள் இருவரும் ஐந்து வருடங்கள் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தாலும் தற்போது தான் ஒரு சில மாதங்களுக்கு முன்பு திருமணத்தை முடித்து இருக்கின்றனர். இந்த நிலையில் திவ்யா இப்போது கர்ப்பமாக இருக்கிறார். ஆனால் இவர்கள் இருவருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திவ்யா தன்னுடைய கணவர் மீது போலீசில் கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தார்.

பிரச்சனை பெரிதாக காரணம்
திவ்யா, அர்ணவ் மீது கம்ப்ளைன்ட் கொடுத்த அடுத்த நொடியே அர்ணவ் அவருடைய மனைவியான திவ்யா மீது கம்ப்ளைன்ட் கொடுக்க....இப்படி இவர்கள் இருவரும் ஆதாரத்தை வெளியிடுகிறோம் என்று குடும்ப பிரச்சனைகளை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். இதனால் கருத்து சொல்கிறேன் என்கிற பெயரில் இவர்களுக்குள் இருந்த பிரச்சனை நாளுக்கு நாள் பெரியதாகிக் கொண்டிருக்கிறது. இதை நினைத்து தான் விஜய் ஆண்டனி தற்போது இந்த ஒரு பதிவை வெளியிட்டு இருப்பார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications