
"அந்த” வார்த்தையை சொல்லி ஜாமீன் பெற்ற அர்ணவ்.. ஆனால் இப்பவும் இப்படித்தான் இருக்கிறார்- நடிகை திவ்யா
சென்னை: சின்னத்திரை நடிகை ஆன திவ்யா ஸ்ரீதர் தன்னுடைய கணவரை குறித்து உருக்கமாக பேசியதை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் செல்லமா சீரியலின் கதாநாயகனாக நடிக்கும் அர்ணவ் அவருடைய மனைவியை இனி நன்றாக கவனித்துக் கொள்கிறேன் என்று கூறி ஜாமினில் வெளியே வந்திருக்கிறாராம்.
திருமண நாளில் கிடைத்த மகிழ்ச்சி..நெகிழ்ச்சியாய் பதிவு வெளியிட்ட விஜேமணிமேகலை..குவியும் வாழ்த்துக்கள்

பரபரப்பை ஏற்படுத்திய குடும்ப பிரச்சனை
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் திவ்யா ஸ்ரீதர் அவருடைய கணவரோடு ஏற்படுத்த ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் குடும்ப பிரச்சனை சமூக வலைதளத்தில் ஒரு சில மாதங்களாகவே பரபரப்பை ஏற்படுத்தியது. ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் திவ்யா மருத்துவமனையில் சேர்ந்து பேசிய வீடியோ பெரிய அளவில் வைரலாக பரவி வந்தது. விஜய் டிவியில் செல்லம்மா சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் அர்ணவ் இவரை திருமணம் செய்து இருக்கிறார் என்பது சமூக வலைதளம் மூலமாகத்தான் ரசிகர்களுக்கு தெரிந்தது. இந்த நிலையில் இவர்களுடைய திடீர் திருமணம் அதற்குப் பிறகு ஏற்பட்ட பிரச்சனைகள் இப்ப வரைக்கும் பரபரப்பாக பலராலும் பேசப்பட்டு வருகிறது.

போன் கூட பண்ணவில்லை
இந்த நிலையிலும் இவர்களுடைய பிரச்சனைக்கு காரணமாக திவ்யா ஸ்ரீதர் கருதும் அன்ஷிதாவுடன், அர்ணவ் பல ரீல்ஸ் வீடியோக்களை எடுத்து சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். திவ்யா ஸ்ரீதர் தன்னுடைய கணவரான ஹன்சிகா உடன் நெருக்கமாக பழகி வருகிறார் என்று தான் இவர்களுக்குள் அதிகமாக சண்டை வந்திருக்கிறது. அதை குறித்து பல வீடியோக்களில் திவ்யா பேசியிருந்தார். இந்த நிலையில் திவ்யா கொடுத்த புகாரின் காரணமாக அர்ணவ் 15 நாள் நீதிமன்ற காவலில் இருந்து ஜாமினில் வெளியே வந்திருக்கிறார். ஜாமீனில் வருவதற்காக நான் இனி என்னுடைய மனைவியை கவனித்துக் கொள்கிறேன் என்ற ஒரு காரணத்தையும் சேர்த்து இருந்தாராம். ஆனால் வெளியே வந்து ஒரு முறை கூட தனக்கு போன் செய்யவில்லை என்று திவ்யா கூறி இருக்கிறார்.

திடீர் வளைகாப்பு
அதுபோல அர்ணவுக்கு ஜாமின் கொடுக்கப்படும் போது அவர் இனி திவ்யாவை தொந்தரவு செய்யக்கூடாது. அதுபோல திவ்யாவின் வீட்டிற்கு செல்லக்கூடாது என்று கண்டிஷன் கொடுத்திருந்தார்களாம். அதுபோல இப்ப வரைக்கும் அர்ணவ் திவ்யாவின் வீட்டில் இல்லையாம். தனியாகத்தான் இருவரும் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் மகராசி சீரியலில் இவருடன் நடித்த நடிகர்கள் அனைவரும் திவ்யாவிற்கு வீட்டிற்கு சென்று வளைகாப்பு நடத்தி இருந்தனர். அதை குறித்து கூட சமூக வலைத்தள பக்கங்களில் ஜாடையாக பதிவு வெளியிட்டிருந்தார் என்று திவ்யா குறிப்பிட்டு இருக்கிறார்.

வெறுப்பேற்ற செய்யும் செயல்
கர்ப்பமாக இருக்கும் மனைவிக்கு பிடிக்கவில்லை என்று சொன்ன பிறகும் மீண்டும் மீண்டும் என்னை வெறுப்பேற்ற வேண்டும் என்பதற்காகத்தான் அந்த சீரியலில் நடிக்கும் பெண்ணோடு இவர் சுற்றிக்கொண்டு அதை வீடியோவாக எடுத்து தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு என்னை மேலும் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருகிறார் என்று உருக்கமாக பேசி இருக்கிறார். இதை குறித்து ரசிகர்கள் பலரும் திவ்யாவிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.