இப்பதானே கல்யாணம்..அதற்குள் ரித்திகா கூறிய ஹேப்பி நியூஸ்..குவியும் வாழ்த்துக்கள்..அப்போ இனி சீரியல்?
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவாக நடித்துவரும் ரித்திகாவிற்கு சமீபத்தில் தான் திருமணம் முடிந்தது. அதற்குள் சந்தோஷமான செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்.
திருமணத்திற்குப் பிறகு ஹனிமூன் சென்றிருந்த ரித்திகா தற்போது தன் சொந்த ஊருக்கு திரும்பி இருக்கிறார்.
ரசிகர்கள் இன்னும் திருமண வாழ்த்து சொல்லி முடிக்காத நிலையில் திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆகிவிட்டது என்ற மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து இருகின்றார்.

ராஜா ராணி சீரியல் வினோதினி
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலின் மூலமாக ரித்திகா தமிழ் சீரியலில் அறிமுகமாகி இருக்கிறார். அதுவும் அந்த சீரியலில் மூணாவது வினோதினியாக கதாநாயகனின் தங்கை கேரக்டரில் இவர் நடித்திருப்பார். ஏற்கனவே இரண்டு கதாநாயகிகள் அந்த சீரியலில் மாற்றப்பட்ட நேரத்தில் மூன்றாவதாக இவருடைய அறிமுகம் கிடைத்தது. ரித்திகாவின் நிஜமான பெயர் தமிழ் செல்வி தானாம். இவருடைய சொந்த ஊர் கோயம்புத்தூர். ஸ்கூல், காலேஜ் எல்லாமே ரித்திகா கோயம்புத்தூரில் தான் படித்திருக்கிறார். இவர் பி ஏ தமிழ் படித்திருக்கிறாராம் இவருக்கு எம்எஸ்சி சாஃப்ட்வேர் சிஸ்டம், எம்பில், பிஹெச்டி எல்லாமே படிக்க வேண்டும் என்று தான் ஆசையாக இருந்ததாம். படிப்பில் டாக்டர் பட்டம் பெற வேண்டும் என்று ஆசையாக இருந்த இவர் நடிப்பிற்கு வந்திருக்கிறார்.

குடும்ப கஷ்டம்
படிப்பில் கெட்டிக்காரியாக இருந்தாலும் ரித்திகா பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போதே வீட்டில் பணக்கஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. அப்போதுதான் இவர் பார்ட் டைம் வேலை பார்க்க தொடங்கியிருந்தாராம். ஆரம்பத்தில் கோயம்புத்தூரில் உள்ள ஒரு லோக்கல் சேனலில் இவர் தொகுப்பாளராக இருந்திருக்கிறார். அதன் மூலமாக பல லைவ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறாராம். அப்போதே ரசிகர்களோடு இவர் பழகி இருக்கிறார். அதற்கு பிறகு தான் இவர் விஜே வாக வேண்டுமென்று வாய்ப்பு தேடிக் கொண்டிருந்திருக்கிறார். அந்த நேரத்தில் இவருக்கு மும்பையில் ஒரு வேலை கிடைக்க இவர் அங்கே சென்று விட்டாராம். இரண்டு வருடம் வேலை பார்த்துவிட்டு மீண்டும் சென்னைக்கு வரும்போது இவருக்கு ராஜா ராணி சீரியலில் நடிப்பதற்காக வாய்ப்பு கிடைத்ததாம்.

ஹனிமூன் கொண்டாட்டம்
இந்த நிலையில் ரித்திகா தன்னுடைய கணவருடன் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்று இருந்தார். அங்கிருந்தபடியே தினமும் புகைப்படங்களை வீடியோக்களையும் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வந்தார். ரசிகர்கள் இவரை பாக்கியலட்சுமி சீரியலில் மிஸ் பண்ணுவதாகவே கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலிலும் கதை அமிர்தாவை சுற்றியே வந்து கொண்டிருக்கிறது. இதனால் இவர் இனி விரைவில் சீரியலுக்கு வருவார் என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

ஒரு மாதம் ஆகிவிட்டதாம்
இந்த நிலையில் தற்போது இவர் இப்போதுதான் திருமணம் முடிந்த மாதிரி இருந்தது அதற்குள் ஒரு மாதம் ஆகிவிட்டது என்று தன்னுடைய முதல் மாத திருமண நாளை கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கிறார். திருமண நாளில் இவர் எடுத்த வீடியோக்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார். இதற்கு வாழ்த்துக்களும் லைக்குகளும் அதிகரித்து வருகிறது. அடுத்த மகிழ்ச்சியான செய்தியை விரைவில் சொல்லுங்கள் என்று பலர் வேண்டுகோள் வைக்க, சிலர் இவர் தொடர்ந்து சீரியலில் நடிப்பாரா? இல்லையா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications