கணவருடன் கொஞ்சிக் குலாவி வீடியோ.. ஆடிக்கு முன்பே கல்யாணத்தை முடிச்சுக்கிட்ட சஹானா!
சென்னை : அழகு சீரியலில் நடிச்சாரே சஹானா.. அவரை ஞாபகம் இருக்கா. அவருக்கு திடீரென கல்யாணமாகி விட்டது. பலருக்கும் இது சர்ப்பிரைஸ் தான். ஆனால் இது காதல் கல்யாணம் எல்லாம் இல்லையாம். அரேன்ஞ்டு மேரேஜ்தானாம்.
திடீரென கூடி வந்ததாலும், கொரோனா கட்டுப்பாடுகள் இருப்பதாலும் சீக்கிரமே கல்யாணத்தை முடித்து விட்டார்களாம்.
கல்யாண மாப்பிள்ளையின் பெயர் அபிஷேக். இவர் ஒரு டாக்டராம். புதுச்சேரிதான் சொந்த ஊராம். தனது கல்யாணம் குறித்த வீடியோவைப் போட்டு விட்டு ஹனிமூனுக்குப் போய் விட்டார் சஹானா.

சன் டிவி அழகு சீரியல்
அழகு சீரியல் சன் டிவியில் வெளியான சீரியல்களில் முக்கியமானது. குறுகிய காலத்திலேயே பெரிய பெயரைப் பெற்ற சீரியல் இது. ரேவதிதான் முக்கியப் பாத்திரத்தில் நடித்தார். அவருக்கு ஜோடியாக தலைவாசல் விஜய் நடித்திருந்தார். அந்த சீரியலில்தான் சஹானாவும் நடித்திருந்தார். இந்த சீரியலில் சஹானாவுக்கும் நல்ல பெயர் கிடைத்து வந்தது. ஆனால் அவர் பாதியிலேயே அதிலிருந்து விலகி விட்டார்.

சீரியலை விட்டு விலகிய சஹானா
சீரியலை விட்டு அவர் விலக பெரிய காரணமெல்லாம் இல்லை. அவரது ரோலுக்கு முக்கியத்துவம் இல்லை என்று உணர்ந்ததால்தான் அவர் விலகி விட்டார். பின்னர் அழகு சீரியலும் கூட நின்று போய் விட்டது. கொரோனா வேறு இடையில் குறுக்கிட்டதால் ஷூட்டிங்குகள் பாதிக்கப்பட்டதும் ஒரு காரணம். இந்த நிலையில்தான் தற்போது திடீரென தனது கல்யாணத்தை முடித்து விட்டு ஜாலியாக செட்டிலாகி விட்டார் சஹானா.

சினிமாவில் சில காலம்
அழகு சீரியலை விட்டு விலகிய கையோடு சில சினிமாப் படங்களிலும் தலை காட்டினார் சஹானா. ஆனால் பெரிய அளவில் அது அவருக்குக் கை கொடுக்கவில்லை. சில தெலுங்குப் படங்களில் நடித்தார். ஆனால் அவருக்கு அவை பெயர் சொல்லும்படி அமையவில்லை. மீண்டும் சீரியலுக்குத் திரும்பினார். தான் விலகிய அழகு சீரியலிலேயே மீண்டும் நடித்தார். ஆனால் கொரோனா வந்து சீரியலையே நிறுத்தி விட்டது. இந்த நிலையில்தான் தற்போது இவருக்குத் திருமணமாகியுள்ளது.

டாக்டர் அபிஷேக்குடன் திருமணம்
சமீபத்தில்தான் தான் கட்டிக் கொள்ளப் போகும் டாக்டர் அபிஷேக் குறித்து இன்ஸ்டாகிராமில் ஒரு படமும், வீடியோவும் போட்டிருந்தார் சஹானா. படத்தில் ஜோடியாக இருவரும் காணப்பட்டனர். ஆனால் வீடியோவிலோ இருவரும் செம ரொமான்டிக்காக காட்சி தந்தனர். அதைப் பார்த்த ரசிகர்கள், அடடா கல்யாணத்துக்கு சரியான ஒத்திகை பார்க்கறீங்க போலயே என்று கலாய்த்து வந்தனர். இந்த நிலையில்தான் சிம்பிளாக அதேசமயம், சிறப்பாக அவரது கல்யாணம் முடிந்துள்ளது. ஆடி மாதம் குறுக்கிட்டதால் அதற்கு முன்பாகவே திருமணம் நடத்த வேண்டி சீக்கிரமே முடித்து விட்டனராம்.

திருமணம் முடித்த கையோடு ஹனிமூன்
கல்யாணம் முடித்த கையோடு ஜோடியாக இருவரும் ஹனிமூன் போயுள்ளனராம். சென்னை திரும்பியதும் நண்பர்கள், சின்னத்திரையுலகினருக்காக ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளனராம். ஆகஸ்ட் 14ம் தேதி இது நடைபெறும் என்று தெரிகிறது. கல்யாணத்தை சிம்பிளாக முடித்து விட்டதால் இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு பலரையும் வரவைக்க திட்டமிட்டுள்ளனராம். சஹானாவின் கல்யாணச் செய்தி அறிந்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைக் குவித்து வருகினறனர்.

ஆச்சரிய அதிர்ச்சியில் ரசிகர்கள்
ரசிகர்களுக்கு இவரது கல்யாணமே ஒரு ஆச்சரிய அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. அக்கா கல்யாணம் ஆயிருச்சா.. சொல்லுங்கக்கா என்று பலரும் ஆச்சரியத்துடன் கேள்வி கேட்டுள்ளனர். அக்கா கல்யாணம் எப்ப ஆச்சு.. எங்களுக்கெல்லாம் சொல்லவே இல்லை என்று பலரும் செல்லமாக கோபித்துக் கொண்டுள்ளனர். ஆனால் எல்லோருக்கும் ஹனிமூனிலிருந்து திரும்பிய பின்னர்தான் பதில் தரப் போகிறார் சஹானா. அதுவரை எனது ஹனிமூன் கொண்டாட்ட படங்களைப் பாருங்கன்னு அதையும் போட்டு வைத்திருக்கிறார். பலரும் அதையும் கொஞ்சி கமெண்ட் போட்டுக் கொண்டுள்ளனர்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications