“காதலரை அறிமுகப்படுத்திய அபிராமி” ஒரு வரி கேப்ஷனில் முழு காதலை சொன்ன பிக் பாஸ் நடிகை.. பிரபலங்கள் அட்வைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான அபிராமி வெங்கடாச்சலம், தற்போது தனது தனிப்பட்ட வாழ்க்கையை வெளிப்படையாக பகிர்ந்துள்ள ஒரு இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் மீண்டும் பேசுபொருளாகி இருக்கிறார். இதுவரை தனது காதல் வாழ்க்கையை அதிகமாக வெளியில் காட்டாமல் இருந்த அவர், இந்த முறை நேரடியாக தனது காதலரை அறிமுகப்படுத்தியிருப்பது ரசிகர்களுக்கு பெரிய ஆச்சரியமாக அமைந்துள்ளது.

Abhirami Venkatachalam Abhirami Bigg Boss

பிக் பாஸ் அபிராமி போஸ்ட்

அபிராமி பகிர்ந்திருக்கும் புகைப்படம் சாதாரணமானது அல்ல. அது ஒரு ஸ்கெட்ச் ஓவியம். அந்த ஓவியத்தில், அவர் தனது காதலரை பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு இயல்பான தருணம் அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த படமே ரசிகர்களை கவர்ந்திருந்தாலும், அதற்கு அவர் எழுதியிருந்த காப்ஷன் தான் பலரின் மனதை தொட்டுள்ளது.

அவர் எழுதியுள்ள, "உன் கண்கள் என்னை பார்த்தாலே, வார்த்தைகள் தேவையில்லை... ஆயிரம் காதல் கடிதங்கள் எழுதப்பட்டு கொண்டே இருக்கிறது போல எனக்கு உணர்கிறேன்." இந்த ஒரு வரியிலேயே அவர் என்ன உணர்கிறார் என்பதை முழுமையாக சொல்லியிருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மாடலிங்கில் இருந்து சினிமா வரை

அபிராமி வெங்கடாச்சலம் முதலில் மாடலாக தனது வாழ்க்கையை தொடங்கியவர். "மிஸ் தமிழ்நாடு" பட்டம் பெற்றதன் மூலம் கவனம் பெற்றார். அதன் பிறகு சினிமா வாய்ப்புகள் அவரை தேடி வந்தது.

நோட்டா படத்தின் மூலம் அறிமுகமான அவர், பின்னர் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தது அவருக்கு பெரிய திருப்பமாக அமைந்தது. அந்த படத்தில் நடித்த கதாபாத்திரம் மூலம் அவர் ஒரு திறமையான நடிகையாக கவனிக்கப்பட்டார்.

Abhirami Venkatachalam Abhirami Bigg Boss

பிக் பாஸ் பிரபலம்

அபிராமியின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி தான்.அந்த வீட்டுக்குள், அவர் மனதில் பட்டதை பல இடங்களில் வெளிப்படையாக பேசி இருக்கிறார். அதனாலயே அவர் பற்றிய பல சர்ச்சைகளும் நெகட்டிவ் உருவாகி வந்தது. ஆரம்பத்தில் கவினுடன் காதல் என்பது போல பழகி பேசி வந்தார்.

பிறகு முகினுடன் அவருடைய நட்பு வேறு விதமாக மாறியது. அது அந்த நேரத்தில் பெரிதாக பேசப்பட்டது ஆனால் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு தனது தவறை உணர்ந்து அவரிடம் மன்னிப்பு கேட்டு இருந்தார்.

காதல் தொடர்பான விஷயங்களும், மற்ற போட்டியாளர்களுடன் ஏற்பட்ட மோதல்களும் அவரை தொடர்ந்து ஹெட்லைன்ஸில் வைத்தது. ஆனாலும், அவர் போல உண்மையாக நடந்துகொண்டவர் குறைவு என்ற பாராட்டும் அவருக்கு கிடைத்தது.

Abhirami Venkatachalam Abhirami Bigg Boss

தன்னம்பிக்கை குறையவில்லை

அபிராமி எப்போதும் நேரடியாக பேசுபவர். அதனால் சில நேரங்களில் விமர்சனங்களும் வந்தது. ஆனால் அதையே அவர் தனது பலமாக மாற்றிக்கொண்டார்.

பிக் பாஸ்க்குப் பிறகும், சில கருத்துக்கள் மற்றும் பதிவுகள் காரணமாக அவர் மீண்டும் மீண்டும் பேசப்பட்டார். இருந்தாலும், அதனால் அவர் பின்னடைவது போன்ற எதுவும் நடக்கவில்லை. தனது பாதையில் அவர் தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கிறார்.

இன்றைய அபிராமி

தற்போது அபிராமி சீரியல்களிலும், வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். அதுபோல சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். இந்த நிலையில் இந்த புதிய காதல் பதிவு, அவரது வாழ்க்கையின் இன்னொரு முக்கிய தருணமாக மாறியுள்ளது. அதுபோல அவர் வெளியிட்ட பதிவுக்கு பல பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கின்றனர். இன்னும் சில பிரபலங்கள் இனியாவது நீங்கள் வாழ்க்கையில் அழவே கூடாது, உங்களுடைய வாழ்க்கை துணையுடன் நீங்கள் மகிழ்ச்சியான சந்தோஷமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று அட்வைஸ் கொடுத்து இருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+