பிக் பாஸ் தமிழ் 5:வெற்றிபெற்ற ராஜு...குதூகலமிட்ட பிரியங்கா..வேற லெவல் மூவ்மெண்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் ஐந்தாவது சீசனின் வெற்றியாளராக ராஜு தேர்ந்தெடுக்கப்பட்டதும் பிரியங்கா செய்த செயல் வேற லெவல் வரவேற்பை பெற்றுள்ளது.

என்னதான் தான் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடு இருந்தாலும் அந்த தருணத்தில் ராஜூ திகைத்துப்போய் உள்ளார்.

திகைத்துப்போன ராஜு

திகைத்துப்போன ராஜு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 5 வது சீசனில் டைட்டில் வின்னராக ராஜூ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தான் ஜெயிக்க போகிறார் என்று ரசிகர்கள் ஆரம்பம் முதலே சமூக வலைத்தளங்களில் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ரசிகர்களின் பேராதரவோடு பெரிய அளவில் வாக்குகள் வித்தியாசத்தில் ராஜு வெற்றி பெற்றுள்ளார். ஆனால் வின்னராக அவருடைய பெயரை உச்சரித்ததும் ஒரு நிமிடம் திகைத்து போன தருனத்தை பார்த்து பலரும் வியந்து போயுள்ளனர்.

போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி

போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி

நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசன்களில் கலந்து கொள்வதற்காக கடந்த 4 சீசன் களாக போராடிக்கொண்டிருந்த ராஜுவுக்கு 5 வது சீசனில் டைட்டில் வின்னர் பட்டம் கிடைத்திருப்பது பெரிய அளவில் மகிழ்ச்சிதான். ஆரம்பம் முதலே இந்த சீசனில் ஜெயித்து விட வேண்டும் என்று இவர் தன்னுடைய கோபத்தையும் குறைத்து, நிதானத்தையும் நிலை நிறுத்தி, ஒவ்வொரு தருணத்திலும் தன்னுடைய காமெடியை மட்டுமே அனைவருக்கும் காட்டி ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் சக போட்டியாளர்களுக்கும் என்டர்டைன்மென்ட் கொடுத்து அனைவரின் மனதிலும் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து விட்டார்.

பார்ப்பவர்களுக்கு வியப்புதான்

பார்ப்பவர்களுக்கு வியப்புதான்

எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் அதிகமாக போட்டியாளர்களுக்குள் நட்பு ,பாசம் அதிகரித்துக் கொண்டிருந்தது .கடைசி நேரத்தில் கூட ராஜு ஜெயித்ததும் அவருடன் சக போட்டியாளராக மட்டுமல்லாமல் நட்பாகவும் இருக்கும் பிரியங்கா கூக்குரலிட்டது அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுத்திருந்தது .சமூக வலைத்தளத்தில் பிரியங்கா மற்றும் ராஜு ரசிகர்கள் அதிகமாக கருத்து மோதல்களை ஏற்படுத்தி கொண்டிருக்கும் நேரத்தில் இவர்கள் இருவரும் நடந்து கொண்டது அனைவருக்கும் வியப்புதான்.

வித்தியாசமான செயல்பாடுகள்

வித்தியாசமான செயல்பாடுகள்

கமல்ஹாசன் எப்போதும் போல வழக்கமாக யார் வின்னர் என்று சொல்வதற்கு சில பில்டப் கொடுத்துக் கொண்டிருந்தாலும் இந்த முறை அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல் விரைவில் அறிவித்துவிட்டார். ஆனால் இதை இது பார்த்துக்கொண்டிருந்த ராஜுவின் முகத்தில் திடீரென்று ஒரு குழப்பம் ஏற்பட்டது. ஆனால் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்து நிலைமையை புரிந்து கொண்ட பிரியங்கா இதனை சகஜமாக எடுத்துக் கொண்டார். இதனை பார்த்ததும் ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+