அவை மரியாதை கருதி இவ்வளவு நாளா பேசல...ஆனா, கன்கஷன் ரூமில் கருத்து யாருக்கு தெரியுமா??
சென்னை: சனிக்கிழமை எபிசோடு தாறுமாறாக இருக்கும் என்று கமல் ப்ரமோவில் மிரட்டியிருக்கிறார்.
கமல் பேசிய விதத்தைப் பார்க்கும்போது இன்றைய பஞ்சாயத்து பெரிய விதத்தில் இருக்கும் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கமலுக்காக கூடும் கூட்டம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் கமல்ஹாசனின் என்ட்ரியை பார்ப்பதற்காகவே ஒரு கூட்டம் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருகிறது. என்னதான் வார நாட்களில் போட்டியாளர்கள் கண்டெண்ட் கொடுத்துக் கொண்டிருந்தாலும் அதை பற்றி அதிகம் கவலைப்படாமல் இருக்கும் ரசிகர்கள் கூட கமல் வரும் நாட்களையும் அதிகளவில் பார்த்து வருகின்றனர். இரு நாட்களிலும் அந்த வாரத்தில் நடந்த பிரச்சனைகள் அனைத்துமே பேசப்பட்டு விடுவதால் இந்த எபிசோடுகளை பார்ப்பதற்கு பல ரசிகர்கள் மிஸ் பண்ணுவதில்லை.

எபிசோடில் ஒன்றும் காணவில்லையே
பிக்பாஸ் முதல் சீசனில் இருந்து தற்போதைய சீசன் வரைக்கும் வாத்தியாராக வேலை செய்து கொண்டிருக்கும் கமல்ஹாசனின் செயல்பாடு பலருக்கும் பிடித்திருந்தாலும், ஒருசிலருக்கு அதிர்ச்சியை கொடுத்துக்கொண்டிருக்கிறது. பல நேரங்களில் ப்ரமோக்களில் மட்டும் மிரட்டல் தொணியில் பேசுகிறார். ஆனால் எபிசோட்டில் அப்படி ஒன்றுமே இல்லை என்று பலர் குறைகூறி வருகின்றனர். பிரச்சனைகள் நடந்தாலும் அதை நேரடியாக கேள்விகளை கேட்காமல் பூசி முழுகுகிற மாதிரிதான் செய்து கொண்டிருக்கிறார் என்று சிலர் கூறிக் கொண்டிருக்கன்றனர். ஆனால் ஒரு சிலர் அப்படி எல்லாம் இல்லை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல கமல் குத்தலாக பேசுகிறார் என்றும் கூறிவருகின்றனர்.

வரைமுறை இல்லாத காட்சிகள்
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அபிநவ் மற்றும் பாவனி விஷயத்தில் கமல் நடந்து கொண்டது ஒரு தலைப்பட்சமாக இருந்தது என்றும் அப்போது ராஜூவை அவர் குறை கூறியதை ரசிகர்கள் பலர் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருந்தனர். அதற்கு உதாரணமாக கமல் அடுத்தவர்களின் படுக்கை அறையை எட்டிப் பார்க்க கூடாது என்று கூறியது பலருடைய விமர்சனங்களுக்கு உள்ளானது. ஆனால் அதைத் தொடர்ந்து வரும் வாரங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வரைமுறை இல்லாமல் பல காட்சிகள் நடைபெற்று வருவது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video

மிரட்டும் கமல்
பாச மழை பெய்து ஓய்ந்தது வீட்டில், ஆனால் மழைக் கலம் முடிந்தால் வெயில் காலம் ஒன்று வரும். அவை மரியாதை கருதி சபையில் இவர்கள் மனம் நோகாதபடி இந்நாள்வரை செய்துகொண்டிருந்தேன். ஆனால் உள்ளதை உள்ளபடி இவங்களுக்கு சொல்லனும் என்றால் உள்ளே தான் போக வேண்டும். கன்கஷன் ரூமுக்கு கூப்பிடுவோமா??என்று கேள்விகளை எழுப்பி இருக்கிறார். அப்படி யாருக்கு இந்த வாரம் புத்தி சொல்ல போகிறார் என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். வழக்கம்போல பிரியங்காவை தான் கமல் டார்கெட் செய்வார் என்று ஒரு தரப்பு ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் மற்றொரு தரப்பினர் அமீர் நடவடிக்கையை பற்றி பேசுவதற்கு தான் கமல் இப்படி பேசுகிறார் என்று கூறி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications