பிக் பாஸ் தமிழ் 5:கண்கலங்கி அழுத ராஜுவின் தாய்...! அந்த நொடியிலும் ராஜுவின் செயல் !
சென்னை: பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் ராஜூ வெற்றி பெற்றதை பார்த்ததும் அவருடைய தாய் ஆனந்தக் கண்ணீர் சிந்தியுள்ளார்.
அவருடைய அம்மா அழுது கொண்டிருக்கும் போது, ராஜூ செய்த செயல் பலருடைய கருத்துக்களை பெற்றுள்ளது.

முயற்சிக்கு கிடைத்த வெற்றி
ஈன்ற பொழுதிலும் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்..என்னும் திருக்குறளின் படி தற்போது ராஜூ டைட்டில் ஜெயித்ததும் அவருடைய தாய் பெருமையில் பூரித்துள்ளார். இதுவரைக்கும் பல போராட்டங்களை சந்தித்து வந்த ராஜு தற்போது வெற்றிபெற்ற தருணத்தை தன்னுடைய தாயைப் பார்த்து தன்னுடைய மகிழ்ச்சியை வழிகாட்டியுள்ளார். பல நேரங்களில் ரசிகர்கள் மட்டுமல்லாமல் உறவினர்களும் அதிகமாக ராஜூவுக்கு சப்போர்ட் கொடுத்து இருந்ததற்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது.

அந்த ஒரு தருணம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனின் ஆரம்பத்திலிருந்து ஜெயிக்கப்போவது ராஜூதான் என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருந்தனர். அதுபடியே தற்போது நடந்து விட்டது. பிரமண்டமாக நடைபெற்ற ஐந்தாவது சீசனின் கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் முடிவுகள் ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருந்த நிலையில் ராஜூ வெற்றி பெறும் தருணத்தை பார்ப்பதற்காக பல ரசிகர்கள் விஜய் டிவியில் நிகழ்ச்சியை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் ராஜூ வெற்றி பெறும்போது தங்கள் வீட்டில் உள்ளவர்கள் வெற்றி பெற்றது போல ரசிகர்களும் கொண்டாடி வந்துள்ளனர்.

காத்திருந்த ரசிகர்கள்
வழக்கமாக ஒவ்வொரு சீசனிலும் நடப்பது போன்ற இந்த சீசனில் கிராண்ட் பினாலே லைவ்வாக நடக்கவில்லை என்றாலும், சனிக்கிழமை நிகழ்ச்சி நடைபெற்று முடிக்கப்பட்டு அந்த நிகழ்ச்சியை ஞாயிற்றுக் கிழமை ஒளிபரப்பப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இது சிலருக்கு சுவாரசியம் இல்லை என்று கூறிக் கொண்டிருந்தாலும் ராஜூ வெற்றி பெற்றது மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என்று கூறிவருகின்றனர். இந்த ஒரு தருணத்தை பார்ப்பதற்காக பலர் பொறுமையாக காத்திருந்ததாகவும் கூறிவருகின்றனர்.

இந்த நிலையிலும் இப்படியா? ?
கமல்ஹாசன் ஐந்தாவது சீசனின் வெற்றியாளராக ராஜுவை அறிவித்ததும் ராஜீவின் தாயார் கண்கலங்கியதைப்பார்த்த ராஜு அழக்கூடா...து என்று ஆறுதலையும் கிண்டலாக கூறியிருக்கிறார். இதைப் பார்த்து பலர் இப்ப கூட இப்படியா ராஜூ செய்கிறார் என்று கலாய்த்து வருகின்றனர். எந்த சூழ்நிலையிலும் தன்னுடைய காமெடியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் ராஜு, உணர்ச்சி பூர்வமான இவ்வளவு நாள்கள் இந்த ஒரு தருணத்திற்காக போராடிக்கொண்டிருந்த நேரத்திலும் இவருடைய நக்கல் நையாண்டி தனம், தனி தான் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications