பிக்பாஸ் அல்டிமேட்: தவறை சரி செய்ய நினைத்த பாலா.. மீண்டும் பற்றவைத்த சுரேஷ் சக்கரவர்த்தி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் நான்காவது சீசனில் தான் செய்த தவறை அல்டிமேட்டில் சரி செய்ய நினைத்துக்கொண்டு பாலா செய்த செயல் தற்போது வீணாகப் போய்விட்டது.

சுரேஷ் சக்கரவர்த்தி பற்றவைத்த வார்த்தைகளால் மீண்டும் பாலா பழைய நிலைக்கு திரும்பியுள்ளார்.

மீண்டும் அல்டிமேட்டில் அறிமுகம்

மீண்டும் அல்டிமேட்டில் அறிமுகம்

பிக்பாஸில் ஒன்று முதல் ஐந்து சீசன்களில் கலந்துகொண்டு ரசிகர்கள் பலரையும் கவர்ந்த போட்டியாளர்கள் மீண்டும் இந்த அல்டிமேட் நிகழ்ச்சியில் அறிமுகமாகி இருந்தாலும் இவர்கள் இழந்த பெயரை மீண்டும் பெறுவார்களா?? அல்லது இருக்கும் பெயரை கெடுத்துக் கொள்வார்களா என்று தான் எண்ணத் தோன்றுகிறது என்று சில ரசிகர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் தான் தற்போது இன்றைய மூன்றாவது ப்ரோமோ பலருக்கும் வியப்பை கொடுத்திருக்கிறது. ஏற்கனவே பாலாஜி முருகதாஸ் நான்காவது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு தன்னுடைய கோபம் மற்றும் எதற்கும் அலட்டிக்கொள்ளாத கேரக்டரால் பல பேருடைய நல்ல மதிப்பையும் பல பேருடைய நெகட்டிவ் அபிப்பிராயங்களையும் பெற்ற பாலாஜி மீண்டும் இந்த நிகழ்ச்சியில் அறிமுகமாகியிருக்கிறார்.

தாடி பாலாஜி கேட்ட கேள்வி

தாடி பாலாஜி கேட்ட கேள்வி

பாலாஜி முருகதாஸை போலவே சுரேஷ் சக்கரவர்த்தியும் அவருடன் நான்காவது சீசனில் அறிமுகமானவர்தான். இவர் அடிக்கடி பற்ற வைக்கிறேன் என்று என்கிற பெயரில் பலருடைய சுய ரூபங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர். அந்த வகையில் தற்போது இவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருப்பதால் என்ன மாதிரி பிரச்சனைகள் நடக்கும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருந்தது. தற்போது அப்படித்தான் நடந்திருக்கிறது. இன்று நடந்து கொண்டிருக்கும் புது டாஸ்க்கில் பாலாஜி முருகதாஸிடம், தாடி பாலா, பாலா அமைதியானவரா அல்ல அடங்காதவறா என்று கேள்வியை எழுப்பியிருக்கிறார். அதற்கு பாலாஜி முருகதாஸ் நான் பெர்பெக்ட் என்று காட்ட விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார்.

வெடித்த புது பிரச்சனை

வெடித்த புது பிரச்சனை

தாடி பாலாஜியின் கேள்விக்கு பாலாஜி முருகதாஸ் ,என்னை பர்ஃபெக்ட் என்று காட்ட விரும்பியிருந்தால் நிறைய இடத்துல என்ன செருப்பால அடிச்சதையே..., தறுதல என்று திட்டியதையோ...என்று பேசிக் கொண்டிருக்கிறார். அதற்கு இடையில் சுரேஷ் சக்கரவர்த்தி தறுதலை என்பது கெட்ட வார்த்தையா!!?? இப்ப நம்புறீங்களா!!?? அது கெட்ட வார்த்தை என்று...கேள்வியை எழுப்பியிருக்கிறார். ஏற்கனவே நான்காவது சீசனில் இந்த தறுதலை என்கிற வார்த்தை பெரிய பஞ்சாயத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் அது பஞ்சாயத்து ஏற்படுத்துமா?? என்று பாலாஜி முடிவெடுத்து விட்டார் போல. அதனால் இந்த கொளுத்தி போடற வேலை எல்லாம் என்கிட்ட வேண்டாம் என்று சுரேஷ் சக்கரவர்த்திக்கு மிரட்டல் விடுத்து கொண்டிருக்கிறார்.

வார்த்தை வினை ஆகிடுச்சி

வார்த்தை வினை ஆகிடுச்சி

யார்ரா. ..கொளுத்திப் போட்டது என்று சுரேஷ் சக்கரவர்த்தியும் வீராப்போடு பாலாஜியிடம் பேசிக்கொண்டிருக்கிறார். பண்றதெல்லாம் பண்ணிட்டு என் மேல குத்தம் சொல்றாங்க என்று தன்னுடைய பாணியில் அவர் பேசிக் கொண்டிருக்கிறார். அவங்க பேசிகிட்டு இருந்தா நாங்க கேட்டுக்கிட்டு இருப்போமா என்று வாய் ஓயாமல் சுரேஷ் சக்ரவர்த்தி கூறிவருகிறார். அதுமட்டுமல்லாமல் இந்த வாரமே நான் வெளியே போனாலும் எனக்கு கவலை இல்லை என்று கூறியிருக்கிறார். அப்போது தாடி பாலாஜி, அண்ணே....சுரேஷ் அண்ணே..விடுங்க, என்று கூறியதும் தன்னுடைய கோபத்தை தாடி பாலாஜி இடம் சுரேஷ் சக்கரவர்த்தி காட்டத் தொடங்கிவிட்டார். எவனாவது விட்டுவிடு என்று சொன்னால் ஒன்னு விடுவேன் என்று சுரேஷ் சக்கரவர்த்தி சொன்னதும், தாடி பாலாஜி அமைதியாகிவிட்டார். இந்த கலவரத்தை பார்க்கும்போது ரசிகர்கள் திருந்திய பாலாவை மீண்டும் பழையபடி மாற்ற நினைச்சுக்கிட்டு இருக்காரா?? சுரேஷ் சக்கரவர்த்தி என்று கேள்விகளை எழுப்பி இருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+