இவங்க தான் பிக்பாஸ் மன்மதராசா, கிளியோபாட்ராவா??.. இது உங்களுக்கே ஓவரா தெரியலையா?
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தற்போது கொடுக்கப்பட்டு வரும் பட்டங்கள் ரசிகர்களை கலாய்க்க வைத்திருக்கிறது.
நீ யார் என்று எனக்கு தெரியும் எனும் டாஸ்க்கில் சக போட்டியாளர்களுக்கு தேர்ந்தெடுத்துக் கொடுக்கும் பட்டங்களால் சமூக வலைத்தளத்தில் பல மீம்ஸ்கள் உருவாகி வருகிறது.

ஒரே புகழ்ச்சி மழை தான்
பிக்பாஸ் அல்டிமேட் வீட்டுக்குள் போட்டியாளர்களின் கேரக்டருக்கு தகுந்த மாதிரி போட்டியாளர்கள் பட்டங்களை கொடுத்து வேற லெவல் என்டர்டைன்மென்ட் செய்து வருகிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியை போன்றே பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் ஒவ்வொரு டாஸ்க்கிலும் போட்டியாளர்களுக்கு பிரச்சனைகளையும் கலகலப்பு களையும் ஏற்படுத்தி விட வேண்டும் என்பதில் கவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கி ஐந்து நாட்கள் அழுகை சீன்களும் சண்டை சச்சரவுகளும் இருந்த நிலையில் இன்று புகழ்ச்சி மழையாக இருக்கிறது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இதுவரைக்கும் ஒளிபரப்பான ஐந்து சீசன்களிலும் கலந்துகொண்ட 17 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களுக்கு என்டர்டைன்மென்ட் கொடுத்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருவதால் ரசிகர்கள் அதிகமானோர் தொடர்ந்து நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் போனாலும் இதில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகள் ஒரு மணி நேரம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இது ரசிகர்களுக்கு ஆறுதலான செய்தியாக இருந்தாலும், விஜய் டிவியில் ஒளிபரப்பவில்லை என்பது பலருடைய குமுறலாக இருந்து வருகிறது.

இவர்தான் மன்மத ராசாவாம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடப்பது போல இங்கேயும் தினமும் டாஸ்க் நடந்து கொண்டிருக்கிறது. தற்போது நீ யார் என்று எனக்கு தெரியும் எனும் டாஸ்க்கில் இரண்டாவது பாகம் தொடங்கி நடந்து வருகிறது. அதில் சக போட்டியாளர்களுக்கு தங்கள் மனதில் அவர்களைப்பற்றிய எண்ணங்களுக்குத் தகுந்த பட்டங்களை போட்டியாளர்கள் அளித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த வீட்டில் அனைவருடைய மனதையும் கவர்ந்த மன்மத ராசா என்று நிரூப்க்கு போட்டியாளர்கள் பட்டம் கொடுத்திருக்கின்றனர். ஏற்கனவே பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் ஆரம்பமாகி பலருடைய கிரஷ்ஷாக வலம் வந்து கொண்டிருக்கும் நிரூப்க்கு இந்த பட்டம் கொடுத்தது வியப்பாக இல்லை என்றாலும் அபிராமியின் முகத்தைக் கவனித்த ரசிகர்கள் அதை அப்படியே மீம்ஸ்களில் வைத்து கலாய்த்து வருகிறார்கள்.

அடுத்த கிளியோபாட்ரா
நிரூப்க்கு மன்மத ராசா பட்டத்தைக் கொடுத்தது போல அவருடைய முன்னாள் காதலியான அபிராமிக்கு கிளியோபாட்ரா பட்டத்தை கொடுத்து இருக்கின்றனர். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை என்று இவர்கள் நிரூபித்து காட்டுகிறார்கள் போல, ஒரே வீட்டுக்குள் இவர்கள் செய்யும் அக்கப்போரு தாங்க முடியவில்லை. என்றெல்லாம் விதவிதமாக கலாய்த்து வருகிறார்கள். ஆனாலும் ஒருவருக்கு பட்டம் கொடுக்கும்போது குளோசப்பில் மற்றொருவரை காட்டுவது ஓவர் என்று பிக் பாஸையும் ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications