பிக்பாஸ் அல்டிமேட்: அப்போ அப்படி பேசிய தாமரையா, இப்போ இப்படி பேசுவது...இப்படி மாறிவிட்டாரே
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் இந்நிகழ்ச்சியில் தாமரைச்செல்வி பேசிய வார்த்தைகள் ரசிகர்களை குழப்பமடைய செய்துள்ளது.
ஐந்தாவது சீசனில் தாமரை செல்வி இருக்கும்போது பேசிய வார்த்தைகளுக்கும் தற்போது பேசிய வார்த்தைகளுக்கும் இவ்வளவு முரண்பாடா என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி இருக்கின்றனர்.

மீண்டும் களம் இறங்கிய தாமரைச்செல்வி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.இதில் ஒவ்வொரு பிக் பாஸ் சீசன் களிலும் கலந்துகொண்ட ரசிகர்களின் மனம் கவர்ந்த போட்டியாளர்கள் தான் இதில்
அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகின்றனர். அந்த வகையில் பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் கிராமத்திலிருந்து வந்து அதிக அளவில் ரசிகர்களை கவர்ந்து போட்டியாளர்களை ஆட்டம் காண வைத்த தாமரை செல்வியும் ஒரு போட்டியாளராக அறிமுகமாகியிருக்கிறார். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இவர் மீண்டும் அறிமுகமானதும் இவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

நாடகத்துறையின் சார்பாக விளையாட்டு
முதல்முறையாக பிக் பாஸ் 5 வது சீசனில் தாமரைச்செல்வி கலந்து கொள்ளும்போது அந்த அளவிற்கு பிரபலமாகாமல் இருந்த இவர் தற்போது பட்டிதொட்டியெலலாம் பிரபலமாகிவிட்டார். ஐந்தாவது சீசனில் தன்னைவிட அனுபவம் நிறைந்த பல போட்டியாளர்களையும் தாமரைச்செல்வி அலற வைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் ரசிகர்களின் மனதில் தனக்கென்று தனி இடத்தையும் பிடித்து விட்டார். தான் இந்த நிகழ்ச்சியில் கடைசி வரைக்கும் இருந்தாலே போதும் தன்னுடைய நாடகத்துறையில் சார்பாக தான் விளையாடுவதாக வும் தன்னுடைய வெற்றி முழுக்க நாடகத்துறையின் வெற்றியாக கருதப்படும் என்றும் கூறிவந்தார்.

பயன்படுத்தாத பணப்பெட்டி
ஐந்தாவது சீசனில் தாமரைச்செல்விக்கு அனைத்து போட்டியாளர்களுமே ஆதரவு கொடுத்து அவருக்கு விளையாட்டையும் சொல்லிக் கொடுத்து வந்தனர். இந்த நிலையில் 12 லட்சம் பணம் இருக்கும் பணப்பெட்டி டாஸ்க் வந்தபோது கூட அதை எடுத்துக்க சொல்லி அனைத்து போட்டியாளர்களும் இவரிடம் அட்வைஸ் செய்து கொண்டிருந்தனர். ஆனால் தான் கோடி ரூபாய் கொடுத்தாலும் விளையாட்டை விட்டு வெளியேற மாட்டேன். அதை எடுக்க மாட்டேன். நான் கடைசி வரைக்கும் விளையாட்டில் விளையாடி தான் ஜெயிப்பேன் என்று விடாப்பிடியாக இருந்தார். அப்போது இவருடன் பாசமாகவும், நட்பாகவும் இருந்த நிரூப் கூட ஏற்கனவே இதை கூறியிருந்தார். ஆனால் தற்போது ஒளிபரப்பாகி வரும் அல்டிமேட் நிகழ்ச்சியல் இந்த ஒரு செயலைப் பற்றி தாமரைச்செல்வி பேசியுள்ளார்.

குழப்பத்தை ஏற்படுத்திய ஜோசியம் டாஸ்க்
அல்டிமேட் நிகழ்ச்சியில் தற்போது ஜோசியம் சொல்லும் டாஸ்க் நடைபெற்று வருகிறது. அதில் நிரூப் கையைப் பார்த்து தாமரைச்செல்வி ஜோசியம் சொல்லி வருகிறார். அதில் அந்த 12 லட்சம் நான்தான் எடுக்க விடாம பண்ணினா?? என்று நிரூப் கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு அதை எடுக்கிறது ஜெயிக்கிற மாதிரி தானு சொல்லல நீ, என்று நினைத்து நான் பீல் பண்ணினேன். அதுமட்டுமல்லாமல் நீ உன் மேல பாசம் காட்டுறவங்கள நம்பாம மத்தவங்கள தான் நம்புவாய் என்றும் கூறியிருக்கிறார். இதை கேட்டதும் ரசிகர்கள் அப்போது தாமரைச்செல்வி இடம் அனைவரும் பணத்தை எடுக்க சொல்லி சொன்னபோது எடுக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு, இப்போ அதை நினைச்சு பீல் பண்ணினேன் என்று சொல்கிறாரே இதில் எது நிஜம் என்று கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications