குக் வித் கோமாளியில் திடீர் குழப்பம்.. செஃப் முகத்தில் துப்பிய கிரேஸ்.. என்ன இப்படி ஆகிவிட்டது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: குக் வித் கோமாளியில் தற்போது நடந்த டாஸ்க்கில் யாரும் எதிர்பார்க்காத நிகழ்வுகள் நடந்துள்ளது.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்லும்விதமாக தான் தற்போது இந்த நிகழ்ச்சியில் செயல்கள் இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

 சுவாரஸ்யம் அதிகரிப்பு

சுவாரஸ்யம் அதிகரிப்பு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு சில நிகழ்ச்சிகள் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விடுகிறது. அந்த வகையில் ரசிகர்கள் பலருக்கும் பிடித்த மற்றும் ரசிக்கும் நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்து வருகிறது. என்னதான் மன கவலைகள் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியை பார்த்தாலே மனம் லேசாகி விடுகிறது என்பது பலருடைய கருத்தாக இருந்து வருகிறது. இதில் கோமாளிகளும், குக்குகளும் சேர்ந்து செய்யும் செயல்கள் பலரையும் கவர்ந்திருக்கிறது .இதனால் தான் இந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசன் முடிவடைந்தாலும் அடுத்தடுத்த சீசன் எப்போது தொடங்குவார்கள் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

மொத்த போட்டியாளர்கள்

மொத்த போட்டியாளர்கள்

காமெடி, கலாட்டா, நட்பு, காதல் என எல்லா வகையான கண்டென்ட் கிடைக்கிற ஒரு இடமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருக்கும் காரணத்தினால் அந்த நிகழ்ச்சி இவ்வளவு வெற்றி அடைகிறது. தற்போது இந்த நிகழ்ச்சி மூன்றாவது சீசனில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இதில் பழைய கோமாளிகள் பாலா, சிவாங்கி, மணிமேகலை,சக்தி, சுனிதா ஆகியோரும் புதிய கோமாளிகளாக குரோஷி, பரத், சீத்தல், அதிர்ச்சி அருண், மூக்குத்தி முருகன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர் புதிய குக்காக கிரேஸ் கருணாஸ், மனோபாலா, ரோஷினி, வித்யூலேகா, சந்தோஷ் பிரதாப், அம்மு அபிராமி, ராகுல் தாத்தா மற்றும் தர்ஷன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

 கரும்பு தின்ன கூலியா

கரும்பு தின்ன கூலியா

குக் வித் கோமாளியில் ஒவ்வொரு வாரமும் கலகலப்பு குறையாமல் இருந்தாலும், இந்த வாரம் பக்கெட் பிரியாணி திருவிழா நடைபெற்று இருக்கிறது. இதில் தங்களுக்கு கொடுக்கும் பிரியாணியை 15 நிமிடங்களுக்குள் எந்த அணியினர் விரைவில் சாப்பிட்டு முடிக்கின்றனரோ அவர்கள்தான் இந்த ரவுண்டின் வின்னர் ஆக தேர்வு செய்ய படுகிறீர்கள் என்று வெங்கடேஷ் பட் தெரிவித்துள்ளார். டாஸ்க் தொடங்கப்பட்டதும் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பிரியாணியை வெறிகொண்டு சாப்பிட்டு வருகிறார்கள். கரும்பு தின்ன கூலியா வேணும் என்று சொல்வது போலத்தான் இந்த வார டாஸ்க் இருந்து வருகிறது.

இப்படி ஆகிவிட்டதே

இப்படி ஆகிவிட்டதே

குக் மற்றும் கோமாளி இருவரும் மாற்றி மாற்றி சாப்பாட்டை வாயில் திணித்த படி அள்ளி முழுங்கிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பாலாவுக்கு ஜோடியாக இந்த வாரம் கிரேஸ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் கிரேஸ் பாலாவின் வாயில் சாப்பாட்டை அள்ளி திணித்துக் கொண்டு இருக்கிறார். அப்போது அக்கா கொஞ்சம் இந்த காதுலயும் சாப்பாடை ஊட்டு என்று அவருக்கே உரிய பாணியில் கலாய்த்து கொண்டிருக்கிறார். அவரை தொடர்ந்து சாப்பிடும்போது கிரேஸ் வாயில் பாலா சாப்பாடை தன்னால் முடிந்த அளவிற்கு அள்ளி திணிக்கிறார். அதனால் அளவுக்கு அதிகமானதும் கிரேஸ் அருகிலிருந்த செஃப் தாமு மீது துப்பி இருக்கிறார். இதைப் பார்த்ததும் ரசிகர்கள் இது கிரேஸ் அக்காவுக்கு எத்தனை நாள் பகையோ தெரியவில்லை. தாமுக்கு சிறப்பான அபிஷேகம் செய்து விட்டார் என்று கலாய்த்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+