'நீங்க என்ன சொன்னாலும் கேட்டுனு இருக்க நான் அவர் அல்ல' - வெறுப்பாகி வெங்கடேஷ் பட் வெளியிட்ட பதிவு
சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் வெங்கடேஷ் பட் வெளியிட்ட பதிவு பலரையும் வியப்படையச் செய்துள்ளது.
இதுவரைக்கும் ஜாலியாக பார்த்து வந்த வெங்கடேஷின் மறுபக்கம் இவ்வளவு ஆக்ரோஷமாகவும் இருக்குமா என்பது வியப்புதானாம்.

மனக்கவலையை குறைக்கும் நிகழ்ச்சி
ரசிகர்கள் பலரால் அதிகமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூன்றாவது சீசன் கோலாகலமாக ஒரு சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. முதல் சீசனில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து இரண்டாம் சீசனுக்கும் எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது. தற்போது மூன்றாவது சீஸனில் இது அடியெடுத்து வைத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு இதில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் ஒரு பக்கம் என்றால் கோமாளிகள் தான் அதிகமாக ரசிகர்களை கவர்ந்துள்ளனர். கோமாளிகள் செய்யும் சேட்டைகளை பார்ப்பதற்காகவே பல ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர். மனக் கவலையை குறைக்கும் நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி இருந்து வருகிறது.

யூடியூபில் சமையல் நிகழ்ச்சி
ஒவ்வொரு சீசனிலும் இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் மாறிக் கொண்டிருந்தாலும், இதில் மாற்றம் அடையாமல் இருப்பது நடுவர்கள் ஆகிய செஃப்ஸ் மட்டும்தான். இதில் நடுவர்களாக செஃப் தாமு, மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் இருவரும் இருந்து வருகின்றனர். இதில் வெங்கடேஷ் பட் இதுவரைக்கும் பல டிவி சேனல்களில் தன்னுடைய சமையல் திறமையின் மூலமாக கலக்கிக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் யூடியூப் சேனல்களிலும் தன்னுடைய சமையலை பலருக்கும் பகிர்ந்து வருகிறார்.

ரசிகர்கள் கூறிய அந்த வார்த்தை
இவர் எத்தனையோ ஹோட்டல்கள் வைத்து இருந்தாலும் இவருடைய யூடியூப் மூலமாக செய்யும் சமையல்கள் ரசிகர்களின் மத்தியில் நல்ல மதிப்பைப் பெற்று வருகிறது. அது போல ஒரு சில நேரங்களில் நெகட்டிவ் கமெண்ட்களையும் பெற்று வருகிறது. அந்த மாதிரிதான் தற்போது இவர் கடைசியாக வெளியிட்ட உண்ணியாப்பம் வீடியோவில் அதிகமாக நெய் சேர்த்து இவர் சமையல் செய்வதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு அட்வைஸ் கொடுத்திருக்கிறார்கள். இந்த மாதிரி நெய் சேர்த்தால் உடல் நலத்திற்கு கேடு என்றும் இதே நெய் அளவை நாங்கள் எங்கள் வீட்டில் ஒரு வாரத்திற்கு மேலாக பயன்படுத்தி விடுவோம் என்றெல்லாம் கூறி இருக்கின்றார்கள்.

செஃப் வெங்கடேஷின் பதில்
தொடர்ந்து நெகட்டிவ் கமெண்ட் வருவதால் கடுப்பான வெங்கடேஷ் பட் , முறை தவறாமல் கருத்து சொல்பவர்களிடம் நான் எப்போதும் நாகரீகம் தவறுவது இல்லை. ஆனால் ஏளனமாக என்னை தெரிந்தவர் போல நகையாடினால் நான் புத்தன் அல்ல... என் கருத்து உங்களுக்கு திமிர் என்றால் நான் பொறுப்பல்ல. யார் என்ன சொன்னாலும் கேட்டுக் கொண்டு இருக்க நான் ஒரு சூழ்நிலை கைதி அல்ல, உம்மை போல் எல்லா உரிமையும் உள்ள சராசரி மனிதன் பதில் கொடுக்க எனக்கு உரிமை உண்டு என்று கூறியுள்ளார். இதை பார்த்ததும் பல ரசிகர்கள் இவருக்கு ஆதரவாகவும் கமெண்ட்டுகளை கொடுத்து வருகின்றனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications