சின்மயி பற்றி உண்மையை சொல்ல போறேன்! 2 நாள் தான் டைம்! பதிவுக்கு பின் இருக்கும் மர்மம்! - மோகன் ஜி
சென்னை: இயக்குனர் மோகன் ஜி இயக்கிய திரௌபதி 2 படத்தில் எம்கோனா பாடலை பாடியதற்காக சின்மயி மன்னிப்பு கேட்டிருந்தார். இதனால் கோபமான மோகன் ஜி செய்தியாளர்களை சந்தித்து ஆதங்கத்துடன் பேசி இருக்கிறார். அதில் சின்மயி அந்த பதிவை நீக்க இரண்டு நாள் டைம் கொடுத்து இருக்கிறார்.
திரௌபதி 2 படத்தில் பாடியதற்காக சின்மயி தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அதில், ஜிப்ரானை எனக்கு பல வருடங்களாக தெரியும். அவர் ஸ்டுடியோவில் இருந்து என்னை பாட அழைத்த போது அங்கு சென்று பாடிவிட்டு வந்தேன். அப்போது அங்கு ஜிப்ரான் இல்லை. இப்போதுதான் எல்லாம் புரிய ஆரம்பிக்கிறது... இந்த இயக்குனரின் படம் என்று முன்பே தெரிந்திருந்தால் ஒருபோதும் அந்த பாடலை பாடி இருக்க மாட்டேன்.

அந்த கொள்கைக்கு எனக்கும் நிறைய முரண்பாடு உள்ளது. இதுதான் உண்மை என்று அந்த பதிவில் சின்மயி குறிப்பிட்டு மன்னிப்பு கோரி இருந்தார். இது பெரிய அளவில் பேசப்பட்டது. இயக்குனர் மோகன் ஜி இயக்கிய பழைய வண்ணார்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசுரன் போன்ற படங்கள் வரிசையில் இப்போது திரௌபதி 2 படமும் வெளியாக இருக்கிறது.
இதனால் சின்மயி பாடல் பாடிய வெளியான சமயத்தில் சின்மயியை டேக் செய்து அதிகமான கமெண்ட்டுகள் வந்தது. அப்போதுதான் சின்மயி மேலே சொன்ன பதிவை வெளியிட்டு இருந்தார். இதனால் இயக்குனர் பேரரசு உட்பட ஒரு சில இயக்குனர்களும் மோகன் ஜிக்கு ஆதரவாக பேச தொடங்கினர். சின்மயி இந்த படத்தில் பாடும்போது கதை கேட்காமலா பாடினார்? ஒருவர் ஒரு படத்தில் பாடப் போகிறார் என்றால் அந்த படத்தில் இயக்குனர் யார்? என்ன கதை என்று கேட்காமல் யாரும் பாட மாட்டார்கள்.
பணத்தை வாங்கி கொண்டு பாடிவிட்டு, நான் இந்த படத்தில் பாடியது தப்பு என்று இயக்குனரை அசிங்கப்படுத்தி இருக்கிறார். இதனால் அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பேசி இருந்தனர். நிலைமை இப்படி இருக்க, மோகன் ஜி சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது என்னுடைய திரௌபதி 2 படம் ஜனவரி மாதத்தில் வெளியாக இருக்கிறது. இறுதி கட்டத்திற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த படம் வெளியாகும் சமயத்தில் நான் இனி செய்தியாளர்களை சந்திக்க வேண்டும். அந்த சூழ்நிலையில் சின்மயி மேடம் போட்ட போஸ்ட் பற்றிய கேள்விகள் என்னை துரத்தும். அதனால் அதற்கு முன்பு அந்த பதிவு வெளியிட்டது எதற்காக என்று சின்மயி ஒரு விளக்கம் கொடுக்க வேண்டும். அது எங்களுக்கு திருப்தியாக இருந்தால் ஓகே இல்லை என்றால் அந்த பதிவை அவர் கண்டிப்பாக நீக்க வேண்டும்.
அவருக்கு எதிராக நாங்கள் புகார் கொடுத்திருக்கிறோம். எனக்கு சின்மயியை பர்சனல் ஆக ரொம்பவும் பிடிக்கும். அவங்க ரொம்ப தைரியமானவங்க ஆனால் இப்போ அவர் போஸ்ட் போட்டதற்கு காரணம் அவரே இல்ல. அவருக்கு பின்னால் இருந்து கொடுக்கப்பட்ட அழுத்தம் தான். அதை என்னால் சொல்ல முடியும். ஆதாரத்துடன் நான் நிரூபிக்கவும் முடியும். அவர் இரண்டு நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லை என்றால் அந்த பதிவை நீக்க வேண்டும்.
அவருடைய முடிவுக்காக நான் காத்திருக்கிறேன் எனக்கு அந்த படத்தில் சின்மயி பாடிய பாடல் குரலுக்கு பதிலாக இன்னொருவரை வைத்து பாடலை வெளியிட முடியும். ஆனால் நான் அதுபோல செய்ய விரும்பவில்லை என்று மோகன் ஜி பேசியிருக்கிறார்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு












Click it and Unblock the Notifications