புருஷன் ஜெயிலில் இருக்கும் போது மனைவி செய்கிற வேலையா? எதிர்நீச்சல் ஈஸ்வரியை கலாய்க்கும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் கதாநாயகியாக ஈஸ்வரி கேரக்டரில் நடித்து வரும் கனிஹாவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

சீரியல் மட்டும் அல்லாமல் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருக்கும் ஹனிகாவின் செயலைப் பார்த்து ரசிகர்கள் ஜொள்ளு விடுகின்றார்கள்.

சீரியலில் தான் அமைதியும் சொரூபம் என்பதை இப்போது நன்றாக புரிந்து விட்டது என்று கமெண்ட்களை நிரப்புகிறார்கள்.

ரசிகர்களை கவர்ந்த சீரியல்

ரசிகர்களை கவர்ந்த சீரியல்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல ஒரு இடத்தை பிடித்து விட்டது. ஒளிபரப்பாகி ஒரு சில வாரங்கள் மட்டுமே ஆன நிலையில் இந்த சீரியலுக்கு இவ்வளவு மவுசு இருக்கும் என்பதை தற்போது சமூக வலைத்தளம் மூலமாக பார்க்கும் பலரும் பகிர்ந்து கொண்டுள்ளனர். தொடர்ந்து பார்க்காத சீரியல் ரசிகர்கள் கூட இந்த சீரியலின் ப்ரோமோவை பார்த்து இதுவும் நன்றாக தானே இருக்கிறது என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகைகள் தற்போது மறுபிரவேசம் எடுத்திருப்பதாக இவர்களுடைய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சீரியலின் கதை

சீரியலின் கதை

எதிர்நீச்சல் சீரியல் பெண்களின் அடிமைத்தனத்தை பற்றியதாக இருந்து வருகிறது. கூட்டு குடும்பமாக இருக்கும் அண்ணன் தம்பிகள் தங்களுடைய மனைவிகளை எப்படி அடிமைகளாக நடத்துகிறார்கள். அவர்களுடைய சுய கவுரவத்திற்காக தங்களுடைய மனைவிகள் வீட்டில் அடிமைகளாக நடத்தி வருகிறார்கள். இதில் பெண்கள் தங்கள் உரிமைகளை பெற்று எப்படி சமூகத்தில் வாழ போகிறார்கள் என்பதை குறித்து இந்த சீரியல் இருந்து வருவதாக இயக்குனர் கூறி இருக்கின்றார். இந்த சீரியலில் மூத்த மருமகளாக நடிகை ஹனிகா ஈஸ்வரி கேரக்டரில் நடித்து வருகிறார்.

அனுதாபத்தை பெற்ற கேரக்டர்

அனுதாபத்தை பெற்ற கேரக்டர்

வெள்ளி திரையில் கதாநாயகியாக நடித்து வந்த கனிஹா தற்போது சின்ன திரையில் அறிமுகமாகி இருப்பது அவருடைய ரசிகர்கள் மத்தியில் ஆரம்பத்தில் அதிர்ச்சியாக இருந்தாலும் இதுவும் நல்ல முடிவு தான் என்று பலர் கூறி வருகிறார்கள். அஜித் மாதவன் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்த கனிஹா தற்போது சீரியலில் நடிகர் மாரிமுத்து உடன் ஜோடியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் தன்னுடைய கணவரான குணசேகரனை எதிர்த்து பேசாத அமைதியான கேரக்டராக அனைவரிடமும் அனுதாபத்தை பெற்று வருகிறார்.

இப்படி பண்ணலாமா ஈஸ்வரி

இப்படி பண்ணலாமா ஈஸ்வரி

தற்போது சீரியலின் கதை படி குணசேகரின் மகளின் சடங்கு பங்க்ஷன் நடைபெற்று வருகிறது. தன்னுடைய மகளுக்கு எங்கேஜ்மெண்டை முடித்திருந்த குணசேகரன் தற்போது குழந்தை திருமணம் செய்ய முயற்சிப்பதற்காக காவல் நிலையத்தில் இருந்து வருகிறார். இந்த நிலையில் கனிஹா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடற்கரையில் ஹாயாக எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் புருஷன் ஜெயிலில் இருக்கும்போது மனைவி இப்படியா? அரைகுறை உடையோடு கடற்கரையில் சுற்றுவது என்று கிண்டல் செய்து வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் இந்த புகைப்படங்களையும் பலர் பகிர்ந்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+