எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் தான் வில்லனாக இருக்கிறார். இப்போது அவருக்கே வில்லனாக ராணா என்ற ராவணன் அறிமுகமாகி இருக்கிறார். அவர் யார்? இதற்கு முன்பு நடித்த சீரியல்கள் பற்றிய தகவல் தான் வெளியாகி இருக்கிறது.

எதிர்நீச்சல் சீரியல்
சில வருடங்களுக்கு முன்பு ஆண்களையே சீரியல் பார்க்க வைத்த பெருமை எதிர்நீச்சல் சீரியலுக்குத்தான் உண்டானது. அந்த சீரியல் மூலமாக பலர் சின்னத்திரையை நோக்கி வந்தனர். ஆனால் இப்பொழுது நிலைமை மாறிவிட்டது. எதிர்நீச்சல் சீரியலுக்கு இருந்த ஹைப் அந்த சீரியலின் இறுதியில் இல்லாமல் போய்விட்டது. தொடர்ந்து வில்லனே வெற்றி பெறுவதும் பெண்கள் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போவதும் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தன.
முடிக்கப்பட்ட சீரியல்
அதனாலயே திடீரென எதிர்நீச்சல் சீரியல் இழுத்து மூடப்பட்டது. ஆனாலும் இரண்டாவது சீசன் தொடங்கப்பட்டது. இப்போதாவது மக்களுக்கு பிடித்த மாதிரி கதை இருக்குமா என்ற ஆர்வத்தோடு ஒவ்வொரு வாரமும் இந்த சீரியலையும் பார்த்து வருகின்றனர். ஆனால் வழக்கம் போல இந்த சீரியலில் வில்லன் மட்டும்தான் எப்போதும் ஜெயித்துக் கொண்டே இருக்கிறார். ஆனால் இப்போது கதையில் கொஞ்சம் மாற்றம் வந்திருக்கிறது.
எதிர்நீச்சல் வில்லன்
வல்லவனுக்கு வல்லவன் இந்த வையகத்தில் உண்டு என்ற பழமொழிக்கு ஏற்ப இப்போது இந்த சீரியலில் மிரட்டல் வில்லனாக இருக்கும் குணசேகரனுக்கு வில்லனாக ராணா வந்திருக்கிறார். தன்னுடைய அப்பாவின் இரண்டாவது மனைவியான ராணாவின் அம்மாவை ராணா சின்ன பையனாக இருக்கும்போதே அவர் கண் முன்னே குணசேகரன் குத்தி கொலை செய்து இருப்பார். அப்போது குணசேகரனிடமிருந்து ராணா மட்டும் தப்பித்திருப்பார்.

இதனால் ராணா எப்போ இந்த சீரியலுக்கு வருவாரு? அவர் வந்த பிறகு குணசேகரன் ஆட்டம் அடங்குமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர். இந்த நிலையில் தான் இப்போது குணசேகரனை அடக்க ராணா என்ட்ரி கொடுத்திருக்கிறார். ஈஸ்வரி ஹாஸ்பிடலில் இருந்து வந்த பிறகு குணசேகரன் மனம் திருந்தியது போல இருக்கிறார்.
- தர்மபுரியில் மாறுது கணக்கு! சௌமியா அன்புமணியை அதிரவைத்த ராமதாஸின் அந்த ஒரு முடிவு! பலே
- வாஷிங் மெஷின் வாங்க ரூ.8000! அடமானமில்லா 5 லட்சம் கடன்! வைரலாகும் திமுக கனிமொழியின் முதலீடு தந்திரம்
- தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான்
- லீமா ரோஸ் எனும் விஷ விதை.. பாஜக கண்ணை காட்டுனா போதும்! அதிமுக அவர் கையில்.. குண்டை போட்ட அதிமுக மாஜி
- 1000 சவரன் தங்க நகை, மகளுக்கு கடன்! விஜய்யின் சொத்து பத்திரத்தில் முரண்பாடு? திமுக புள்ளி கூறுவதென்ன
எதிர்நீச்சல் ராணா பயோகிராபி
இந்த நேரத்தில் ராணா என்ற ராவணன் வந்திருக்கிறார். இதனால் இவர் யார் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த கேரக்டரில் நடிக்கும் நடிகரின் பெயர் அஸ்வின் தான். இவர் கோயம்புத்தூரை சேர்ந்தவராம் சின்ன வயதில் இருக்கும்போதே நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததால் காலேஜ் முடித்ததும் சில விளம்பரங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார். மாடலிங் மூலமாக பலருக்கும் பரீட்சையமானவர் வசந்த் அண்ட் கோ உட்பட பல விளம்பரங்களிலும் நடித்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் 2 படத்திலும் ஒரு சின்ன கேரக்டரில் நடித்து இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சில ஷார்ட் பிலிம்களிலும் நடித்திருக்கிறார். அதுபோல ஐந்தாம் வேதம் என்ற வெப் சீரிஸிலும் நடித்திருக்கிறார். இவர் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக இருக்கிறார். இந்த நிலையில் இப்போது இந்த எதிர்நீச்சல் சீரியலில் ராணா களம் இறங்கி இருப்பது இந்த சீரியலில் என்ன மாதிரி கதையை கொண்டு போகப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே













Click it and Unblock the Notifications